மக்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்கும் நிமித்தம் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் விற்பனை நிலைய வலையமைப்பை விரிவுபடுத்தல்

7.6.1

இந்தத் தடவை சிறுபோகத்திலும் எதிர்வருகின்ற பெரும்போகத்திலும் கிடைக்கும் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் முகமாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பற்றாக்குறை இன்றி நுகர்வுக்கு தேவையான அரிசியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முறையான ஒரு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் கமத்தொழில், வன சீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

தெஹிவளையில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் நவீனப்படுத்தப் பட்டு அதன் பின்னர் நுகர்வு சேவைகளை வழங்கும் முகமாக இன்று (06) ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. மக்களுக்கு சலுவை விலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளித்து தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் விற்பனை நிலை வலையமைப்பை மேலும் வலிமையாக செயற்படுத்தும் பணி இன்று (06) ஆம் திகதி ஆரம்பமாகியது.

அந்த விற்பனை நிலைய விற்பனை சார் செயற்பாடுகளை அவதானிக்கும் விஜயத்தில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும் மற்றும் அமைச்சின் செயலாளர் திரு ரோஹண புஷ்பகுமார அவர்களும் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை விற்பனை நிலைய வலையமைப்பை முறைப்படுத்துவதன் ஊடாக, சந்தையில் நிலவுகின்ற விலையை விடவும் குறைந்த சலுகை விலையில் அரிசி, மரக்கறி, பழ வகைகள் அடங்கலாக உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கமத்தொழில் அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சந்தை விலை அதிகரித்ததையடுத்து மக்கள் எதிர்கொள்ள நோ்ந்துள்ள கஷ்டங்களை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தேசிய உணவு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான விற்பனை நிலைய வலையமைப்பை இந்த ஆண்டு காலப் பகுதியினுள் துல்லியமாக செயற்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

தெஹிவளையில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் விற்பனை நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மரக்கறிகளையும் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PMB Rice அரிசியையும் சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் 1000 ரூபாவுக்கு குறைய பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு பல சரக்கு பொதிகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் - அரிசி சார்ந்த சந்தையில் வேறூண்டியிருக்கும் அரிசி மாஃபியாவில் சிக்கித்தவிக்கும் மக்களை அத்தகைய மாஃபியாவிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தேசிய உணவு ஊக்குவிப்பு சபையும், ஹதபிம அதிகார சபையும் அடங்கலாக கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் வணிக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தி குறிப்பாக மில்கோ மற்றும் NLDB பால் உற்பத்திகளை இந்த விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோரால் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

7.6.2  7.6.3


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 07 ஜூலை 2022 04:40

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்