இலங்கையிலிருந்து வெளிநாட்டு சந்தைக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட 12,500 கிலோ புளி வாழைப்பழங்கள் 26 ஆம் திகதி டுபாய் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது

20220909184536  H9A5600 2

கமத்தொழில் அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் (ASMP) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட விவசாய செய்து காண்பிப்பு தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட ராஜாங்கனை புளி வாழைப்பழத் தோட்டம் இதுவரையில் மிகவும் வெற்றியடைந்துள்ளது.

புதிய விவசாய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ள அந்த மாதிரிப் பயிர் தோட்டத்தில் கிடைக்கும் முதல் தொகுதி புளி வாழைப்பழங்களை இம்மாதம் 26 ஆம் திகதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் தவித்து வரும் இவ்வேளையில், அன்னிய செலாவணியை ஈட்டும் நோக்கில் பயிரிடப்பட்ட ராஜாங்கனை புளி வாழை பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் 200 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டமானது விவசாயிகளுக்கு நிதியுதவி, புதிய தொழில் நுட்ப அறிவு, ஆலோசனை மற்றும் பயிற்சி என்பவற்றை வழங்கியுள்ளது. புளி வாழை பயிர்ச் செய்கையில் ஜிக்ஜாக் (ZigZag) முறையில் நாற்றுகளை நடுதல், சொட்டு நீர்ப்பாசன தொழில் நுட்பம் மற்றும் தேவையான உபகரணங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுத்தல், வாழைப் பயிர்ச் செய்கைக்கு மேலதிகமாக பிற பயிர்களை பயிரிடுதல் மற்றும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டுவதற்கு கொள்முதல் திட்டத்தின் கீழ் வணிக நிறுவனங்களை இணைத்தல் முதலிய செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து முதன்முறையாக 40 அடி கொள்கலனில் 12,500 கிலோ புளி வாழைப்பழம் இம்மாதம் 26 ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் டுபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளி வாழைப் பழங்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

0H9A2030 2 0H9A2095 2

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்