விவசாயிகளுக்கான புதிய விவசாயக் காப்புறுதி ஓய்வூதியத் திட்டம் இன்று (31) முதல் நடைமுறைக்கு வருகிறது

20221031105556  H9A1207-1

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விவசாயக் காப்புறுதி ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், விவசாயத்தில் மட்டுமின்றி பிற தொழில்களில் ஈடுபடுபவர்களும் சேர வாய்ப்பளிப்பதாகும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் அமுலாக்கம் இன்று (31) காலை கொழும்பு 7, கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 59 புதிய ஓய்வூதியர்களுக்கு காப்புறுதி சான்றிதழ்களை அமைச்சர் வழங்கி வைத்தார். அதன்போது, ​​கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் திரு. மொஹான் டி சில்வா, கால்நடை இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் திரு. எம். எம். டி. வீரசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், எவரும் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தைத் தீர்மானிக்கலாம். வெவ்வேறு வயது தொகுதியின் கீழ் காப்புறுதித் திட்டத்திற்கு பங்களிக்கலாம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“2018ஆம் ஆண்டு நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு 06 வகையான பயிர்களின் நிமித்தம், ஏக்கருக்கு 40,000 ரூபா இலவச காப்புறுதியை வழங்கினேன். மிளகாய், நெல், பீற்றூட்டு, சோயாபீன் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய 6 வகையான பயிர்களுக்கு பயிர் சேதம் ஏற்பட்டால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி ஒரு ஏக்கருக்கு 05 லட்சம் ரூபா காப்பீட்டுத் தொகையை சிறிய தவணைக் கட்டண அடிப்படையில் பெற்றுக் கொடுக்குமாறு விவசாய காப்புறுதி சபைக்கு அறிவுறுத்தினேன். அதன்படி, காப்புறுதி முறையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

"பெரும்போகத்திற்கான பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெல் மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் தற்போது பகிர்ந்தளிக்கப்படுகின்றது. யூரியா உரம் தவிர விவசாய உள்ளீடுகள் இல்லாத நாட்டில், இந்த பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் மற்றும் MO உரம் ஆகிய இரணடு வகையான உரங்களையும் வழங்குகின்றோம். சேற்ற உரம் இல்லை என்று சிலர் இப்போது கூச்சல் போடுகின்றார்கள். நாம் நடத்திய மண் பரிசோதனையில் கிழக்கு மாகாணத்தின் 02 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மண்ணில் பொசுபரஸின் அளவு அதிகமாக காணப்படுகின்றது. ஆனால், சேற்று உரங்களை வழங்க முயன்றாலும், காசு கொடுக்கவோ, வாங்கவோ முடியவில்லை. ஆனால் USAID இன் உதவியின் கீழ், சேற்று உரமான 36,000 மெற்றிக் டொன் உரம் அடுத்த சனவரி மாதத்தில் எமக்கு கிடைக்கும். அதற்கமைவாக எமது நாட்டு விவசாயிகளுக்கு அடுத்த சிறுபோகத்தில் சேற்று உரத்தை இலவசமாக வழங்க முடியும்”.

மேலும், கடந்த சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ யூரியா உரத்தை கொடுத்தோம். ஆனால் இம்முறை ஒரு ஹெக்டேருக்கு 170 கிலோ யூரியா உரத்தை வழஙகுகின்றோம். எனவே உரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல் கட்சிகள் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டாம். தற்போதைய ஜனாதிபதி திரு ரணில் விக்ரசிங்க அவர்களும் மற்றும் அமைச்சரவையும் விவசாயிகளுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

20221031105556  H9A1207-1 20221031101119  H9A1110-3

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்