2022-23 பெரும்போகத்தில், நாட்டில் அதிக நெல் அறுவடை செய்த நான்கு விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

G.A. Jinadasa 1

2022/23 பெரும்போகத்தில் நாட்டில் அதிக நெல் விளைச்சலைப் பெற்ற நான்கு விவசாயிகளுக்கும், அதிகூடிய நெல் விளைச்சலுக்கு வழிவகுத்த At 362 நெல் இரகத்தைக் கண்டுபிடித்த விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் கடந்த 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பரிசில்களை வழங்கினார்கள்.

கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அரசியல் பயணத்தின் 32வது வருடத்தை நினைவுகூரும் முகமாக மாகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அமரவிரு அபிமான் 32 நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்ற போதே இந்த பரிசு வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த பயிர்ச் செய்கைப் போகத்தில் ஹெக்டேயர் ஒன்றிற்கு அதிக நெல் விளைச்சலை பெற்ற அம்பலாந்தோட்டை ரிதியகமவை சேர்ந்த கே. பி. டி. இ. ஜயசேகர, மாலா பரணமான, ஜி. அபேசிங்க மற்றும் ஜானக நுவன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நான்கு விவசாயிகளும் ஒரு ஹெக்டேருக்கு 10-11 மெற்றிக் டொன் நெல் அறுவடை செய்துள்ளனர். தற்போது ஹெக்டேருக்கு 3 - 4.5 மெற்றிக் டொன் விளைச்சல் கிடைக்கின்றது. இந்த நெல் விளைச்சல் வரலாற்றில் ஒரு ஹெக்டேருக்கு அதிக விளைச்சலாகும். இந்த விவசாயிகள் அனைவரும் At 362 என்ற நெற் பயிரினத்தை பயிரிட்டுள்ளதாகவும், இரசாயன உரங்கள், கரிம உரங்கள் மற்றும் தித்தியா சாம்பல் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் விவசாய திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு At 362 என்ற நெல் இனத்தை அறிமுகப்படுத்திய ஆராய்ச்சி உத்தியோகத்தர் ஜி. ஏ. ஜினதாஸ அவர்களுக்கும் ஜனாதிபதியினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20230703-WA0048 (1) 2

IMG-20230703-WA0053 3

Janaka Nuwan Dissanayake 4

Mala Paranamana 5

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்