English (UK)SinhalaSriLankaTamilIndia


எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச் செய்கையில் இருந்து தேவையான கரிம உரங்கள் நிவாரண அடிப்படையில் சகல விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.

 

  • கரிம உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. JVP பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது.
  • எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கரிம உரங்கள் பதிவு நடவடிக்கை ஆரம்பமாகும்.
  • கரிம உரங்களை தயாரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படும்.
  • உற்பத்தி செய்யப்படும் கரிம உரங்கள் அரச உரக் கூட்டுத் தாபனங்கள் மூலம் கொள்வனவு செய்யப்படும்.

 

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

 

சுற்றாடல்நேயமான கரிம உரங்கள் பாவனையில் விஷம் நீங்கிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது கடினமான ஒரு விடயமாகும். எவ்வகையான சவால்கள் வந்தாலும் அவற்றை வெற்றி கொள்வோம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இன்று கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற ஒரு விஷேட ஊடக சந்திப்பின் போது, அமைச்சர் அவர்களின் முன்னிலையில் கரிம உரங்களைப் பகிர்ந்தளிப்பது சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பது பற்றிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. உள்நாட்டுத் தொழில் நுட்பத்தையும் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களையும் பயன்படுத்தி நாட்டிற்கு தேவையான கரிம உரங்களை நாம் உற்பத்தி செய்வோம். சாதாரண கொம்போஸ்ட்டு உரத்தின் அர்த்தத்தில் இதனை நாம் சிந்திக்கக் கூடாது. தொழில் நுட்பம் வாய்ந்த தாவரங்களுக்கு தேவையான போஷனை அடங்கிய தரமான கரிம உரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். நாட்டின் உற்பத்தியைக் கருத்திற் கொள்கின்ற போது, கரிம உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அது பற்றி நாம் தற்பொழுது ஆராய்ந்து வருகின்றோம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல கமநல சேவை நிலைய மட்டங்களிலும் கரிம உர உற்பத்தித் தரப்புகள் பதிவு செய்யப்படுவார்கள். அதே போல் தரமான கரிம உரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் உரக் கூட்டுத் தாபனங்களின் ஊடாக கொள்வனவு செய்யப்படும். உர நிவாரணமாக விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்த பணத்தில் ஒரு சதமேனும் குறைக்கப்படமாட்டாது. எதிர்வரும் பயிர்ச் செய்கை போகத்திலிருந்து நிவாரண திட்டத்தின் கீழ் கரிம உரங்களை நாம் சகல விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுப்போம். மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் சொல்லியிருந்தார், இவர்கள் கரிம உரங்கள் என்று கூறி தரத்தில் குறைந்த அசிங்கமான உரங்களை இறக்குமதி செய்யப் போகின்றார்கள் என்று. கரிம உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இறக்குமதி செய்வதாயின் முற்றிலும் புகையடித்து தொற்றுநீக்கிய தரத்தில் உயர்ந்த உரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்த விடயம் பற்றிய நிபுணர்கள் அடங்கிய ஒரு தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியுடனாகும். உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்ய முனைகின்றார்கள். விவசாயிகளுக்கு நாம் கூறுவது எந்தவிதத்திலும் அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று. உரிய முறையில் நிவாரணத்தை அதே விதத்தில் பெற்றுக் கொடுத்து நாம் விவசாயிகளுக்கு கரிம உரங்களை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச் செய்கையிலிருந்து முறையாகப் பெற்றுக் கொடுப்போம்.

 

இது ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சபரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் ப்ரியந்த யாப்பா:  -

நாம் சுற்றாடல்நேயமான இந்த இயற்கைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது 1965 ஆம் ஆண்டின் பின்னர். 57-வருடங்கள் நாம் இரசாயன உரங்களின் அடிப்படையில் பயிர்ச் செய்கையை மேற்கொண்டோம். நோய்கள், உயிர் இழப்புக்கள் என்பன இந்த இரசாயன உரத்தின் அடிப்படையிலான விவசாயத்தினால் ஏற்பட்டன. தற்காலிகமாக வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக அன்றி அதற்கும் அப்பால் சென்ற ஆரோக்கியமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் இவ்வாறு செய்கின்றோம். முழுமையாக இருந்த நிலைமையை மறுபுறம் மாற்றுவதற்குத்தான் இந்த முயற்சி. உலகத்தில் ஒரு பிரச்சினை தோன்றி இறக்குமதி நிறுத்தப்பட்டால் நாம் பட்டினியில் மரணிக்க வேண்டி ஏற்படும். இந்த சகல வகையான சவால்களுக்கும் தீர்வுதான், உரங்களை உற்பத்தி செய்து எமது நாட்டிற்கு தேவையான விதத்தில் விவசாயத்தை கட்டியெழுப்புவது. ஜனாதிபதி அவர்களின் குறிக்கோள், நாளை நாட்டிற்கு மிகவும் முக்கியம். அழிந்து போன மண்ணை மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு எஞ்சிய மண்ணையாவது பாதுகாத்து நாம் விரைவில் சுற்றாடல்நேய இயற்கைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும். அவசரப்படுவது எஞ்சிய மண்ணை இரசாயன பதார்த்தங்களினால் அழிய விடாது பாதுகாப்பதற்காகும்.

 

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி: - அவசர அவசரமாக இந்தத் தீர்மானத்தை செயற்படுத்தியது ஏன்?

 

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்:- அவசர அவசரமாக அல்ல. சௌபாக்கிய தூரநோக்குத் திட்டத்தில் தெளிவாக சுற்றாடல்நேய இயற்கை விவசாயத்தைக் கொண்டு ஒரு பசுமை நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் ஆணை கிடைத்திருப்பது இவற்றை செய்வதற்கு. நாம் நிறைவேற்றுவது மக்களின் அபிலாஷைகளை. இந்தத் தீர்மானம் பிரபல்லியம் அடையாவிட்டாலும் நாளை நாட்டிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் முக்கியமானதாகும்.

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 09 ஜூன் 2021 06:24

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்