கமத்தொழில் அமைச்சர், கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் உரக் கூட்டுத் தாபனங்களுக்கு திடீர் விஜயம் உரக் கூட்டுத் தாபனங்களின் களஞ்சியசாலைகளில் உரங்கள் குவிந்து காணப்படுகின்றன

AGC MEDIA NEWS (1)

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் மற்றும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள் ஆகியோர் இன்று காலையில், பேலியகொட மற்றும் களணி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் உரக் கம்பனிகளின் பிரதான களஞ்சிய கட்டிடத் தொகுதிகளுக்கு திடீரென விஜயத்தை மேற்கொண்டு அவற்றை பார்வையிட்டனர்.

நாட்டில் உரங்களுக்கான பற்றாக்குறை நிலவினாலும் தனியார் உரக் கம்பனிகள் தமது களஞ்சியசாலைகளில் உரங்களை தொகையாக வைத்திருக்கும் விதத்தை இதன் போது அமைச்சர்கள் அவதானித்தனர். நாளாந்தம் விநியோகிக்கக் கூடிய உரங்களின் அளவை விநியோகிக்காமல் குறைந்தளவான உரங்களை விநியோகிப்பதற்கு இந்த தனியார் கம்பனிகள் செயல்படுவது பற்றி இதன் போது அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.

 

வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் தேவையான உரங்களை விநியோகிக்கவில்லை எனில் அரசாங்கத்தின் உரக் கூட்டுத் தாபனங்களின் மூலமாக அந்த உரங்களை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர். அந்த உரிய கம்பனிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் கூறியது: ஒரு சில தனியார் உரக் கம்பனிகள் நாளொன்றுக்கு 600 மெற்றிக் டொன் அளவான உரங்களை விநியோகிக்கக் கூடிய சக்தி இருந்தும் 300 மெற்றிக் டொன் போன்ற குறைந்தளவான உரங்களை மாத்திரம் விநியோகிப்பது பற்றி கமத்தொழில் அமைச்சர் அவர்கள் இதன் போது உரிய அதிகாரிகளிடம் தொடர்ந்தும் வினவினார்கள். உரங்கள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தனியார் கம்பனி நாளொன்றுக்கு 1000 மெற்றிக் டொன் அளவான உரங்களை விநியோகிக்க வாக்குறுதியளித்தாலும் பல நாட்கள் கடந்தும் அந்த அளவான உரங்களை விநியோகிக்கவில்லை என அமைச்சர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள். உரங்கள் இல்லை என்று கூறி மக்கள் நாடு முழுதிலும் ஆர்ப்பாட்டங்களை செய்கின்ற இந்த காலகட்டத்தில் களஞ்சியாசாலைகளில் இவ்வாறு அரசாங்கத்தின் உர சலுகையின் கீழ் உரங்களை பெற்று பதுக்கி வைத்திருத்திப்பது ஏன் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கம்பனிகளின் அதிகாரிகளிடம் மேலும் வினவினார்கள். உரிய தீர்மானத்தின் பிரகாரம் 03 நாட்களுக்குள் மக்களுக்கு தேவையான சகல உரங்களையும் விநியோகிக்குமாறு அந்த கம்பனிகளின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்கள். அவ்வாறு விநியோகிக்கவில்லை எனில், தனியார் உரக் கம்பனிகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரங்கள் பகிர்ந்தளிப்பு அரசாங்கத்தின் உரக் கம்பனிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். உர செயலக அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்களுக்கும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இது பற்றி அறிவித்தார்கள்”. களஞ்சியசாலைகளிலுள்ள உரங்களை விநியோகிக்க பல நாட்கள் தாமதிப்பது எக்காரணத்தினால் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள் இதன் போது வினவினார்கள். உரங்களை எடுத்துச்செல்லல் மற்றும் தொழிலாளர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் நிலவுவதை உரிய அந்த கம்பனிகளின் அதிகாரிகள் இதன் போது அமைச்சர்களுக்கு காரணம் காட்டினார்கள். அதற்கு தேவையான எடுத்துச்செல்வதற்குரிய வாகன வசதிகளையும், தொழிலாளர்களின் பங்களிப்பையும் பெற்றுத் தருவதற்கு அரசாங்கத்தினால் முடியும் எனவும், நாடளாவிய ரீதியில் உரங்களை பகிர்ந்தளிப்பதை பல காரணங்களை முன்வைத்து தாமதித்தால் கடும் நடவடிக்கையை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் அவர்கள் உரிய கம்பனிளுக்கு விஜயம் செய்த நேரத்தில் சுட்டிக் காட்டினார்கள். அந்த உரக் கம்பனிகளின் களஞ்சியசாலைகளில் உரங்கள் குவிந்திருப்பதையும் அமைச்சர் அவர்கள் அவதானித்தார்கள்.

 VOICE CLIP voice

AGC MEDIA NEWS (2)  AGC MEDIA NEWS (3)

AGC MEDIA NEWS (4)  AGC MEDIA NEWS (5)

AGC MEDIA NEWS (6)  AGC MEDIA NEWS (7)

AGC MEDIA NEWS (8)  AGC MEDIA NEWS (9)

AGC MEDIA NEWS (11)  AGC MEDIA NEWS (10)

AGC MEDIA NEWS (13)  AGC MEDIA NEWS (12)

AGC MEDIA NEWS (14)  AGC MEDIA NEWS (15)

AGC MEDIA NEWS (16)  AGC MEDIA NEWS (17)

AGC MEDIA NEWS (18)  AGC MEDIA NEWS (19)

AGC MEDIA NEWS (20)  AGC MEDIA NEWS (21)

AGC MEDIA NEWS (22)

 

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்