English (UK)SinhalaSriLankaTamilIndia


சிறுபோகத்திலிருந்து உரங்களை பெற்றுக் கொள்ள மண் பரிசோதனை அறிக்கை கட்டாயப்படுத்தப்படும்... அந்த அறிக்கையை பெறுவதற்கு விவசாயிகளுக்கு சகல வசதிகளும்... ஒவ்வொரு கமநல சேவை நிலையத்திற்கும் மண் பரிசோதனை உபகரண பொதி... நாடு முழுதிலும் விழிப்பூட்டும் நடவடிக்கை ஆரம்பம

  • IMG-20210409-WA0002
  • புதிய ஒரு முறையியல்

50% வீத உர இறக்குமதியை குறைக்கும் இலக்கு

 

  • 05 ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளுக்கு விஷம் பருகக்கொடுத்தது

 

  • தரமான உரங்களை இறக்குமதி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

 

  • தரமான உரங்களை இறக்குமதி செய்வதில் எந்தவொரு கேள்வி மனுவின் கீழும் எந்தவொரு இறக்குமதி தரப்பும் விண்ணப்பிக்கவில்லை

 

  • 05 ஆண்டுகளாக உலோக பதார்த்தம் அதிகளவு அடங்கிய உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன

 

எதிர்வரும் சிறுபோகத்தில் இருந்து உரங்களை பெற்றுக் கொடுக்க மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் விநியோகிக்கப்படும் அறிக்கை கட்டாயமாக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவிக்கின்றார்கள். வரலாற்றில் முதல் தடவையாக நாடு முழுதிலும் சகல மாவட்டங்களிலுமுள்ள காணிகளில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உரங்களை பெற்றுக் கொடுக்கும் ஒரு தேசிய வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

சகல கமநல சேவை நிலையங்களுக்கும் மண் பரிசோதனை உபகரண பொதிகளை பெற்றுக் கொடுப்பதால் விவசாயிகளுக்கு இலகுவாக மண் பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என இன்று காலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் கண்டி மாவட்டத்தின் விவசாய திணைக்களத்தினது தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்ற வேளையில் அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

 

மண்ணை பரிசோதிப்பது எவ்வாறு,அந்த மண் பரிசோதனை உபகரண பொதிகளை உபயோகிப்பது எவ்வாறு, விவசாயிகளுக்கு அது பற்றிய தொழில் நுட்பங்களை கிடைக்கச்செய்வது எவ்வாறு என்பது பற்றிய அறிவு இதன் போது விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், விவசாய ஆலோசகர்கள் ஆகியோருக்கு பெற்றுக் கொடுக்கப்படும். கண்டி மாவட்டத்தில் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இருபத்து ஐந்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும்.

 

மண்ணை பரிசோதிப்பது பற்றிய தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள், எமது நாட்டின் விவசாயத்திற்கு 2500ஆண்டு கால வரலாறு இருக்கின்றது. அன்று தொட்டு இன்று வரை வரலாற்றில் இன்றைய நாள் மற்றொரு விஷேட நாளாகும். அதிக உரங்களை இட்டால் அதிகளவு விளைச்சல் கிடைக்கும் என எமது நாட்டு விவசாயிகள் நினைத்திருந்தனர். இவ்வாறு மண்ணை பரிசோதித்து உரங்களை இடுவது பற்றிய ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்த இன்று வரை முடியவில்லை.

 

இதனை செயற்படுத்த முயற்சித்து, அதிக நிதிகளை இதன் நிமித்தம் செலவு செய்தாலும் எவராலும் இதனை செய்ய முடியாமல் போனது. காரணம் உரங்களை இறக்குமதி செய்யும் தரப்புகள் அந்த வேலைத் திட்டத்தை பார்க்கிலும் மேலோங்கி நின்றன. நாட்டிற்கு உரங்களை இறக்குமதி செய்ய தேவை இருந்ததேயொழிய நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நட்டங்களையும், நிலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் எவரும் கருத்திற் கொள்ளவில்லை. மண்ணை பரிசோதிக்கும் நிலையங்கள் நாடு முழுதிலும் மில்லியன் கணக்கான நிதிகளை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், திணைக்கள சுற்றறிக்கைகளின் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது எமது நாட்டில் யாதார்த்தமாக மாறவில்லை மாறாக நாளுக்கு நாள் உரத்திற்கான கேள்வி அதிகரித்தது. இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்கள் பாவிக்கப்படும் எனவும் மற்றும் விஷமற்ற உணவுகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கிய தூரநோக்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கிணங்க, அடுத்த பயிர்ச் செய்கை போகத்திலிருந்து மண் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் விவசாயிகளின் கமக்காரர் அடையாள அட்டைகளை பரிசீலித்து உரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.

கமக்காரர் அடையாள அட்டைகளை போலவே சகல விபரங்களையும் உள்ளடக்கி புகைப்படத்தை பதித்து தயாரித்து காணியின் மண் பரிசோதனை அறிக்கைகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த அட்டைகளின் பிரகாரம் அடுத்த பயிர்ச் செய்கை போகத்திலிருந்து பயிர்ச் செய்கைக்கான உரங்கள் விநியோகிக்கப்படுவது மண் பரிசோதனை விவசாயிகளின் அடையாள அட்டைகளுக்கு இணையான சகல விபரங்களும் புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டு அதன் பின்னர் காணியின் மண் பரிசோதனை அறிக்கைகளை விவசாயிகளுக்கு நாம் பெற்றுக் கொடுப்போம். நாம் எவரும் இது பற்றி கதைப்பதில்லை. இரசாயன உரங்களை பாவிப்பதால் கண் குருடான குழந்தைகள் பிறக்கின்றன, சிறுநீர நோயாளிகள், புற்றுநோயாளிகள் நாட்டில் அதிகரிக்கின்றனர்.

 

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை இதற்கு முன்னர் ஆரம்பித்திருந்தால் இன்று இந்த நோயாளிகள் இருக்க மாட்டார்கள். இந்த நோயை குணப்படுத்த மில்லியன் கணக்கான நிதிகள் செலவு செய்யப்படுகின்றன. உரிய முறையில் உரங்களை பாவித்தால் இன்று எமது நாட்டின் நிலை பெருமளவு மாறியிருக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உரம் அல்ல விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது மாறாக விஷம். ஆய்வுகூட அறிக்கைளை திரிவுபடுத்தி உர கட்டமைப்பை மாற்றி ரீ.எஸ்.பி. உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கையின் மூலம் இது பற்றிய சகல விபரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உரங்களை இறக்குதி செய்யும் தரப்புகள், மாதிரிகளை தரமாக வழங்கி, தரத்தில் குறைந்த உரங்களை இறக்குமதி செய்ததுதான். அரச அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் பிடித்துக் கொண்டு ஆய்வுகூட பரிசோதனை அறிக்கைகளை மாற்றி விஷத்தை கொண்டு வந்து விவசாயிகளுக்கு உண்ணுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 1.5பில்லியன் பெறுமதியான எண்பத்து ஓராயிரம் மெற்றிக் டொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த உரத்திற்கு மாத்திரம் 55 ஆய்வுகூட பரிசோதனை அறிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்து ஆண்டுகளாக சேத்து உரம் எனக் கூறி வழங்கப்பட்டிருப்பது விஷம். கடந்த நாட்களில் நாம் இந்த நியம தரத்தை மாற்றி சர்வதேச தரத்திற்கு ஏற்ப கேள்வி மனுக்களை அழைத்தோம். எந்தவொரு இறக்குமதி தரப்பும் கோரவில்லை. காரணம், எமது நியம தரத்திற்கு ஏற்ற உரத்தை அந்த தரப்புகளால் இறக்குமதி செய்ய முடியாது. உலோக பதார்த்தம் அதிகம் அடங்கிய உரத்தைத்தான் இந்த தரப்புகள் இறக்குமதி செய்கின்றன. முன்பிருந்த அரசாங்கம் இந்த விதத்தில் உரத்தை இறக்குமதி செய்திருப்பதாக கண்ககாய்வு அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம், நிதிகள் இல்லாத காரணத்தினால் ஓரளவு தாமதமானாலும், உலக உணவுகள் அமைப்பினதும் மற்றும் ஏனைய அமைச்சுகளினதும் உதவியுடன் எம்மால் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முதல் தடவையாக செயற்படுத்த முடிந்தது. எதிர்வரும் காலங்களில் உரம் மண் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படும் சிபாரிசுகளுக்கு அமைவாக மட்டுமே விநியோகிக்கப்படும். எக்காரணம் கொண்டும் இதனை மாற்ற போவதில்லை. உர இறக்குமதி 50%வீதத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம். சில இடங்களுக்கு உரம் தேவைப்படுவதில்லை. இலவசமாக வழங்குவதால் உரங்கள் இடப்படுகின்றன. உர பாவனையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எவ்வளவு என கணக்கிட்டு கூற முடியாது.

 

அவுஸ்திரேலியாவில் ஹெக்டேயர் ஒன்றுக்கு 50கிலோ கிராம் அளவில் உரம் இடப்படுகின்றது. ஆனால், இலங்கையில் ஹெக்டேயர் ஒன்றுக்கு 300கிலோ கிராம் உரம் இடப்படுகின்றது. இவ்வாறு அதிகளவில் இரசாயன உரங்கள் பாவிக்கப்படுகின்றன. இரசாயன உரங்களினால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்ப்பது இந்த நாட்டில் விவசாயத்திலிருந்து உற்பத்தி செய்யக் கூடிய சகலவற்றையும் இந்த நாட்டிலே உற்பத்தி செய்வதற்காகும். 70%வீத இரசாயன உரங்களுக்கும், 30%இயற்கை உரங்களுக்கும் முதலாம் கட்டத்தில் விவசாயிகளை பரிட்சயப்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒரே தடவையில் இதனை மாற்ற முடியாது. ஆகையால் நாம் படிப்படியாக மாற்றி, 100%வீதம் இயற்கை உரங்களை பாவிப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிப்போம்.ஆகையால், மண் பரிசோதனை உபகரண பொதிகளை பெற்றுக் கொடுத்து இந்த விதத்தில் ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நாம் ஆரம்பிக்கின்றோம். பலர் கேட்கின்றனர் இந்த அரசாங்கம் என்ன செய்ததது என்று. டீசல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக இன்று மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி பாவனைக்கு எமது அரசாங்கம் நகர்கின்றது. இன்று, வரலாற்றில் அதிகளவில் சுற்றாடலை பற்றி சிந்திக்கும் ஒரு அரசாங்கமாக நாம் செயல்பட்டு வருகின்றோம்.

 

எமக்கு தெரியும் டீசல் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து எவ்வளவு விஷ வாயுட்கள் வெளியாகுகின்றன என்று. ஆகையால் மத்திய அரசாங்கமும் மற்றும் மாகாண சபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். ஆகையால் ஒரு மண் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை சகல அமைப்புகளையும் ஒன்றிணைத்து எமது நாட்டை உண்மையான அபிவிருத்தியிற்கு இட்டுசெல்ல வேண்டும். அலுவலகங்களிலிருந்து கொண்டு அறிக்கைகளை பூரணப்படுத்தி கொடுக்க முடியாது. விவசாயிகளிடம் சென்று ஒவ்வொரு இடமும் பற்றிய அறிக்கையை சரியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். கிராமத்தின் தகவல்களை சரியான முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய ஆலோசகர்கள், வி.ஆ.அ.உ. ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் இது பற்றி கண்காணிக்க வேண்டும்.

இந்த வேலைத் திட்டம் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றதா என நாம் நேரடியாக கண்காணிப்போம். கடந்த காலத்தில் கமநல சேவை நிலையங்களின் மூலம் செய்யப்பட்டிருப்பது வயல் காணிகளுக்கு மண்ணிரப்பப்பட்டமையாகும். இந்த திணைக்களம் காணப்படுவது பயிர் செய்வதற்காக அன்றி வயல் காணிகளுக்கு மண்ணிரப்புவதற்கு அல்ல. கண்டி நகரை சுற்றியுள்ள வயல் காணிகள் மண்ணிரப்பப்பட்டுள்ளன. அதன் பேரில் மில்லியன் கணக்கான நிதி களவாடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறிய அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

 

நாம் ஒரு இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருக்கின்றோம். இதனை ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம். தற்பொழுது கமத்தொழில் அமைச்சு புதிய பயணத்தில் செல்கின்றது. கமத்தொழில் எனும் என்ஜின் பலவீனமாக இயங்குகின்றது. என்ஜினுக்கு தண்ணீரில்லாமல் தற்பொழுது வெப்பமேறி எரிகின்றது. இப்பொழுதுதான் ஓரளவு எண்ணெய் இட்டு, தண்ணீரையும் ஊற்றி சரியான முறையில் இயங்கி ஓடத்தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஊழியர்களுக்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. பின்னூட்டல் செய்யப்பட்டிருக்கவுமில்லை. ஆகையால், நாம் கொழும்பில் இருப்பது அர்த்தமில்லை. அலுவலகத்தில் இருப்பதிலும் அர்த்தமில்லை. ஒவ்வொருவரும் விவசாயிகளிடம் செல்ல வேண்டும். கிராமங்களுக்கு செல்ல வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை தேடிப்பார்க்க வேண்டும். விவசாயிகளுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். வேலை செய்யாமல் வீணாக காலத்தை கழிக்கக் கூடாது. அலுவலகங்களில் அவ்வாறு வீணாக காலத்தை கழிக்கும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள 1200 ஏக்கர் மிளகாய் பயிர் தோட்டத்தை கடந்த வாரம் நான் சென்று பார்த்தேன். அலுவலர்கள், ஊழியர்கள் எவரும் வந்திருக்கவில்லை. எந்தவொரு உதவியும் விவசாய திணைக்களத்தினால் அல்லது கமத்தொழில் அமைச்சினால் பெற்றுக் கொடுக்கப்படவுமில்லை. கமத்தொழில் அமைச்சை விடவும் தனியார் துறை முன்னிலையிலுள்ளது. எந்தவொரு உதவியும் இல்லாமல் இளம் தொழில்முயற்சியாளர்கள் தனியான பயிர்களை வளர்த்து முன்னேற்ற நிலையிலுள்ளனர். இந்த தொழில்முயற்சியாளர்கள் தனியாக இந்த பயணத்தில் சென்று அரசாங்கத்திற்கு சவாலாக பயிர்களை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு சென்றால் விவசாய திணைக்களத்தை மூடிவிடும் நிலை ஏற்படும். ஆகையால் வேலை செய்யுங்கள். வேலை செய்யாது நேரத்தை வீணாக கழிக்க வேண்டாம். அனைவரும் களத்திற்கு சென்று பார்க்க வேண்டும். இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் அலுவலர்கள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலர்கள் மாகாண விவசாய திணைக்களங்களின் அலுவலர்கள் அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர். கண்டி மாவட்டத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், விவசாய ஆலோசகர்கள், உர இராஜாங்க அமைச்சின் அலுவலர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கண்டி மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் அவர்களும் இதன் போது கருத்து தெரிவித்தார்கள்.

 

 IMG-20210409-WA0003  IMG-20210409-WA0010

IMG-20210409-WA0011  IMG-20210409-WA0004

IMG-20210409-WA0005  IMG-20210409-WA0006

IMG-20210409-WA0007  IMG-20210409-WA0008

IMG-20210409-WA0010  IMG-20210409-WA0009

IMG-20210409-WA0012  IMG-20210409-WA0013

  IMG-20210409-WA0015  IMG-20210409-WA0014

IMG-20210409-WA0016  IMG-20210409-WA0018

IMG-20210409-WA0017

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 21 ஏப்ரல் 2021 06:14

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்