කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



கருத் திட்டப் பிரிவு

அடிப்படைப் பொறுப்புப் பணிகள்

அமைச்சின் கீழ் இயங்குகின்ற பல நிறுவனங்களிலிருந்தும் கிடைக்கின்ற கருத் திட்டங்கள் தொடர்பான கருத் திட்டப் பிரேரணைகளைத் தயாரித்து அத்தகைய பிரேரணைகளை உதவி வழங்குகின்ற நிறுவங்களுக்கு குறிப்பீடு செய்தல் அதே போல் அத்தகைய பிரேரணைகள் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் செயற்படுத்தும் நிறுவனங்களுக்கு அவற்றை மீளஒப்படைத்தல் மற்றும் செயற்படுத்தப்படுகின்ற நேரத்தில் அத்தகைய கருத் திட்டங்கள் பற்றிய பின்னூட்டலை மேற்கொள்ளல், வெளிநாடுகளுடனும் அதே போல் சர்வதேச நிறுவனங்களுடனும் உறவுகளைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டுத் தரப்புகளுக்கும் வெளிநாட்டுத் தரப்புகளுக்கும் நன்மை அளிக்கின்ற நிலைகளை உருவாக்கக் கூடிய வகையில் வெளிநாட்டு உறவுகளைப் பேணிச்செல்லல், சர்வதேச வியாபாரம் பற்றிய தேசிய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான உரிய தகவல்களை வழங்குதல் மற்றும் விவசாயத் துறை தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்தல் என்பன இந்தக் கருத் திட்டப் பிரிவினது அடிப்படை நோக்கங்களாகும். இத்தகைய கரும பணிகள் இந்தப் பிரிவின் பொறுப்புப் பணிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்

A. வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்ற கருத் திட்டங்களை ஒருங்கிணைத்தல்

01. ஜப்பான் சர்வதேச கூட்டுறவுக்கான முகவர் நிலையத்தினது (JICA) உதவி அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்ற கருத் திட்டங்கள்

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிப்படுத்தும் சேவை நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அத்தகைய உபகரணங்களைப் பழுதுபார்த்தல் ஆகியன தொடர்பான கருத் திட்டம்

குறிக்கோள்- தாவரங்கள் தொற்றுநீக்கி தனிப்படுத்தும் சேவையை சர்வதேச நியமத்திற்கு ஏற்ப பேணுதல்

செயற்படுத்தும் /பொறுப்புக்கூறும் நிறுவனம் - விவசாயத் திணைக்களம் /தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம்

விஷேட பிரிவு - விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்/விற்பனை செய்தல்

 

நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல், ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு உபாயமாக விவசாய ஏற்றுமதிகளையும் மற்றும் விவசாய இறக்குமதிகளையும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பேணிச் செல்லல், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தாவரங்களுக்கும் அதே போல் தாவர உற்பத்திகளுக்கும் போட்டித் தன்மை வாய்ந்த விலைகளைப் பெற்றுக் கொடுத்தல், அத்தகைய தாவரங்களும் மற்றும் தாவர உற்பத்திகளும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளின் சர்வதேச சந்தையில் பிரவேசிக்கும் நிமித்தம் அந்த தாவரங்களும் தாவர உற்பத்திகளும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கு தேவையான புதிய நவீன தொழில் நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல், தாவர நடுகைக் கன்றுகள் அல்லது தாவர உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும் போது அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அந்த நாடுகள் தடைசெய்துள்ள அல்லது அனுமதியளிக்காத அத்தகைய நடுகைக் கன்றுகளை அல்லது அத்தகைய தாவர உற்பத்திகளை இறக்குமதி செய்வதைத் தவிர்த்துக் கொள்வதை உறுதிசெய்தல் முதலிய குறிக்கோள்களை நிறைவேற்றும் நிமித்தம் தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவைக்கு புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நோக்கில் தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையின் நிமித்தம் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப உபகரணங்களை பழுதுபார்த்து அத்தகைய உபகரணங்களை மீளிடுதல். இதன் நிமித்தம் JICA நிலையம் 259.6 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

 

02. ஆசிய ஆபிரிக்க கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (AARDO) நிதி உதவியில் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

இலங்கையில், வர்த்தகளவில் ஈரப்பலாவை உற்பத்தி செய்வதற்கான முதல் ஆரம்பக் கருத் திட்டம்

குறிக்கோள் - போஷனை சத்துக்கள் அதிகமான உணவுகளின் பாவனையை ஊக்குவிப்பதும் மற்றும் பெறுமான சங்கிலிக்கு மதிப்பு சேர்த்தலும்

செயற்படுத்தும்/பொறுப்புக்கூறும் நிறுவனம் - விவசாயத் திணைக்களம்/பழங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகம்

விஷேட பிரிவு - விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்/விற்பனை செய்தல்

விவசாயிகளின் வறுமையை ஒழித்தல், உணவுகளின் உற்பத்திற்கு பெண்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல், நிலையான விவசாயத்தின் ஊடாக உணவுப் பாதுகாப்பையும் மற்றும் போஷனை சத்துக்களையும் மேம்படுத்துதல் மற்றும் பட்டினியை ஒழிக்கின்ற நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணங்க இலங்கையில் ஈரப்பலாவின் பயிர்ச் செய்கையை மேலும் வியாபிக்கச் செய்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல் சங்கிலி முறைமைகளின் ஊடாக ஈரப்பலாவின் பயிர்ச் செய்கையை வர்த்தகளவில் வியாபிக்க செய்தல் முதலிய நோக்கங்களின் நிமித்தம் இந்தக் கருத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியினுள் செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும். இது ஆசிய ஆபிரிக்க கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (AARDO) 6 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்டது.

 

03. கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் (KOICA) நிதி உதவியில் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிப்படுத்தும் சேவையை நவீனப்படுத்தும் கருத் திட்டம்

குறிக்கோள் - கொழும்பு துறைமுகத்தில் தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை வலுப்படுத்துதல்

செயற்படுத்தும்/பொறுப்புக்கூறும் நிறுவனம் - விவசாயத் திணைக்களம் /தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம்

விஷேட பிரிவு - விஷேட பிரிவு - விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்/ விற்பனை செய்தல்

 கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க தேசிய விமான நிலையத்தின் தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை வலுப்படுத்துதல், கொழும்பு துறைமுகத்தினுள் காணப்படுகின்ற அத்தகைய தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கில், தற்பொழுதுள்ள கட்டிட வசதிகள் போதியளவில் இல்லை என்பதால் தேவையான வசதிகளையுடைய புதிய ஒரு கட்டிடத்தை நிர்மாணித்தல், பதவியணியினரின் ஆற்றலை வலுப்படுத்துதல், ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்துதல் முதலிய கரும பணிகளை அடிப்படைகக் கொண்டு இந்தக் கருத் திட்டம் செயற்படுத்தப் படுகின்றது. இது KOICA முகவர் நிலையத்தின் 54.822 மில்லியன் ரூபா நிதி உதவியில் 2019-2021 வரை செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும்.

 

04. சர்வதேச விவசாயத்திற்கான கொரிய முகவர் நிலையத்தின் (KOPIA) கீழ் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

குறிக்கோள் - சர்வதேச நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளின் அடிப்படையில் விவசாய ஆராய்ச்சி செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துதல்.

செயற்படுத்தும்/பொறுப்புக்கூறும் நிறுவனம் - விவசாயத் திணைக்களம்

விஷேட பிரிவு - விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்/விற்பனை செய்தல்

            I. காளான்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் அபிவிருத்திக் கருத் திட்டம்  (Development of Production & Utilization technology for income increase of mushroom farmers)

            இந்தக் கருத் திட்டம் இலங்கையில் உணவுகளுக்கான காளான் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், தரத்தில் உயர்ந்த காளான் உற்பத்திகளை பரந்தளவில் சந்தையில் பிரவேசிக்கச் செய்தல் ஆகிய நோக்கங்களின் நிமித்தம் செயற்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத் திட்டம் காளான் உற்பத்தியில் ஈடுபடும் சுமார் 800 உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், புதிய இனங்களை பயிரிடக் கூடிய 175 பண்ணைகளை தாபித்தல், பெறுமதி சேர்த்தல் உற்பத்திகளை உற்பத்தி செய்தல் முதலியவற்றில் பிரதானமாக இலக்குக் கொண்டுள்ளது. இதன் நிமித்தம் KOPIA நிலையத்தின் நிதி உதவியின் கீழ் 3 வருடங்களுக்கு 195,000 அ.டொ. நிதியும், உள்நாட்டு நிதி 68,000 அ.டொ. நிதியும் அடங்கலாக ஒதுக்கப்படும் மொத்த நிதியின் அளவு 263,000 அ.டொ. நிதியாகும். 2017-2019 ஆம் ஆண்டு வரை இந்தக் கருத் திட்டம் விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும்.

II. பண்ணைகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மிளகாய் கலப்பு இன விதைகள் உற்பத்திப் பண்ணைகளை தாபித்தல் (Establishing Farm Based Chili Hybrid Seed Production System in Sri Lanka)

இந்தக் கருத் திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிற்கு செயற்படுத்தும் நிமித்தம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டம் அதிக விளைச்சல்களில் இலக்குக்கொள்ளும் (›35/ha) மற்றும் நோய்களையும் மற்றும் பீடைகளையும் எதிர்த்து ஈடுகொடுக்கக் கூடிய புதிய மிளகாய் விதை இனங்களை உற்பத்தி செய்தல், வருடாந்தம் கிராமங்களை இலக்காகக்கொண்டு 300 கி.கி. கலப்பு இன மிளகாய் விதைகளை உற்பத்தி செய்தல், விவசாயிகள் தமது பண்ணைகளிலிருந்து பெறும் விளைச்சல்களுக்கும் மற்றும் உண்மையாக பெறக் கூடிய விளைச்சல்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் குறைத்தல் முதலிய அம்சங்களை இலக்குகளைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இறக்குமதி செய்யப்படும் கலப்பு இன மிளகாய் விதைகளின் அளவை 50% வீதம் வரை குறைக்கும் நோக்கில் இந்தக் கருத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இது விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. குறித்த இந்தக் கருத் திட்டம் செயற்படுத்தப்படும் 03 வருடங்களுக்கு, KOPIA நிலையத்தின் நிதி உதவியின் கீழ் 105,000 அ.டொ. நிதியும் மற்றும் உள்நாட்டு நிதியின் கீழ் 60,000 அ.டொ. நிதியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கு 35,000 அ.டொ. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

III. வெங்காய விதை உற்பத்திக் கருத் திட்டம் (Follow-up Management of High Quality Onion Seed Production Demonstration Village) இது 2018-2019 ஆம் ஆண்டு வரை விவசாயத் திணைக்களத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும்.

இந்தக் கருத் திட்டம் விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டது. இது 2018-2019 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும் ஒரு இரண்டு ஆண்டுக் கருத் திட்டமாகும். 2019 ஆம் ஆண்டிற்கு 10,000 அ.டொ. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

IV. இலங்கையின் சோயா போஞ்சியின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் கருத் திட்டம் (Development of Technology to Increase Soya bean Productivity in Sri Lanka) இது 2018-2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிற்கு செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும். இது விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் 35,000 அ.டொ. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

V. ஜமனாறங் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இலங்கை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் கருத் திட்டம் (Increase farmers Income of Sri Lanka by Improving Quality and Productivity of Mandarins). இது 2018-2020 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும். இது விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் 35,000 அ.டொ. நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

05. ஆசிய பிராந்திய உணவுகள் மற்றும் விவசாய கூட்டுறவுகள்” (AFACI) அமைப்பின் நிதி உதவியில் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

            I. தேசிய உகந்த விவசாய ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பான விவசாய உற்பத்தித் தகவல்கள் முறைமை மேம்பாட்டுக் கருத் திட்டம் (Development of Locally Appropriate GAP Programme and Agricultural Produce Safety Information system)

            இந்தக் கருத் திட்டம் விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப் படும் ஒரு கருத் திட்டமாகும். இது 2018-2020 ஆம் ஆண்டு வரை 03 வருடங்களுக்கு செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் சுமார் 50,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

II. தானியப் பயிர்களுக்கு விஷேட கவனத்தை செலுத்தி வயல் பயிர்களின் அபிவிருத்தி நிமித்தம் சிறு அளவான மற்றும் நடுத்தர அளவான பண்ணைகளை இலக்காகக்கொண்டு இயந்திர சார் பொறிமுறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பிரபல்லியப்படுத்தும் ஆகியன தொடர்பான கருத் திட்டம் (Development and Popularization of Mechanization Practices for Field Crop Targeting Small and Medium Scale Farmers with Special Attention to Pulse Crops)

            இது விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும். இந்தக் கருத் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் 30,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

III. மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்ப முறைமைகள் மற்றும் தழுவல்களின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழப் பயிர்களை நிதமும் பரந்த அளவில் பேணிச் செல்லல் தொடர்பான கருத் திட்டம் (Improvement and adaptation of modern technology for continuous availability of selected fruit crops)

அன்னாசி, கொய்யா, மா, இரம்புட்டான், தோடை, ஜமனாரங், மற்றும் கொடி தோடை என்பவற்றின் தரம் மற்றும் வியாபிப்பு முதலியவற்றை மேம்படுத்தல், உள்நாட்டு காலைநிலைக்கு மிகவும் பொருத்தமான உகந்த பெயார்ஸ், ஆப்பிள், ஸ்ட்டோபெரி மற்றும் எலுமிச்சை முதலிய வெளிநாட்டு புதிய இனங்களை அறிமுகப்படுத்துதல் முதலிய அம்சங்களை இந்தக் கருத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. குறித்த இந்தக் கருத் திட்டம் விவசாயத் திணைக்களத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதன் நிமித்தம் 225,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-2020 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும் ஒரு மூன்று வருடக் கருத் திட்டமாகும்.

IV. ஆசிய பிராந்தியத்தில் பரவும் தொற்றுநோய்கள் ஆய்வு மற்றும் ஒன்றிணைந்த கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு முறைமை தகவல்கள் பரிமாற்றல் முறையிலை கட்டியெழுப்பும் கருத் திட்டம் (Construction of Epidemiology Information Interchange system for Migratory Disease and insect pests in Asia Region (IPM). இந்த்க கருத் திட்டம் 2013-2019 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்திற்கு 50,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

V. தோட்டப் பயிர்களுக்கான அறுவடைக்கு பின்-தொழில் நுட்பம் தொடர்பான மாதிரிக் கைந்நூல் தயாரிப்பு மற்றும் வலையமைப்பு தாபிப்புக் கருத் திட்டம் (Establishment of Network and Model Manual on Post-Harvest Technology of Horticulture Crops) இந்தக் கருத் திட்டம் 2016-2018 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் மொத்தமாக 30,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VI. தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மிகவம் தரமான உணவுப் பயிர் விதை மற்றும் விவசாயத் தொழில் நுட்ப பரிமாற்றல் மாதிரிக் கருத் திட்டம் (Demonstration Project to Distribute National Superior Seeds of Food Crops and Transfer Agricultural Technology (Seed Extension Project). இந்தக் கருத் திட்டம் 2016-2018 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்திற்கு மொத்தம் 42,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VII. நீர் மூலங்களினுள் வைரஸ் நீங்கிய உருளைக்கிழங்கு விதை உற்பத்தி தொழில் நுட்ப வியாபிப்புக் கருத் திட்டம் (Technology Dissemination of virus Free Seed Potato Production Using Hydroponic Production System (Seed Potato). இந்தக் கருத் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும். இந்தக் கருத் திட்டத்திற்கு மொத்தம் 14,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

VIII. விவசாய உற்பத்திகள் பதனிடும் மற்றும் அபிவிருத்தி செய்யும் கருத் திட்டம் (Agricultural Product Processing and Development). இந்தக் கருத் திட்டம் 2019-2021 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியினுள் செயப்படுத்தப்படவுள்ளது. இது ஆரம்ப கட்டத்திலுள்ளது.

IX. மேம்பட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பழப் பயிர்களின் வியாபிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான கருத் திட்டம். இந்தக் கருத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், பழ நுகர்வை அதிகரிப்பதற்கும், பழங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், தரமான பழங்கள் கிடைக்கும் வாய்பை அதிகரிப்பதற்கும் இலக்குக் கொள்ளப் பட்டுள்ளது. (Improvement and adoption of modern technology for continuous availability of selected fruit crops-Increase the farmer income and increase the fruit consumption increase the exportation with high quality, increase fruit availability). இது 2018-2020 ஆம் ஆண்டு காலப் பகுதியினுள் செயற்படுத்தப்படும் ஒரு கருத் திட்டமாகும். குறித்த இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம், மொத்தம் 225,000 அ.டொ. நிதி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

 

06. ஐக்கிய நாடுகள் உணவு விவசாய அமைப்பின்” (FAO) நிதி உதவியில் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

I. இலங்கையில் பழங்களின் பெறுமான சங்கிலி உற்பத்தி மற்றும் வணிகளவில் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு முந்துரிமை அளித்தல் ஆகியன தொடர்பான கருத் திட்டம் (Support to Improving Production and Commercialization of Priority Fruit Value Chains in Sri Lanka)

II.பயிர்ச் செய்கை நடவடிக்கையின் போது காலநிலைக்கு நெகழ்ந்து கொடுக்கக் கூடிய பாதுகாப்பான முறையில் அதிகம் அதிகமாக பயிரிடுவதற்கு நிலையான உபாயங்களை பயன்படுத்துவது தொடர்பான கருத் திட்டம் (Save and Grow Approach–Regional Strategies on Sustainable and Climate Resilient intensification of Cropping system). இந்தக் கருத் திட்டம் 2017-2020 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும்.

III. பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மரபுரிமையாக பளுகஸ்வெவ கிராமிய குளத்தைத் தாபித்தல் (Declaration of Palugaswewa Cascade tank-village System as a Globally important Agricultural Heritage)

 

07. தெற்காசிய பிராந்திய அபிவிருத்திக் கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் (SDF) நிதி உதவியில் செயற்படுத்தப்படும் கருத் திட்டங்கள்

தெற்காசிய பிராந்திய (SAARC) சிறு அளவான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறு விவசாய தொழில்முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டமைந்த பெறுமானம் சார் சங்கிலி தொடர்பான கருத் திட்டம் (Livelihood enhancement of the small farmers in SAARC region through small scale Agro-business Focusing on value Chain)

குறிக்கோள் - சிறு அளவிலான விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் அதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துதல், விவசாய தொழில்முயற்சி ஊக்குவிப்பின் உடாக தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கிராமிய பெண்களை ஊக்குவித்து, பிரதானமாக காணப்படுகின்ற உள்நாட்டு விவசாய உற்பத்திகளின் பெறுமான சங்கிலியை அபிவிருத்தி செய்தல் முதலிய அம்சங்கள் இந்தக் கருத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.  

செயற்படுத்தும்/பொறுப்புக்கூறும் நிறுவனம் - விவசாயத் திணைக்களம்/ கருத் திட்டப் பிரிவு

விஷேட பிரிவு - விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்/விற்பனை செய்தல்

கிராமிய அபிவிருத்தியின் போதும், அதே போல் கிராமிய தொழில் உருவாக்கல் நடவடிக்கையின் போதும் விவசாய உற்பத்திகளின் பொதியிடும் செயற்பாடுகள் முக்கிய ஒரு அங்கமாகும் என சார்க் பிராந்திய கூட்டங்களில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் பெறுமான சங்கிலியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள சிறு அளவிலான விவசாயிகளினது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான இந்தக் கருத் திட்டம் 8 சார்க் நாடுகளில் செயற்படுத்தப்படுகின்றது. இது ஒரு பல தரப்புக் கருத் திட்டமாகும். இதனை சார்க் பிராந்திய அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு முதலில் இலங்கையில் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு 02 வருட காலக் கருத் திட்டமாகும். 2018 ஆம் ஆண்டிற்கு 20.388 மில்லியன் ரூபாவும் மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு 8.241 ரூபாவும் என இதற்கு நிதிகள் கிடைக்கவுள்ளன. இலங்கை அரசாங்கம் 2018 ஆம் ஆண்டிற்கு 2.139 மில்லியன் ரூபாவையும் மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு 2.139 மில்லியன் ரூபாவையும் இதன் நிமித்தம் பங்களிப்புச் செய்யும்.

B. வெளிநாடுகளுடனும்/சர்வதேச அமைப்புகளுடனும் செய்து கொள்ளப்பட்டுள்ள (2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை) இரு தரப்பு மற்றும் பல தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒருங்கிணைப்பு செய்தல்.

  1. 1.இலங்கையிலிருந்து சீனாவுக்கு வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்யும் போது தாவர சுகாதாரத் தேவைகள் பற்றிய சீனாவின் தர மேற்பார்வை. ஆய்வு மற்றும் தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தல் தொடர்பான பொரு நிருவாக நிறுவனங்களுக்கும் மற்றும் இலங்கை கமத்தொழில் அமைச்சுக்கும் இடையிலான சமவாயம்.
  2. 2.இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் மற்றும் எகிப்தின் விவசாய மற்றும் காணிகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கும் இடையிலான விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலான கூட்டுறவுகள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  3. 3.ஜப்பானின் உயர் விவசாய தொழில் நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தின் வள்பிட்ட விவசாயப் பண்ணையில் அதி தொழில் நுட்பம் வாய்ந்த ஒரு விவசாயப் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  4. 4.இலங்கையின் விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை மற்றும் மலேசிய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் தேசிய விவசாய ஆராய்ச்சி முறைமையின் விஞ்ஞானிகளினது மனித வளங்கள் அபிவிருத்தி நிமித்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  5. 5.இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் மற்றும் பங்காளதேஷத்தின் விவசாய அமைச்சுக்கும் இடையில் விவசாய கூட்டுறவுகளின் நிமித்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  6. 6.சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினது உள்நாட்டு அலுவலகங்கள் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம்.
  7. 7.இலங்கை விவசாய கொள்கை சபை, கமத்தொழில் கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு மற்றும் பிலிபைனின் லொஸ் பானஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்.

C. சர்வதேச வேலையரங்குகளை/மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்துதல்

  1. சார்க் நாடுகளின் நிலைபெறுதகு விவசாய அபிவிருத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான பிராந்திய நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம்’. இந்த வேலையரங்கு சகல சார்க் நாடுகளையும் (08) பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 2019.10.23- 25 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்பட்டது.
  2. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி பற்றிய அமைப்பின் (CIRDAP) உறுப்புரிமையைப் பெற்றுள்ள 15 நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளினது நிறைவேற்றுக் கூட்டத்தில் இந்த அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தந்த நாடுகளினது கமத்தொழில் விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர்கள் அல்லது அவர்கள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகள் அதன் செயற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த 02 கூட்டங்களும் 2019.10.08 -11 ஆம் திகதி வரை இங்கு நடத்தப்பட்டன.

D. இலங்கையின் விவசாய கருத் திட்டங்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் உரிய நிறுவனங்களுடனான/உரிய அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு நிமித்தம் வருடாந்த சந்தாக் கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

 

நிறுவனம்/அமைப்பு

2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் செலுத்தப்பட்டுள்ள சந்தாக் கட்டணம்

FAO - ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய அமைப்பு

83,916.85 அ.டொ.

58,345.57 யுரோ

AARDO - ஆசிய ஆபிரிக்க கிரமிய அபிவிருத்தி அமைப்பு

28,900 அ.டொ.

APPPC - ஆசிய பசுபிக் பிராந்திய தாவரங்ள் பாதகாப்புக்கான ஆணைக்குழு

834 அ.டொ.

CIRDAP - ஆசிய பசுபிக் பிராந்திய ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையம்

17122 அ.டொ.

 

 

2020ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள கருத் திட்டங்கள்

சந்தாக் கட்டணம்

மதிடப்பட்டுள்ள தொகை - 2020 (மில்.ரூ.)

சந்தாக் கட்டணக் கொடுப்பனவுகள்

FAO - ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய அமைப்பு

26.46

AARDO - ஆசிய ஆபிரிக்க கிரமிய அபிவிருத்தி அமைப்பு

5.33

APPPC - ஆசிய பசுபிக் பிராந்திய தாவரங்ள் பாதகாப்புக்கான ஆணைக்குழு

0.14

CIRDAP - ஆசிய பசுபிக் பிராந்திய ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையம்

3.0

CAPSA -

5.67

ITPGRFA -

0.4

உப மொத்தம்

41.00

சர்வதேச வேலையரங்குகள் மற்றும் மாநாடுகள்

7.00

APO - 03

12.00

இலங்கையில் வர்த்தகளவில் ஈரப்பலாவை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கருத் திட்டம்

1.00

மொத்தம்

61.00

 

 

 

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்