தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை கந்தக்காடு விவசாய பண்ணையை முழுமையாக எதிர்வரும் பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையின் நிமித்தம் ஈடுபடுத்த கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்திற்கு இணங்க கந்தக்காடு விவசாய பண்ணையிலுள்ள 1215 ஹெக்டேயர் அளவான காணியை இலங்கை இராணுவத்திற்கும், மேலும் 500 ஏக்கர் அளவான காணியை புனர்வாழ்வுத் திணைக்களத்திற்கும் பெற்றுக் கொடுக்கும் முகமாக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த விடயம் பற்றி ஒரு கலந்துரையாடல், இன்று (23) ஆம் திகதி முற்பகல் நேரத்தில், சகல தரப்புகளுடனான பங்குபற்றலுடன் கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்நோக்கவுள்ள பொருளாதார நெருக்கடியையும் அதே போல் உணவுப் பற்றாக்குறையையும் ஒழிக்கும் பொருட்டு ஒவ்வொரு காணியிலும் பயிரிடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கந்தக்காடு விவசாய பண்ணையிலுள்ள 11,000 ஏக்கர் அடங்கிய சகல காணிகளிலும் பயிரிடும் நிமித்தம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் இந்தக் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்கள்.
இராணுவத்திற்கும் மற்றும் புனர்வாழ்வுத் திணைக்களத்திற்கும் பெற்றுக் கொடுக்கப்படும் காணிகளில் சோளத்தையும் மற்றும் பால் மாடுகளையும் வளர்ப்பதற்கு தேவையான புற்களையும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய சிவில் பாதுகாப்பு சிறப்புச்செயலணிக்கு, லாஹுகல பிரதேசத்தில் உள்ள புதிய பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 250 ஏக்கர் அளவான காணியை நெல் பயர்ச் செய்கையின் நிமித்தம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இங்கு குறிப்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், சிறுபோகத்தில் அறுவடை செய்வதற்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு பயர்ச் செய்கையின் நிமித்தம் தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடு முழுமிலும் அமைந்துள்ள 247 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம், சிறுபோகத்தில் அறுவடை செய்ய அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொடுக்க ஏற்கனவே ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்கள்.