English (UK)SinhalaSriLankaTamilIndia


தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுற்றாடல்நேய விவசாய தொழில் நுட்ப பேட்டையை நாட்டிற்கு பயனுள்ள வகையில் கட்டியெழுப்ப நடவடிக்கை

 

  • மேல் மாகாணத்தில் இருக்கின்ற சகல வசதிகள் நிறைந்த ஒரேயொரு சுற்றாடல்நேய விவசாய மாதிரி பேட்டை.
  • 15 ஏக்கர் அளவான நிலத்தில் சகல பயிர்களும் இயற்கை உர பாவனை மூலம் பயிரிடப்பட்டுள்ளன.
  • விளையாட்டு மைதானத்தின் அலங்காரம், விவசாய கல்வி சார்ந்த செயற்பாடுகள், விளையாட்டு வீரர்களின் உளவியல் அழுத்தத்திற்கு தேவையான செயன்முறை ரீதியான செயற்பாடுகள், உள்நாட்டு பயிர்கள் உற்பத்தி போன்ற பல நோக்கங்கள் ஒரே வளாகத்திலேயே பதிந்து காணப்படுகின்றன.

          

ஹோமகம தியாகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு கட்டிடத் தொகுதி வளாகத்தில் அமைந்து இருக்கின்ற சுமார் 15 ஏக்கர் அளவான சுற்றாடல் நேயமான விவசாய தொழில் நுட்ப பேட்டையை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சென்று பார்த்தார்கள். 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாணத்தில் முழுமையான வசதிகள் நிறைந்த மாதிரி பேட்டையை கட்டியெழுப்புவதற்கு அல்லாமல் பேணி நிருவகித்து செல்வதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதே போல் நாட்டின் மதிப்புமிக்க வளங்கள் இன்று அழிந்து வருகின்றன என்றும் மேல் மாகாணத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களிடம் தெரிவித்தனர். இந்த பேட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு கட்டிடத் தொகுதி வளாகத்துடன் இணைந்த ஒரு நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழுப் பேட்டையும், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நாட்டில் எந்தவொரு பயிரையும் பயிரிட முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. நச்சுதன் தன்மை நீங்கிய உணவுகளை இந்த சர்வதேச விளையாட்டு அரங்கில் விளையாட்டுக்களில் பங்குபற்றும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பெற்றுக் கொடுத்தல், விளையாட்டு வீரர்களின் உள அழுத்தங்களை தணிக்கும் வகையில் இந்த பேட்டையை பயன்படுத்துதல், உள்நாட்டு பயிர்களை பயிரிடுவதன் ஊடாக முன்மாதிரியான நல்ல ஒரு நாட்டை உருவாக்குதல், சர்வதேச விளையாட்டு மைதானத்தை அலங்காரமான முறையில் பேணி பராமரித்தல் முதலிய பல நோக்கங்களின் அடிப்படையில் இந்த மாதிரி பேட்டை ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு உருளைக்கிழங்கு இனங்கள், அதிக மேட்டுநில மற்றும் தாழ்நில காய்கறி பயிர்கள், பழ பயிர்கள், குரக்கன், மெனேரி, எள்ளு, பயறு, சோளம், முதலிய பயிர்கள் அடங்கலாக அனைத்து வகையான பயிர்களும் கரிம உரங்களை பயன்படுத்தி இந்த தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன. 150 வகை மூலிகை தாவரங்கள் வளரும் ஒரு தாவர தோட்டமும் இந்த பேட்டையில் காணப்படுகின்றது. அதே போல், மாடு, ஆடு மற்றும் செம்மறியாடு முதலிய விலங்குகளும் இந்த தோட்டத்தினுள் ஆரம்பத்தில் வளர்க்கப்பட்டாலும் கூட, இன்று அத்தகைய விலங்குகளின் வளர்ப்பு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இரண்டு உத்தியோகத்தர்கள், 7 தொழிலாளர்கள் மற்றும் ஒரு காவல்காரர் ஆகியோரின் ஊடாக முழு தோட்டத்தினதும் செயற்பாடுகளை மேற்கொள்ள நேரிட்டுள்ளமையினால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என இந்த பேட்டைக்கு பொறுப்புடைய விவசாய ஆலோசகர் திரு காமினி விக்ரமதிலக்க அவர்கள், அமைச்சர் அவர்கள் சென்று பார்த்த வேளையில் தெளிவாக குறிப்பிட்டார்கள்.

 

தற்போது இந்த பேட்டையை பொறுப்பேற்பது தொடர்பில் ஒரு பிரச்சினை காணப்படுவதால் இதனை விவசாய திணைக்களத்திற்கு உரிமை மாற்றிப் பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பூங்காவின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் ஆகியோருடன் பேசி கலந்துரையாடி, பொறுப்பேற்கும் விடயப் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் மற்றும் இந்த பேட்டையை கட்டியெழுப்ப தேவையான நிதியையும் மற்றும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த விஜயத்தின் போது உடன்பட்டார்கள். ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டு அரங்கினுள் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஒரு பகுதிக்கு தேவையான உயிர்வாயு, குறித்த பேட்டையின் கால்நடைகள் தொழுவத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும், 4 மெற்றிக் டொக் கரிம உரம் இந்த பேட்டையினுள் உற்பத்தி செய்யப்படுவதாகவம் இதன் பொறுப்பதிகாரி திரு காமினி விக்ரமதிலக்க அவர்கள் அமைச்சர் அவர்களிடம் கூறினார்கள். இதிலிருந்து இது வரை கிடைத்த வருமானம் பொது திறைசேரிக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

கரிம உரங்கள் மற்றும் உள்நாட்டு விவசாய முறையியல்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் போன்ற சகல வசதிகளும் நிறைந்த இந்த பேட்டையை நாட்டிற்கு பயனுள்ள வகையில் விவசாய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் நிமித்தம் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். பல வகை ஏற்றுமதி பயிர்களும் இந்த தியகம சுற்றாடல்நேய விவசாய தொழில் நுட்ப பேட்டையில் பயிரிடப்பட்டுள்ளன.

 

அழிந்து அரிதாகி வரும் உள்நாட்டு உணவு பயிர்கள், உள்நாட்டு தாவரங்கள், உள்நாட்டு மரக்கறிப் பயிர்கள், உள்நாட்டு உருளைக் கிழங்குப் பயிர்கள் போன்ற பல பயிர்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க இந்த தியகம சுற்றாடல்நேய பேட்டையினால் முடிந்துள்ளமையை கண்கூடாக காணக் கூடியதாக உள்ளது. 2 பச்சைவீட்டு பூங்காக்களும் குறித்த இந்த பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை நிதி வசதிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் போன்ற பற்றாக்குறை காரணமாக இன்று செயற்படுத்தப்படாமல் காணப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற ஒரு உதவி கருத் திட்டத்தின் ஊடாக அல்லது வேறு ஏதாவது ஒரு முறையில் குறித்த இந்த பேட்டையை கட்டியெழுப்புதற்கு தேவையான நிதி வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இங்கு உறுதியளித்தார்கள். இது பற்றி ஆராய்ந்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் அவர்கள் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரு டப்ளியூ.எம்.டப்ளியூ. வீரகோன் அவர்களுக்கு அதே வேளையில் அறிவுரைகளை வழங்கினார்கள். கன்னொறுவ தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் திரு ஹிரான் பீரிஸ், தாவரங்களின் வைரஸுகளை இனங்கண்டறியும் நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர் கலாநிதி விந்தியா பஸ்நாயக்க போன்ற பலரும் இந்த அவதானிப்பு விஜயத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

சுஜித் விதாணபத்திரன

கௌரவ கமத்தொழில் அமைச்சரின் ஊடக செயலாளர்

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2021 10:33

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்