English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயிகளை கொலை செய்தாவது ஆட்சி அதிகாரத்திற்கு வர முயற்சிக்கும் எதிர்க்கட்சியின் சூழ்ச்சியை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அம்பலத்தினார்கள்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் மன்னிப்பு கிடையாது. ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள்

 Agri Image 01

v சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்

உலர்ந்த நாட்டு நெல் 50 ரூபா

உலர்ந்த சம்பா நெல் 52 ரூபா

உலராத ஈர நெல் 44 ரூபா

v விவசாயிகளின் சகல நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தயார்

v நுகர்வோரை காக்கும் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் நுகர்வோர் சட்டத்திற்கு புதிய திருத்தங்கள்

v ஒரு இலட்சம் மெற்றிக் அளவு நெல்லை இறக்குமதி செய்யும் முகமாக சர்வதேச போட்டி விலையில் கேள்வி மனுக்கள் அழைக்கப்படும்

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினதும் மற்றும் வர்த்தக, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களினதும் பங்குபற்றலில் ஒன்றிணைந்த ஒரு கூடக சந்திப்பு இன்று கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. சிறுபோக பயிர் செய்கை காலத்தில் விளையும் நெல்லை கொள்வனவு செய்தல், அரிசியின் கட்டுப்பாட்டு விலைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது நிலவி வருகின்ற உரம் சம்பந்தமான பிரச்சினைகள் என்பன தொடர்பாக இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினார்கள். அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளை விடவும் அதிகளவு விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிராக இது வரை அறவிடப் பட்டு வந்த 2500 ரூபா தண்டப் பணத்தை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் சட்டத்திற்கு 75 வகை திருத்தங்களை உள்ளடக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அந்த சகல திருத்தங்களையும் விரைவில் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதாகவும் இந்த ஊடக சந்திப்பின் போது அமைச்சர்கள் தெரிவித்தனர்.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சிறுபோக காலத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் காணிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இருபத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் டொன் அளவான நெல்லை அறுவடை செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் நாடளாவிய ரீதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையினுடைய களஞ்சியசாலைகள் மூலம் ஆரம்பிக்கப்படும். உலர்ந்த நாட்டு நெல்லை 50 ரூபாவு, உலர்ந்த சம்பா நெல்லை 52 ரூபாவு, உலராத ஈர நெல்லை 44 ரூபா என்ற உத்தரவாத விலைகளில் சகல வகை நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகவுள்ளது. சிங்களப் புத்தாண்டில் இருந்து 03 மாதங்களுக்கு நாம் அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்து அந்த அரிசியாக்கி நுகர்வோருக்கு நியாய விலையில் சகல சதொச, கூட்டுறவு சங்கக் கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக் கொடுத்தோம். சிறுபோக காலத்தில் நெல்லை கொள்வனவு செய்த பின்னர் வர்த்தக அமைச்சுடன் இணைந்து அரிசியை மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம். விவசாயிகளுக்கு உத்தரவாத விலை மற்றும் நுகர்வோருக்கு நியாய விலை என்பதே எமது கொள்கையாகும். சில வியாபாரிகள் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல்லை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 01 கிலோ கிராம் அரிசியை 225 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர். அதிக இலாபத்தை பெறுகின்றனர். மக்களை சுரண்டி வாழுகின்றனர். ஆகையால் நுகர்வோர் விவகாரங்கள் பற்றிய அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள் புதிய ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். 2500 ரூபாவாக செலுத்தப்பட்டு வந்த தண்டப் பணம் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும். வருடாந்தம் பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயர் காணிகளிலும், பெரும்போகத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் காணிகளிலும் எமது நாட்டில் நெல் பயிரிடப்படுகின்றது. ஒட்டுமொத்த விளைச்சலை பார்க்கும் போது அது நுகர்வை விடவும் அதிக அளவில் மிகையாகவுள்ளது. அரிசியை பதுக்குவதால் அரிசிப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து, அதிக விலையில் அரிசியை விற்பனை செய்கின்ற மாஃபியா இந்த நாட்டு மக்களை ஒரு பிடி சோற்றை உண்ண விடுவதில்லை.

 

முதலாளிமார்களுக்கு தேவையான விதத்தில் அரிசியின் விலையை கட்டுப் படுத்த முடியுமாயின் அவ்வாறான ஒரு அரசாங்கம் தேவையில்லை. எனவே, அரிசி முதலாளிமார்களுக்கு தேவையான விதத்தில் அன்றி நுகர்வோருக்கு நியாய விலையில் கிடைக்கக் கூடிய வகையில், குறித்த தண்டப் பணத்தை அதிகரித்தாவது அரிசியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக ஒரு நேரடி தீர்மானத்தை மேற்கொள்ள அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

அது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். சேதன உரங்கள் வேண்டாம், இரசாயன உரங்கள் வேண்டும் என இன்று ஆர்ப்பாட்டம் செய்வது சஜித் பிரேமதாசவும், மக்கள் விடுதலை முன்னனியும் (ம.வி.மு.) தான். அவர்கள் கூறுவது விவசாயிகளுக்கு நஞ்சை கொடுங்கள் என்று. ஏனைய நாடுகளில் இருந்து நெல்லை இறக்குமதி செய்து விலையை கட்டுப்படுத்தாமல், அரிசி மாஃபியாவுக்கு தேவையான விதத்தில் விலையை அதிகரியுங்கள் என்று நாமல் கருணாரத்ன ஆதரித்து பேசுகின்றார். ம.வி.மு. மக்களின் பக்கமா அல்லது பெரும்பான்மை தேசிய கம்பனிகள் மற்றும் அரிசி வியாரிகள் பக்கமா இருக்கின்றது என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்வார்கள். 5% வீத உரப் பற்றாக்குறை சில பிரதேசங்களில் காணப்படுகின்றது. அந்தப் பிரச்சினையும் தற்பொழுது தீர்க்கப்பட்டு வருகின்றது. சிறுபோகத்தில் நிவாரண உரங்கள் பகிர்ந்தளிப்பு 100% நிறைவடைந்துள்ளது. மரக் கறிப் பயிர்களுக்கு தேவையான உரங்கள் அரசாங்க உரக் கம்பனிகளின் வசம் உள்ளது. கமநல சேவை நிலையங்களின் ஊடாக தேவையான உரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் நாம் செய்கின்ற போது விவசாயிகள் உரங்களை கொடு எனும் அளவுக்கு எதிர்க்கட்சி அவர்களை தூண்டி வீதிக்கு இறக்கி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துகின்றது. ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகளை ஈடுபடுத்தி விவசாயிகளை கொலை செய்தாவது ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியுமா என்று அது பார்க்கின்றது. நாட்டில் தேசிய ரீதியில் இவ்வாறான மாற்றங்களை அறிமுகப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ம.வி.மு, ஐ.தே.ச. மக்களை இவ்வாறு தவறாக வழிநடத்தியுள்ளன. கமநல சேவை நிலையங்களை எரித்து அழித்த ம.வி.மு. இன்று அவற்றின் முன்னால் நின்று சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றது. சுற்றாடல்நேயமான சேதன உர உற்பத்தி கைத்தொழிலை முன்னிட்டு எடுத்த நடவடிக்கையை மீளப்பெற அரசாங்கம் தயாரில்லை. விவசாயிகள் இரசாயன உரங்களை கேட்பதில்லை.அவர்கள் கேட்பது உரம். எனவே விவசாயிகளுக்கு தேவையான சகல சேதன உரங்களும், அதற்கு தேவைப் படும் நிதிகளும், நிவாரணங்களும், அறிவும், தொழில் நுட்பமும் அரசினால் உரிய முறையில் பெற்றுக் கொடுக்கப்படும். சரியான கால நேரத்திற்கு அவை பெற்றுக் கொடுக்கப்படும். ம.வி.மு. மற்றும் சமகி ஜன பளவேகய ஆகிய கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. ஏமாற வேண்டாம். விவசாயிகளின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்

நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்கள்வாழ்க்கையில் வயிற்றுப் பசிக்கு போராடும் மக்களுக்கு அரிசி ஒரு அத்தியாவசிய தேவையாகும். வரலாற்று முழுதிலும் அந்த நிவாரணம் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. கமத்தொழில் அமைச்சின் ஊடாக கிடைத்த அரிசியை கடந்த வாரம் வரை நிவாரண விலையில் நாம் பெற்றுக் கொடுத்தோம். 03 மாதங்களாக இவ்வாறு அரிசியை பெற்று கொடுத்தோம். கூட்டுறவு சங்கக் கடைகளின் கைவசமிருக்கின்ற தொகையான நெல்லை அரிசியாக்கி நாளை முதல் சதொச மற்றும் கூட்டுறவு சங்கக் கடைகள் ஊடாக நியாய விலையில் பெற்றுக் கொடுப்போம். நாம் நியாய விலையில் விற்பனை செய்யும் போது ஒரு சில வியாபார நிலையங்கள் அரிசியை 130 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. பொருட்களை மிக அதிக விலையில் விற்பனை செய்வதற்கு எதிராக ஆயிரக் கணக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2500 ரூபா தண்டப் பணத்தை அரிசி வியாபாரிகள் சுலபமாக செலுத்தி விட்டு அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் நிலை காணப்படுகின்றது. ஆகையால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு 75 வகையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையை விடவும் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த தண்டப் பணத்தை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதும் கூட அந்த திருத்தங்களில் உள்ளடங்குகின்றது. அத்தகைய திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பில் நிறைவேற்றப்படும். அரிசிப் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் பாதுகாப்பான ஒரு இருப்பு தொகையை பேணிச் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக, நுகர்வோர் விவகாரங்கள், நிதி, விவசாயம், தொழில் நுட்பம் ஆகிய விடய அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய ஒரு பெறுகைக் குழு அரிசியை இறக்குமதி செய்வது பற்றி ஆராயும். அரசியின் இறக்குமதியில் வரலாறு முழுதிலும் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. அதிக வழக்குகள் குவிந்து காணப்படுகின்றன. ஆகையால், எனது மதிப்பை அத்தகைய ஒரு நிலைக்கு ஆளாக்கிக் கொள்வதற்கு நான் தயாரில்லை. அதனால் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு பெறுகைக் குழுவை நான் நியமித்தேன். மிகவும் வெளிப்படையாக இந்த இறக்குமதி விடயத்தில் நாம் செயல்படுகின்றோம். சர்வதேச போட்டி விலைகளின் அடிப்படையில் நாம் கேள்வி மனுக்களை அழைத்துள்ளோம். அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு 500 டொலர் செலுத்த வேண்டும். பச்ச அரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, கீரி சம்பா அரிசி முதலிய சகல அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப் படும். பற்றாக்குறை இல்லாமல் நியாய விலையில் அரிசியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சு, கமத்தொழில் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்

voice VOICE CLIP

 Agri Image 02  Agri Image 03

Agri Image 04  Agri Image 05

Agri Image 06


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 05 ஜூலை 2021 05:53

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்