பெரும்போகத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரசாங்கத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை -2021.01.12- ஆம் திகதி பி.ப.
3.30மணிக்கு அம்பாறை அக்கறைபற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலை கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்படும்.
கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் மற்றும் நெல் மற்றும் தானியம், இயற்கை உணவு, மரக்கறி, பழ, மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்கள்
ஊக்குவிப்பு, விதைகள் உற்பத்தி மற்றும் உயர் தொழில் நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றலில் ஆரம்ப வைபவ நிகழ்ச்சித் திட்டம் நடைபெறும். உங்களது
நிறுவனத்தின் ஒரு ஊடகவியலாளர் குழுவை அல்லது ஒரு பிராந்திய ஊடக அறிக்கையாளரை இந்த நிகழ்வில் சம்பந்தப்படுத்துமாறும் மற்றும் நெல் கொள்வனவு தேசிய நிகழ்ச்சித் திட்டம் பற்றி நாடு
முழுதிலும் உள்ள விவசாயிகளுக்கு விழிப்பூட்டுவதற்கு தேவையான பிரசார நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
விவசாயத்தை கட்டியெழுப்பி உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் மிளிரச்செய்யும் எமது அமைச்சின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உங்கள் நிறுவனம் நல்கும் ஒத்துழைப்பு பெரிதும் மதிக்கப்படும்.
சுஜித் விதாணபத்திரன
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்