நந்திக்கடல், நாயாறு, சாம்பல்தீவு களப்புப் பகுதிகளை வனப் பாதுகாப்பு ஒதுக்க வலயமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது

IMG-20220922-WA0027-1

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு களப்பு உள்ளடங்கிய பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக பெயர் குறித்து பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சாம்பல்தீவு, நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகிய களப்புப் பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தல் மற்றும் தற்போது பல்வேறு கழிவுகள் நிரம்பியுள்ள களப்புப் பகுதிகளை எவ்வாறு சுத்தம் செய்தல் என்பன தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சில் இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு இந்து ரத்நாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல்லினத்துவத்திற்கு ஏற்ப சாம்பல்தீவு களப்புப் பகுதியை வனப் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளன. ஆகையால், பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், மனிதனின் பல்வேறு செயற்பாடுகளினால் நாயாறு மற்றும் நந்திக்கடல் களப்புப் பகுதிகள் மாசுபடுவதாகவும், பல்வேறு கழிவுகள் அகற்றப்படுவதால் அந்த களப்புப் பகுதி மேட்டு நிலமாக மாறுவதாகவும், பல சதுப்பு நிலங்களிலும் மற்றும் களப்பு பகுதிகளிலும் உள்ள உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. மேலும், ஒரு சில நபர்கள் இந்தப் பகுதியில் நிலங்களை மண்ணிரப்பியெடுத்து சுவீகரித்துக் கொள்ளும் செயற்பாட்டிலும் ஈடுபடுவது இந்த கலந்துரையாடலில் ஊடாக தெரியவந்துள்ளது.

எனவே இவ்விரு களப்புப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொருட்டு உண்மையான விடயங்களை ஆராய்வதற்கு ஒரு விசேட குழுவை நியமிக்க அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்தார். வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.சந்திர ஹேரத் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு இந்து ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் அந்த குழு இயங்குகின்றது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், கமத்தொழில் அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) என்பவற்றின் பிரதிநிதிகளும் குழுவின் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இது தொடர்பான அறிக்கையை 02 வாரங்களுக்குள் பெற்றுத் தருமாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சர், இலங்கையில் உள்ள பெரும்பாலான களப்புகள் கிழக்கு மாகாணத்திலேயே சட்டவிரோதமான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். தான் சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்திலும், இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒரு சிலர் ஏனைய தரப்புகளின் ஆதரவுடன் களப்புகளை மண்ணிரப்பி மீட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த களப்புப் பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்துவதால் அவற்றைப் பாதுகாப்பதற்கான தற்போதைய சட்ட நிலைமைகளும் பலப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

IMG-20220922-WA0028-2

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்