கமத்தொழில் அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

20221002111116  H9A0850 2

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை பயன்படுத்த கமத்தொழில், வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதற்கு மேலதிகமாக தனது நண்பர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளும் பயன்படுத்தப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

இதற்கு முன்னர், கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை அதிகரித்த போது, ​​அமைச்சர் அவர்கள் தனது சம்பளத்தை கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை முடியும் வரை கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இனங்காணப்பட்டு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு கர்ப்பிணி தாய்க்கும் சுமார் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபா பெறுமதியான போஷாக்கு பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்குப் பொதியை வழங்கும் வேலைத் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு நேற்று (02) சூரியவெவ வெடிவெவ குடும்ப சேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்படி, 60 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா போஷாக்குப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 14ஆம் திகதி அகுனகொலபலஸ்ஸ சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா இந்த போஷாக்குப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் சுமார் 6,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் இந்த போஷாக்கு பொதிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டார்கள்.

பொருளாதார நெருக்கடியால் இன்று அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சிலர் நினைக்கின்றார்கள். மேலும், அரசியல்வாதிகள் கொழுப்பை தின்று பாலில் கை கழுவும் நாசகாரர்கள் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறு. இந்த பொருளாதார நெருக்கடி அரசியல்வாதிகளை மட்டுமின்றி மற்றவர்களையும் பாதித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் போஷாக்கின்மை நிலவுகின்றமை பற்றி இன்று பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அம்பாந்தோட்டையில் ஊட்டச் சத்து குறைபாடு இல்லை என்று யாராவது கூறினால் அது தவறு. அப்படியிருந்தும், அது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியானதா என ஆராய வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனால்தான் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசினார். ஆனால் சில குழுக்களின் நோக்கம் நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்பது அல்ல எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுவது.

ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரையும் ஒரு பிரதேச செயலகத்திற்கு நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்திருந்தால், நாட்டு மக்கள் அனைவருக்கும் உதவியாக இருந்திருக்கும். இந்த வாய்ப்பை பலர் தவறவிட்டனர். மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை நியமனம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில கட்சிகளின் குறுகிய நலன்களால் அந்த வாய்ப்புகள் அனைத்தும் சீர்குலைந்தன.

அம்பாந்தோட்டையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எனது பா.உ. சம்பளத்தையும் மற்றும் எனது நண்பர்கள் வழங்கும் நன்கொடைகளையும் பயன்படுத்தி சத்துணவுப் பொதிகளை வழங்குவேன். இப்போது எமக்கு அமைச்சுக்கள் இருந்தாலும் பா.உ. சம்பளம்தான் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும் வரை, அனைத்து அமைச்சர்களும், பா.உ. சம்பளத்திற்காகத்தான் பணியாற்றுவார்கள். கோவிட் 19 தொடங்கிய ஆண்டு முதல் எனது பா.உ. சம்பளத்தை அந்த நிதிக்கு நன்கொடையாக வழங்கினேன்.

இம்முறை நாடு பூராகவும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு என்னால் உதவ முடியாவிட்டாலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் போஷாக்கு அடங்கிய உணவுப் பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

20221002104921  H9A0818 1 

 20221002111151  H9A0855 3

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்