Header jpg

   



சேதனப் பசளையும் அதன் பயன்பாடும் பற்றிய மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்

இந்தக் கருத்திட்டத்தினூடாக 2012 ஆம் ஆண்டில் சேதனப் பசளை உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பில் ஐந்து வலயங்களைப் பிரதிபலிக்கின்ற மாதிரியாக அம்பாறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இரண்டு உள்ளக மாகாணப் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சேதனப் பசளை உற்பத்தியையும் பாவனையும் மேம் படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், அத்தகைய பிரதிபலிப்புகளினூடாக ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கி நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாகந்துர பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் இந்தக் கருத்திட்டத்தின் முன்னோடி நிறுவகமாகத் தொழிற்பட்டு வருகின்றது. சேதனப் பசளை உற்பத்தியும் அதன் பயன்பாடும் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதில் பயனளிக்கக்கூடிய ஒரு புதிய கட்டிடமும் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

1.1 அடிப்படைக் குறிக்கோள்கள்.

  • சேதனப் பசளை உற்பத்தியையும் அதன் பாவனையும் அதிகரிக்கச் செய்தல்.
  • பயிர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
  • மண் வளத்தை அதிகரிக்கச் செய்தல்.
  • இரசாயனப் பசளைப் பாவனையைக் குறைத்தல்.
  • இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைத்தல்.

1.2 குறுங்கால நோக்கங்கள்

  • பயிர்ச் செய்கைகளின் நிமித்தம் இலகுவில் கிடைக்கக்கூடிய சேதனப் பதார்த்தங்களின் பாவனையை அனுகூலப்படுத்துதல்.
  • இரசாயனப் பசளைக்கு மேலதிகமாக சேதனப் பசளைப் பாவனையை நோக்கி விவசாயிகளை ஊக்குவித்தல்.
  • பயிர்ச் செய்கைகளில் பயன்படுத்தப்படுகின்ற இரசாயனப் பசளையின் வினைத் திறனை அதிகரிக்கச் செய்தல்.
  • மண் வளத்தை மேம்படச் செய்தலும் மண் வள சாத்தியத்தைப் பேணுதலும்.
  • உரிய நியமங்களைக் கொண்டு சேதனப் பசளை உற்பத்தியைப் பிரபல்லியப் படுத்துதல்.
  • சுற்றாடல் மாசடைதலைக் குறைத்தல்.

2.0 நன்மைகள்

  • மேம்பட்ட பயிர் உற்பத்தி.
  • பயிர்ச் செய்கைகள் பொருளாதார ரீதியில் அனுகூலம் அடைதல்.
  • சேதனப் பசளை உற்பத்தி அதிகரித்தல்.
  • சேதனப் பசளைப் பாவனை அதிகரித்தல்.
  • இரசாயனப் பசளைப் பாவனை குறைதல்.
  • சேதனக் கழிவுகளின் முறையான அகற்றலுக்கு வழி கிட்டுதல்.
  • நீர் அசுத்தம் குறைதல்.
  • மண்ணரிப்பு குறைதல்.
  • முழு நேரமும் மண் வள சாத்தியம் கிடைத்தல்.

3.0 நடைமுறைப்படுத்தும் பிரதேசங்கள்

  • அம்பாந்தோட்டை உள்ளக மாகாணப் பிரிவுகள்.
  • அம்பாறை உள்ளக மாகாணப் பிரிவுகள்.
  • மட்டக்களப்பு மாவட்டம்.
  • திருகோணமலை மாவட்டம்.

5.0 2012 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடுகள்

  1. அம்மாந்தோட்டை - ரூ. 25 மில்லியன்
  2. அம்பாறை - ரூ. 25 மில்லியன்
  3. மட்டக்களப்பு - ரூ. 05 மில்லியன்
  4. திருகோணமலை - ரூ. 05 மில்லியன்.
  5. மாகந்துர விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் - ரூ. 5.915 மில்லியன்
  6. கட்டிட அபிவிருத்தி - ரூ. 20 மில்லியன்
  7. விவசாயத் திணைக்களம் மற்றும் தொடர்ச்சிகள் - ரூ. 3.955 மில்லியன்
  8. கமத்தொழில் அமைச்சு மற்றும் தொடர்ச்சிகள் - ரூ. 10.13 மில்லியன்

6.0 நன்மை பெறுநர்களின் எண்ணிக்கை

  • அம்மாந்தோட்டை                         10,000
  • அம்பாறை                                10,000
  • மட்டக்களப்பு                            1,740
  • திருகோணமலை                          1,740

6.0 செயற்பாடுகள்

  • பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
  • சேதனப் பசளை உற்பத்தி
  • செய்துகாண்பிப்புகள்
  • கள நாட்கள்
  • ஊடக நிகழ்ச்சித்திட்டங்கள்

7.0  விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விவசாய உபகரணங்கள்

  • மூன்று விரல் முள்ளுக்கிண்டி    01
  • கருப்புப் பொலித்தீன் கட்டு 750      3.5 Kgs
  • பாறைப் பொசுபேற்று                      25 Kgs      
  • பசளை இனொகியுலம்ஸ்

8.0  எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள்

  • ஒரு விவசாயி 2 மெற்றிக் டொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய வேண்டும்.
  • நான்கு மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட மொத்த சேதனைப் பசளை உற்பத்தி 48,000 மெற்றிக் டொன்.

 

 

 

சமூக வலையமைப்பு

 Facebook
                         
         கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல்வளங்ஙள் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்