காணிகள், விதைகள், நீர்ப்பாசன வசதிகள், இயந்திராதிகள் உபகரணங்கள், மின்சார வேலி, நீரிறைக்கும் பம்பிகள், சேதன உரங்கள் முதலியன அடங்கிய வசதிகள் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக கிடைக்கும்
கமக்காரர் வங்கியிலிருந்து 50,000 ரூபா கடன் கிடைக்கும்
தோட்ட பகுதி இளைஞர்களின் சக்தியில் தேசிய பொளாதாரத்தை கட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும்
அரசாங்கத்திற்கு சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையினது நாவலப்பிட்டிய கலபடத் தோட்டப் பகுதியில் பயிரிடப்படாத சுமார் 100 ஏக்கர் காணியில் ஒரு இயற்கை மிளகாய் பயிர்ச் செய்கைக் கருத் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் நிமித்தம் நபர் ஒருவருக்கு அரை ஏக்கர் வீதம் 200 இளைஞர்களுக்கு 100 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிலத்தைப் பன்படுத்தல், குழாய் மார்க்கங்களை நிறுவுதல் மற்றும் நாற்றுமேடைகளை அமைத்தல் ஆகிய செயற்பாடுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் நிலவரங்களை நேற்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சென்று பார்வையிட்டார்கள். இங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் காணி உறுதிகளையும் சலுகை கடன் நிதிகளையும் அமைச்சர் அவர்கள் இதன் போது வழங்கி வைத்தார்கள்.
இந்த நாட்டிற்கு தேவையான செத்தல் மிளகாய் 100% வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. மிளகாய் விதைகளும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக, வெளிநாடுகளுக்கு செல்கின்ற அதிக அந்நியசெலாவணிகளை சேமிப்பது அரசாங்கத்தின் வேலைத் திட்டமாகும். அதற்கான ஒரு கட்டமாகத் தான் களபட பிரதேசத்தில் 100 ஏக்கர் காணிகளில் இயற்கை மிளகாய் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இது தவிர, நாவலப்பிட்டிய அளுத்கம பிரதேசத்திலும் கூட இயற்கை மிளகாய் விதைகள் உற்பத்திக் கிராமம் ஒன்றும் செயற்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து ஏற்கெனவே பலன்கள் கிடைத்து வருகின்றன. வருடாந்த மிளகாய் விதையின் தேவை 2500 கிலோ கிராம்களாகும். இந்த அளுத்கம மிளகாய் விதை கிராமத்தின் ஊடாக 1250 கிலோ கிராம் மிளகாய் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த விதைகள் உற்பத்தியிலிருந்து வருடாந்தத் தேவையில் 50% வீதம் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த அளுத்கம விதை உற்பத்திக் கிராமத்தில் 1500 சதுர அடி அளவான 40 சுரங்கங்களில் இந்த மிளகாய் விதை உற்பத்தி செய்யப்படுகின்றது. தம்புள்ள திகம்பத்தன பிரதேசத்திலும் 2000 சதுர அடி அளவான 20 சுரங்கங்களில் மிளகாய் விதை உற்பத்தி செய்யப்படுகிறது. களபடவிலும் மற்றும் மேலும் பல பிரதேசங்களிலும் பயிரிட்டு வருடாந்த செத்தல் மிளகாய் தேவையை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. களபடவில் 100 ஏக்கர் காணியில் ஒரு இயற்கை மிளகாய் பயிர்ச் செய்கை கருத் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றது. தோட்டப் பகுதி இளைஞர்களும் மற்றும் யுவதிகளும் மிகவும் அர்ப்பணிப்புடனும், மிகவும் அக்கறையுடனும் மற்றும் விருப்பத்துடனும் இந்தப் பயிர்ச் செய்கை கருத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்களுக்குத் தேவையான சேதன உரங்களையும் களபட தோட்டத்தில் உற்பத்தி செய்து இந்த மிளகாயை பயிரிடும் விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய சகல வசதிகளும் அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான வசதிகளை அரசு பெற்றுக் கொடுக்கும் என இந்த களபடத் தோட்ட மிளகாய் பயிர்ச் செய்கைக் கருத் திட்டத்தை பார்வையிட்ட போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் கூறினார்கள். தோட்டப் பகுதியில் உள்ள 200 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு இந்தப் பயிர்ச் செய்கை காணிகளை பெற்றுக் கொடுப்பதும் விஷேடமானதாகும். தமது பயிர்ச் செய்கைகளையும், இயற்கை மிளகாய் பயிர்ச் செய்கையையும் மேற்கொள்வது தொடர்பாகவும் மற்றும் அதற்கு கிடைக்கும் உதவிகள் தொடர்பாகவும், இந்தக் பயிர்ச் செய்கைக் கருத் திட்டத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
Voice cut
விவசாய திணைக்களம் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் அறிவுரைகளினதும் வழிகாட்டல்களினதும் கீழ் இந்த இயற்கை மிளகாய் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.