English (UK)SinhalaSriLankaTamilIndia


பெரும்போகத்திற்கு பரசூட்டு தட்டுக்களை குறைந்த விலையில் விநியோகிக்க பேச்சுவார்த்தை

எதிர்வரும் பெரும்போகத்தில் பெரும் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு தேவையான பரசூட்டுத் தட்டுக்களை குறைந்த விலையில் பெற்றுக் கொடுப்பதற்குள்ள சாத்தியம் பற்றி அந்த பரசூட்டுத் தட்டுக்களை உற்பத்தி செய்கின்ற இந்நாட்டு கைத்தொழில் தரப்புகளுடன் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் முந்தைய நாள் (3) பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். தற்பொழுது சந்தையிலுள்ள ஒரு பரசூட்டுத் தட்டின் விலை சுமார் 47/= ரூபா அளவில் காணப்படுகின்றது. ஆகையால் அந்த விலையை குறைத்து விவசாயிகளுக்கு தேவையான பரசூட்டுத் தட்டுக்களை குறைந்த விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் அதன் நிமித்தம் அரசாங்கத்தால் தேவை எனில் அந்த உற்பத்தி தரப்புகளுக்கு உதவியை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள்.

 

இதற்கிடையில் பரசூட்டுத் தட்டுக்களை இறக்குமதி செய்கின்ற போது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அவர்கள் நிதி அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்கள்.

 

பெரும் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இந்தப் பெரும்போகத்தில் 30 நாட்கள் நீரை விநியோகிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதால் வயல்களில் களைகளை நீரில் மூழ்கடிக்கச் செய்து கட்டுப் படுத்துவதற்கும் அந்த வயல்களில் பரசூட்டுத் தட்டுக்களின் உதவியுடன் நெல்லை பயிரிடுவதற்கும் விவசாயிகள் அதிக அக்கறை காட்டுவதால் இந்த பெரும்போகத்திற்கு 2 மில்லியன் பரசூட்டுத் தட்டுக்கள் மேலதிகமாக தேவைப்படும் என தெரிய வந்துள்ளது. ஒரு ஏக்கர் வயலுக்கு மாத்திரம் 350 - 400 இடையிலான பரசூட்டுத் தட்டுக்கள் தேவைப்படும். இந்த அளவிலான பரசூட்டுத் தட்டுக்களை கொள்வனவு செய்ய விவசாயிகள் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியிருப்பதால் குறைந்த விலையில் இந்தப் பரசூட்டுத் தட்டுக்களை பெற்றுக் கொடுக்க கமநல சேவைகள் திணைக்களத்திற்கு ஆற்றல் உண்டா என்பது பற்றி ஆராய்ந்து தனக்கு அறியப்படுத்துமாறு கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் அவர்கள் உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.

 

 

ஜயசூரிய உடுகும்புர

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021 06:35

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்