நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரசாங்கம் 03 இலட்சம் மெற்றிக் டொன் அளவான நெல்லை கொள்வனவு செய்யும் ஒரு வேலைத் திட்டம் நாளை ஆரம்பமாகும். அம்பாறை மாவட்டத்தில் நாளை பிற்பகல் நேரத்தில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றலில் குறித்த இந்த நெல் கொள்வனவு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனுடன் இணைந்த அரசாங்கத்தின் பொறிமுறையில் சம்பந்தப்படும் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் ஆர்வத்தையும், திடகாத்திரத்தையும் மேம்படுத்தி இந்த புதிய வேலைத் திட்டம் இவ்வாறு ஆரம்பிக்கப்படும். உர நிவாரணத்தை பெறும் ஒவ்வொரு விவசாயிடம் இருந்தும் ஹெக்டேயருக்கு 1000கி.கி. நெல் என்ற வீதம் இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும். நாடு முழுதும் சேவையில் ஈடுபடுகின்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களின் ஊடாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யும் குறித்த இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதே போல் விவசாயிகளுக்கு நெல்லை பொதியிடும் உறைகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசி மற்றும் நெல் தொடர்பாக நிலவி வரும் மாஃபியாவை தோற்கடிக்கும் நோக்கில் பெரும்போகத்தில் 03 இலட்சம் நெல்லை கொள்வனவு செய்து அரசாங்கத்தின் வசம் நெல் களஞ்சியத்தை பேணிச் செல்லும் குறிக்கோளுடன் இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மற்றும் மொனராகல் மாவட்டங்களில் பெரும்போக பயிர்ச் செய்கை அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டம் நாளை முதல் இவ்வாறு ஆரம்பிக்கப்படும். முதலாவதாக நெல்லை கொள்வனவு செய்யும் இந்த நடவடிக்கையை அம்பாறை அக்கறைப்பற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியாலை கட்டிடத் தொகுதியில் நாளை பி.ப. 3.30மணிக்கு ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தடவை, பெரும்போகத்தின் போது 28 இலட்சம் மெற்றிக் டொன் அளவான நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாயிகள், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் முக்கிய குறிக்கோளுடன்இதில் 03 இலட்சம் மெற்றிக் டொன் நெல் இவ்வாறு அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்யப்படும். இவ்வாறு கொ்ளவனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தும் முகமாக நாடு முழுதிலும் களஞ்சிய வசதிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் உதவியுடன் சகல களஞ்சிய சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடவை பெரும்போகத்தில், ஆறு இலட்சத்து அறுபத்து எட்டு ஆயிரத்து நான்கு நூறு ஹெக்டேயர் அளவான காணிகளில் நாடு பூராகவும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, மாவட்ட செயலாளர்களின் ஊடாகவும் நெல்லை கொள்வனவு செய்யும் ஒரு வேலைத் திட்டமும் செயற்படுத்தப்படும். எனவே அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படாமல் அரிசி மாஃபியாவுக்கு தேவையானவாறு விலையை கட்டுப்படுத்த முடியாத வகையில் இந்தத் தடவை அரசு முன்கூட்டியே ஆயத்தமாக இருக்கின்றது. இது வரை நெல் கொள்வனவு நடவடிக்கையின் போது இடைத் தரகர்களுக்கு கிடைத்த பணத்தை இந்தத் தடவை விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலர்கள் இல்லாத பிரதேசங்களில் மாத்திரம் ஏனைய மாற்றுவழிகளின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இந்த தடவை, பெரும்போகத்தில் முற்றிலும் அரச பொறிமுறையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யும் ஒரு செயற்பாடு செயற்படுத்தப்படுவது விஷேடமானதாகும். அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் நாடளாவிய ரீதியில் கிடைக்கவுள்ளது. அந்த நெல்லை கொள்வனவு செய்ய சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுஜித் விதாணபத்திரன
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்