English (UK)SinhalaSriLankaTamilIndia


பெரும் பலம் வாய்ந்த தரப்புகள் மேற்கொள்ளும் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் மாஃபியாவை எதிர்க்க தயார்.

WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (4)

11 இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன.

அரசாங்கத்துடன் சம்பந்தமான 11 இடதுசாரி கட்சிகள் அடங்கிய ஒரு அமைப்பின் கட்சித் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகளும் இன்று கமத்தொழில் அமைச்சில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அடங்கலாக அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தனர். பல அமைச்சுக்களின் செயலாளர்களும் அதே போல் கல்விமான்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இரசாயன உரங்களையும், கிருமிநாசினிகளையும்களைநாசினிகளையும் தடைசெய்யும் சவாலுக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இதன் போது சேதன உரங்களின் தேவை, உற்பத்தி பகிர்ந்தளிப்பு, நீண்டகால மற்றும் குறுங்கால வேலைத் திட்டம் என்பன பற்றியும் கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் பிரதிநிதிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த சந்திப்பின் போது அந்தந்த கட்சித் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகளும் செயன்முறை ரீதியாக எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

விவசாய கிராம வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதும் மண் பரிசோதனைகள் நாடு முழுவதிலும் செயற்படுத்தப்படுவதும் பற்றி கட்சித் தலைவர்கள் கமத்தொழில் அமைச்சரிடம் வினவினார்கள்.

கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க அவர்கள், அதிகாரிகள், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் கலாநிதி ப்ரியத்பந்து விக்ரம மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ப்ரியந்த யாப்பா ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் வாசுதேவ நாயணக்கார (ஜனநாயக இடதுசாரி முன்னணி)

03 மணித்தியாலங்களாக சேதன உரங்கள் வேலைத் திட்டம் பற்றி ஆராயப்பட்டது. சேதன உரங்கள் மைய விவசாயப் புரட்சி பற்றி நாம் கதைத்தோம். நெல் விவசாயத்திலிருந்து சகல பயிர்களுக்கும், பெருந்தோட்டக் கைத்தொழில்களுக்கும் தேவையான பயணம்தான் இந்தப் பயணம். சேதன உரங்களின் தேவை, உற்பத்தி, பகிர்ந்தளிப்பு பற்றி நாம் ஆராய்ந்தோம். இரசாயன உர கம்பனிகளும் மற்றும் அவற்றின் பின்னாலுள்ள பெரும் பலம் வாய்ந்த தரப்புகளும் இந்த வேலைத் திட்டத்திற்கு தடையாகவுள்ளன. நாம், அனைத்தையும் வெற்றிகொள்ள வேண்டிய விதம் பற்றி ஆராய்ந்தோம். இது பற்றிய சிறந்த ஒரு மனோபாவத்தை ஏற்படுத்த இன்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களும் மற்றும் அதிகாரிகளும் பெற்றுத் தந்த அறிவு மிகவும் முக்கியமானதாகும்.  

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

அரசாங்கத்துடன் சம்பந்தமான 11 இடதுசாரி கட்சிகள் அடங்கிய ஒரு அமைப்பினால், உரங்களின் தடை சம்பந்தமாக கிடைத்த வெற்றி பற்றி அதன் கருத்துக்கள் எம்மிடம் தெரிவிக்கப்பட்டன. அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு தேவையான சகல உதவிகளையும் இந்த தேசிய வேலைத் திட்டத்திற்கு பெற்றுத் தருவதாக இந்த அமைப்பை பிரதிநிதிப்படுத்தியவர்கள் குறிப்பிட்டனர். இது பற்றிய சரியான அறிவும், எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றிய பரந்த அறிவும் கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கட்சித் தலைவர்கள், அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மற்றும் அமைச்சின் செயலாளர்களும், கல்விமான்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க (இலங்கை கொமியுனிஸ்ட் கட்சி)

இதற்கான குறுங்கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றி நாம் இன்று அறிந்து கொண்டோம். இந்த கடுமையான புரட்சிகரமான மாற்றத்திற்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய சகல உதவிகளையும் நாம் பெற்றுக் கொடுப்போம். சேதன உர மைய விவசாய புரட்சியின் வெற்றிக்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்குவோம்.

அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா (தேசிய காங்கிரஸ் கட்சி)

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தும் முகமாக முயற்சி எடுக்கப்பட்டது. விஷம் நீங்கிய உணவுகளை எமது மக்களுக்கு நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். எமக்கு தேவையானவற்றை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும். ஆகையால், எங்களுடைய உரங்களையே பாவிக்க வேண்டும் என்ற இந்தக் கொள்கைக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம்.

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர (தேசிய சுதந்திர முன்னணி)

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அவர்கள் விவசாயத்திலும் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழிலும் புரட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னெடுத்த வேலைத் திட்டம் பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. ஆகையால் அதற்கு ஒரு வெற்றிகரமான வேலைத் திட்டமும் மற்றும் அதற்கு முகம்கொடுக்கக் கூடிய ஒரு வேலைத் திட்டமும் காணப்படுவது இன்று ஊர்ஜிதமாகியது. இந்த புரட்சிகரமான மாற்றத்திற்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய சகல உதவிகளையும் நாம் பெற்றுக் கொடுப்போம்.  

பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அத்துரலியே தேரர்

ஜனாதிபதி அவர்கள் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா என நாம் ஆராய்ந்தோம். மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெளிவுபடுத்திய பின்னர் இதனை செய்ய முடியும் என்பது உறுதியாகியது. சகலரும் இதனை வெற்றிகொள்ள உதவ வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன (இலங்கை மக்கள் கட்சி)

சேதன உரங்களை பாவித்தல் மற்றும் இரசாயன உரங்களை தடைசெய்தல் பற்றிய தீர்மானத்திற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்போம். அதன் நிமித்தம் நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். சிறுபோகத்தில் உரங்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக நாம் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க (யுத்துகம ஜாத்திக்க சன்விதானய)

இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை போல இந்த சவாலையும் நாம் வெற்றி கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு நாம் எப்பொழுதும் ஆதரவளிப்போம். அதற்கான அர்ப்பணிப்பை நாம் மதிக்கின்றோம்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஸ் பத்திரண

பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குரிய சேதன உரங்களை பாவிப்பதற்கும், தேவைக்கும், உற்பத்திற்கும் என எம்மமிடம் ஒரு வேலைத் திட்டம் உண்டு. ஒரு 03 ஆண்டு திட்டம் அடங்கிய ஒரு வேலைத் திட்டத்தை நாம் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைப்போம். இந்த மாற்றத்திற்கு அமைவாக பெருந்தோட்டப் பயிர்களினதும் மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்களினதும் பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கு தேவையான சகல வேலைத் திட்டங்களும் எம்மிடம் உண்டு. 

 

அமைச்சர் வாசுதேவ நாயணக்கார voice

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேvoice

 

பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அத்துரலியே தேரர்voice

 

 

WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (1)  WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (2)

 

 WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (3)  WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (6)

 

WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (7)  WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (8)

 

WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (9)  WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (10)

 

WhatsApp Image 2021-06-11 at 15.33.10  WhatsApp Image 2021-06-11 at 15.33.10 (5)

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 14 ஜூன் 2021 11:57

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்