கமத்தொழில் அமைச்சும் மற்றும், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சும் ஒன்றிணைந்து சேதன உரங்களின் உற்பத்திற்கு தேவையான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் உள்ளூராட்சி அதிகார சபைகளின் தலைவர்கள் அனைவரையும் விழிப்பூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் 2021.07.12ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்துடன் சம்பந்தமான நகர சபைகளின் நகர பிதாக்கள்மற்றும்பிரதேச சபைகளின் தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சித் திட்டம் சார் வேலையரங்கில் கலந்து கொண்டனர். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டம் சார் தேசிய வேலையரங்கில் கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ,மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் திரு உதித் கே. ஜயசிங்க உட்பட பல அதிகாரிகளும் இந்த வேலையரங்கில் கலந்து கொண்டனர். ஏற்கெனவே பல உள்ளூராட்சி அதிகார சபைகள் சேதன உரங்கள் உற்பத்தியை ஆரம்பித்துள்ளன. அதற்கு தேவையான வசதிகள், நிலவும் பிரச்சினைகள், தொழில் நுட்பம், காணி, சலுகைக் கடன் முதலிய சகல வகை வசதிகளையும் பெற்றுக் கொடுத்து பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தயார். இதன் போது உள்ளூராட்சி அதிகார சபைகளின் தலைவர்களிடம் கௌரவ அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஅவர்கள் பின்வருமாறுகுறிப்பிட்டார்கள்.
“நாம் இப்பொழுது மோதுவது வருடாந்தம் 100பில்லியன் ரூபா பாரிய அளவான வர்த்தக சார் மாஃபியாவுடன். அது இலகுவானது அல்ல. சகல தரப்பினரையும் விலைக்கு வாங்கவும், எமது முயற்சிகளை பின்னடைய செய்யவும் இந்த மாஃபியா கம்பனிகள் அதிக பணம் செலவிடுகின்றன. ஆகையால், சகல உள்ளூராட்சி சபைகளினதும் ஆரவை எமது இந்த வேலைத் திட்டத்திற்கு வழங்குவது மிக முக்கியமானதாகும். அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சுற்றாடல்நேய விவசாயத்தை கட்டி எழுப்பும் எமது இந்த பயணத்திற்கு மாபெரும் சத்தியாக அமையும். உங்களுக்கு தேவையான உரிய விடயங்களை எம்மிடம் கூறுங்கள். உரங்கள் பற்றிய பிரச்சினைகள் இருந்தால், மாவட்ட கமநல ஆணையாளர்களிடம் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தீர்வு கிடைக்கவில்லை எனில் எனக்கு அல்லது இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்களுக்கு கதையுங்கள். உரப் பற்றாக்குறை நாட்டில் இல்லை. அவ்வாறு கூறுவது முற்றிலும் பொய்யானது. கிராம மக்களுடன் அதிகளவில் இருப்பது நீங்கள்தான். பிரச்சினைகள் உங்களுக்கு வரும். ஆகையால், சரியான விடயம் பற்றி கிராம மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். தெளிவுபடுத்தி கூறுங்கள். இது செய்யக் கூடிய, செய்ய வேண்டி ஒரு கடமையாகும். உங்களின் சார்பாக எந்த ஒரு பிரச்சினை விடயத்திற்கும் பதிலளிப்பதற்கும், அதே போல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கும் எமது அரசாங்கம் தயார். நம்பிக்கையுடன் இந்தக் கடமைப் பொறுப்பை நிறைவேற்றுங்கள்”
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ
“சேதன உரங்களும், நுண்ணுயிர் தொழில் நுட்பமும் (உயிரியல் உரம்) நவீனத்துவம் உடையதாகும். முதலில் சேதன உரங்களை இட்டு பயிர்கள் செய்வதை பற்றி, இரசாயன உரங்களை இட்டு பயிர்கள் செய்யும் மன பாங்கிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும். இல்லை என்றால் இதனை புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள முடியாது. அதிக எண்ணிக்கையான விவசாயிகள் ஏற்கெனவே சுற்றாடல்நேய சேதன உரங்களை பாவித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த விவசாயிகள் மிகவும் வெற்றிகரமான முறையில் அவர்களின் பயிர் செய்கையில் ஈடுபடுகின்றனர். தாவர போஷனை, கிருமிகளினால் ஏற்பாடும் தாவர நோய்களுக்கு தேவையான பிரதிக் கிரிகைகள் என்பவற்றை உயிரியல் தொழில் நுட்பத்தின் ஊடாக கண்டுபிடித்து மிகவும் வெற்றிகரமான முறையில் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் எமது நாட்டில் உள்ளனர். வித்தியாசமாக நினைத்தால் இதனை எம்மால் வெற்றிகொள்ள முடியும். அதற்கு தேவையான அதிக கரும பணிகளை உள்ளூராட்சி அதிகார சபைகளின் தலைவர்கள் செய்ய வேண்டும். ஆகவே, இந்த வேலைத் திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்பை எமக்கு வழங்குங்கள்.”
மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க
“பல உள்ளூராட்சி அதிகார சபைகள் கடும் ஆர்வத்துடன் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அதிகமான உள்ளூராட்சி அதிகார சபைகள் சேதன உர உற்பத்தியை ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றன. இவற்றுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்த்தால், மேலும் இந்த வேலைத் திட்டத்தை வினைத்திறன் வாய்ந்ததாக முன்னெடுக்க முடியும். உரங்களை தருமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்ற எதிர்க்கட்சி தலைவரும் மேல் வர்க்கத்தினரும் கூட பல வருட காலமாக உணவாக உட்கொள்வது சேதன உரங்களை பாவித்து உற்பத்தி செய்த விவசாய உற்பத்திகளை. மக்களை ஏமாற்றுவதற்கு எமது அரசாங்கம் தயாரில்லை. மக்களுக்கு விஷம் நீங்கிய மிக சுத்தமான ஒரு உணவை பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகையால், சகல உள்ளூராட்சி அதிகார சபைகளும் அர்ப்பணிப்புடனான விதத்தில் ஒத்துழையுங்கள். இதனை அரசாங்கத்தின் வேலைத் திட்டம் என்று நினைக்காமல் எமது நாட்டிற்காக, இந்த மண்ணையும், பூமியையும் பாதுகாப்பதற்காக செய்யும் ஒரு தேசிய பொறுப்பாக நினையுங்கள்.”
இரசாயன உரங்களை பாவிப்பதால் விவசாயத் துறையில் உருவாகுகின்ற பிரச்சினைகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் என்பவற்றின் ஊடாக மக்கள் முகம்கொடுக்க நேர்ந்த துன்பத்தை துடைப்பதற்கும் மற்றும் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவரவும் ஒரேயொரு சிறந்த தீர்வு சுற்றாடல்நேய உரங்களை பாவித்து விவசாயத்தை மேற்கொள்வதுதான் என இதன் போது ஒரு விஷேட விரிவுரையை நிகழ்த்திய விஷேட மருத்துவ நிபுணர் அனுருத்த பாதெனிய அவர்கள் வலியுறுத்தினார்கள். இரசாயன உரங்களை பாவித்து மேற்கொள்ளும் விவசாயத்தை நாம் ஏன் தவிர்த்துக் கொள்ள வேண்டும்? உடனயடிாக சுற்றாடல்நேய உரங்களை இட்டுவிவசாய செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏன் அவசியம்? என்பது பற்றி சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினது பேராசிரியர் பிரியந்த யாப்பா அவர்கள் உள்ளூராட்சி அதிகார சபைகளின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.