விவசாய நடவடிக்கையில் சம்பந்தப்படும் நிறுவனங்கள் அடைந்த ஆராய்ச்சி சார்ந்த பெறுபேறுகளை விவசாயிகளுக்கு மத்தியில் பரப்புவதற்கான ஒரு பொறி முறையாக இந்த மாதிரிக் கிராமங்களைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட பல வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு இந்தப் பொறிமுறை சாத்தியமான ரீதியில் பங்களித்துள்ளது.
பயிர் உற்பத்திக் கட்டத்திலிருந்து விவசாயிகளின் நன்மைக்கான நுகர்வுக் கட்டம் வரை புதிய தொழில்நுட்பங்களைப் பிரதிபலிக்கச் செய்வதும், அதனால் உணவு மற்றும் போஷாக்குப் பாதுகாப்பு என்பவற்றைத் தாபிப்பதை நோக்கிய கிராமியத் துறைப் பங்களிப்பை அதிகரிப்பதும், ஆகக்கூடிய சாத்தியமான மட்டம் வரை இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் விவசாயிகளுக்குப் போதித்தல் என்பன இந்தப் புதிய எண்ணக்கருவின் குறிக்கோளாகும்.
இந்த மாதிரிக் கிராமங்கள் விவசாயிகளை குழுவாக ஒழுங்கமைப்பதன் மூலம் தாபிக்கப்படும். உற்பத்தித்திறனை அதிகரித்தல், அறுவடைக்கு முற்பட்ட கால / அறுவடைக்குப் பிற்பட்ட கால இழப்புகளைக் குறைத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், அதிக விளைச்சலைத் தரும் பயிர் வகைகளை உற்பத்தி செய்தல் என்பன தொடர்பில் கிடைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் இந்தக் கிராமங்களினுள் செயற் படுத்தப்படும். அதற்கிணங்க ஏனைய விவசாயிகளுக்கு மத்தியில் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை இலகுவாகப் பரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கமத்தொழில் அமைச்சின் ‘நாம் பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வழங்கப்படுகின்றன. அதன் பிரகாரம், இந்த வருடத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.