English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயத்தை முதன்மைப்படுத்திய எமது பிரதமர்

1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 13-வது உறுப்பினராகிய மறைந்த பிரதமர் தி.மு. ஜயரத்ன அவர்கள் இந்த நாட்டு மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு முற்போக்கு அரசியல்வாதியாக பிரதிபலித்தார்கள். 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றம் நுழைந்த தி.மு. ஜயரத்ன அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையை கிராம சபையிலிருந்து ஆரம்பித்தார்கள். ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் உருவாக்கிய நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக, அமைச்சர் ஒருவராக விளங்கி அந்தக் கட்சியின் பொது செயலாளராக முன்னேறிச்சென்று இந்த நாட்டின் 14-வது பிரதம மந்திரியாக அரசியலில் உயர் பதவி வரை பயணித்தார்கள்.

 

இந்த நாட்டின் விவசாயமும் மற்றும் தி.மு. ஜயரத்த அவர்களின் நாமமும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன. மறைந்த தேசாபிமானி டீ.எஸ். சேனாநாயக்க, சேர் ஹெக்டெர் கொப்பேகடுவ போன்ற இந்த நாட்டை விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு இட்டுச்சென்ற கமத்தொழில் அமைச்சர்களின் அடிவழி சென்று அண்மை காலத்தில் மக்களுக்காக சேவை செய்து புகழ்நாமம் சூடிய கலாநிதி தி.மு. ஜயரத்ன அவர்கள் கமத்தொழில் அமைச்சராக எண்ணற்ற பணிகளை செய்துள்ளார்கள்.

 

உலக வங்கியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் விவசாயிகளின் பக்கம் நின்று உர நிவாரணத்தை அறிமுகப்படுத்தியதும் தி.மு. ஜயரத்ன அவர்களே. அவர் கமத்தொழில் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச்செய்தார். 2007 ஆம் ஆண்டில் 2000 மெற்றிக் டொன் அரிசியை ஏற்றுமதி செய்ய முடிந்தமையும் அவரின் தூரநோக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் பயனாகவேயாகும். வகா லங்கா வகா எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியமை, கமக்காரர் ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை செயற்படுத்தியமை, கொவிசெவன மந்திர கட்டிடங்களை நிர்மாணித்தமை, நாடு முழுதிலும் காணப்படுகின்ற சகல கமநல சேவை நிலையங்களுக்கும் மற்றும் விவசாய அபிவிருத்திற்கும் என 11,000 கள உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தமை உட்பட பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு கலாநிதி தி.மு. ஜயரத்ன அவர்கள் கமத்தொழில் அமைச்சராக அயராது உழைத்தார்கள். கொவிஜன மந்திரவை நிர்மாணித்து அமைச்சையும் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து விவசாயிகளுக்கு வதிகளைப் பெற்றுக் கொடுத்த தூரதர்ஷனியாவார். விவசாயிகளின் முன்னேற்றத்தின் நிமித்தம் ‘கொவிசெத்த லொத்தரை’ அறிமுகப்படுத்தி எதிர்காலத்திற்கு பயனளிக்கும் சேவைகளை செய்த கமத்தொழில் அமைச்சர் அவர் என்பதில் எந்தவித வாதமும் கிடையாது. அன்று பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் நாடு பூராகவும் விஜயம் செய்து தி.மு. ஜயரத்ன கமத்தொழில் அமைச்சர் அவர்கள் இந்த நாட்டு விவசாயிகளுக்கு உயிர் ஊட்டினார்கள்.

 

2000 ஆம் ஆண்டு உலக உணவுகள் அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவராக கலாநிதி தி.மு. ஜயரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டதும் கூட அவர் விவசாயத்திற்கு நல்கிய பங்களிப்பை உலக மக்கள் மதித்ததாலாகும். சர்வதேச ரீதியில் எமது நாட்டிற்கு அவர் புகழ் சேர்த்தார்.

 

பிரதமராகவும் மற்றும் புத்த சாசன சமய அலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகித்ததால் 2600-வது சம்புத்த ஜயந்தியை 2010 ஆம் ஆண்டு வைபவ ரீதியாக ஏற்பாடு செய்து புத்த சாசனத்திற்கு உலகெங்கும் புதிய ஒரு யுகத்தை தோற்றுவித்தார். கம்பளை அம்புளுவாவ உயிர் பல்லினத்துவ கட்டிடத்தொகுதியினதும் சமய ஸ்தலங்களினதும் ஸ்தாபகரும் தி.மு. ஜயரத்ன அவர்களே. 1931 ஆம் ஆண்டு கம்பளை தொளுவ பிரதேசத்தில் பிறந்து தொளுவ வித்தியாலத்தில் ஆசிரியர் தொழிலில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்து கிராம சபை முதல் நாட்டின் பிரதம மந்திரி வரை பயணித்து இந்த நாட்டு மக்களின் உள்ளங்களில் அழியாதிருந்து, அப்பாவி மக்களுக்காக என்றென்றும் நிலைத்திருக்கும் சேவைகளை செய்த கலாநிதி தி.மு. ஜயரத்ன அவர்கள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மரணித்தார்கள். அவர்கள் மரணித்து ஓர் ஆண்டு நிறைவடைந்தாலும் மக்களின் உள்ளங்களில் நிலைத்திருக்க காரணம் தனது அரசியல் வாழ்க்கையில் கிராமிய தன்மையை அறிந்து, கிராம மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை இனங்கண்டு வரையறைக்கு அப்பால்சென்று அவர்கள் செயன்முறை ரீதியாக செய்த அயராத சேவைகளே.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020 09:54

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்