English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் போதும் மற்றும் நுகர்வோர் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யும் போதும் எந்த ஒரு இடையூறும் அவர்களுக்கு ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது

0H9A0809

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்

 

  • பொருளாதார மத்திய நிலையங்களில் சுகாதார சட்டதிட்டங்களை சரியான முறையில் செயற்படுத்துங்கள்.
  • பாதுகாப்பின் நிமித்தம் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும்மற்றும்தேவைக்கு ஏற்றவாறு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்துங்கள்.
  • தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டிருப்பதால் ஏனைய பொருளாதார மத்திய நிலைங்களுக்கு அதனால் தாக்கம் ஏற்படாத வகையில் ஒரு வேலைத் திட்டத்தை தயாரித்து செயற்படுத்துங்கள்.

 

தற்பொழுது நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டாலும், கொழும்பு பொருளாதார மத்திய நிலையம் அடங்கலாக ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தாக்கம் ஏற்படாத வகையில் முறையான ஒரு வேலைத் திட்டத்தை தயாரித்து செயற்படுத்துமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களினது முகாமையாளர்களை அமைச்சுக்கு அழைத்து நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு அறிவுறுத்தினார்கள். இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, அந்த அமைச்சின் இராஜாங்க செயலாளர் அனில் விஜேசிறி அடங்கலாக அமைச்சின் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாலில் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையங்களில் சுகாதார சட்டதிட்டங்களை கடுமையாக செயற்படுத்துமாறும், அதன் நிமித்தம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் அடங்கலாக பாதுகாப்பு பிரிவுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும் இதன் போது அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தம்புள்ள பொருளார மத்திய நிலையம் மூடப்பட்டிருப்பதால் விவசாயிகளின் உற்பத்திகளின் விற்பனைக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களில் மாற்றுவழிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன் போது அறிவுறுத்தப்பட்டது. பொருளாதார மத்திய நிலையங்களில் காய்ச்சல் வெப்பநிலையை சோதிப்பதற்கான வெப்பமாணி அடங்கலாக தேவையான உபகரணங்களை உடனடியாக பெற்றுக் கொடுக்குமாறும் இதன் போது கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுறுத்தினார்கள். தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால் அல்லது நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படக் கூடாது எனவும், அதே போல் மரக்கறி வகைகளினதும் மற்றும் பழ வர்க்கங்களினதும் விலைகளை ஒருபோதும் அதிகரிக்க கூடாது எனவும், இதன் போது அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள். வர்த்தக சங்கங்களின் நேரடியான தலையீடு இதன் நிமித்தம் அவசியம் எனவும், ஆகையால் அதற்கு தேவையான வேலைத் திட்டங்களை வர்த்தக சங்கங்களுடனும் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமைத்துவங்களுடனும் ஒன்றிணைந்து செயற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள். தற்போதைய நிலையில் விவசாயிகளையும் மற்றும் நுகர்வோர்களையும் கஷ்டத்திற்கு ஆளாக்காமல் சகல பொருளாதார மத்திய நிலையங்களினதும் முகாமையாளர்களும் மற்றும் வர்த்தக சங்கங்களும் முறையாக, சுகதார ரீதியில் ஆரோக்கியமான முறையில் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 0H9A0812 0H9A0829

0H9A0824

  

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021 09:34

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்