ஊடக பணிப்பாளர்/செய்திப் பதிப்பாசிரியர்,
நெல் மற்றும் அரிசி மாஃபியாக்களை நிறுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் வசமுள்ள மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பெரும்போகத்தில் கொள்வனவு செய்வது பற்றிய விஷேட ஊடக சந்திப்பு
இந்த ஊடக சந்திப்பு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், நெல் மற்றும் தானிய பயிர்கள், இயற்கை உணவுகள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்கள் ஊக்குவிப்பு மற்றும் விதைகள் உற்பத்தி மற்றும் உயர் தொழில் நுட்ப இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ.எம்.எம்.டப்ளியூ. வீரசேக்கர, நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் கலாநிதி ஜட்டால் மான்னபெரும, அதன் உப தலைவர் திரு துமிந்த பிரியதர்ஷன ஆகியோர்களின் பங்கபற்றலில் 2021.01.07ஆம் திகதி மு.ப. 11.30மணிக்கு கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உங்களது ஊடக நிறுவனத்தின் ஒரு ஊடகவியலாளர் குழுவை கலந்து கொள்ளச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நெல்லை கொள்வனவு முறை, நெல் இருப்பை பேணிச் செல்லல்என்பன ஊடகவியலாளர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியல் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தும் வகையிலும்மற்றும் எமது அமைச்சின் வேலைத் திட்டங்களையும் மற்றும் பல விடயங்களையும் உங்களது ஊடக நிறுவனத்தின் மூலமாக விளம்பரப்படுத்தும் வகையிலும் நீங்கள் நல்கும் ஒத்துழைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுஜித் விதாணபத்திரன
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்