English (UK)SinhalaSriLankaTamilIndia


நெல் சந்தைப்படுத்தல் சபையில்களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த30,000மெ.டொ. நெல்லை மோசடியாக விற்பனை செய்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கிளிநொச்சி பகுதியில் ஒரு பிராந்திய முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

நெல்லை கொள்வனவு செய்யும் தொழிலதிபர் ஒருவர் திரு. ரத்நாயக்க என்றழைக்கப்படும் பிராந்திய முகாமையாளர் 1.2 மில்லியன் கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்ட நேரத்தில் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 3.00ரூபா கமிஷனை பெற்றுக் கொண்டதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களிடம் முறையீடு செய்தார்.

எஞ்சியிருக்கும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு கமிஷன் செலுத்துமாறு கோருவதாக அந்த தொழிலதிபர் அமைச்சர் அவர்களிடம் அறிவித்திருந்தார். அதன்படி, கமத்தொழில்அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஅவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 24 ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

செய்த அந்த முறைப்பாட்டை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாாரிகள்பிராந்திய முகாமையாளரை கிளிநொச்சியில் வைத்து இன்றுலஞ்ச பணத்துடன்கைது செய்தனர். முன்னைய அரசாங்கத்தினது ஆட்சி காலத்தின் போது, ​​நெல் சந்தைப்படுத்தல் சபையில் பாரியளவான மோசடிகள் நிகழ்ந்தன. விலங்குகளின் உணவுக்குபணம் தேவை என கூறி இவ்வாறு அரசாங்கத்திற்கு பில்லியன் அளவு ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னமும் அதே மோசடியைச் செய்கிறார்கள். இந்த அதிகாரி அந்த வகையான நபர்களில் ஒருவராவார். பெரும்போகத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலமாக 300,000மெ.டொ. நெல்லை கொள்வனவு செய்து அரிசி மாஃபியாவை எதிர்க்கக் கூடிய வகையில் நெல் இருப்பை பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் நிமித்தம் களஞ்சியத்தை வெற்றாக்குவதற்காகவே 30,000மெ.டொ. நெல்லை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சந்தேகநபர் இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தி நெல் விற்பனையில் ஈடுபட்டதாகவும்,ஒரு கிலோ கிராம் நாடு மற்றும் ஒரு கிலோ கிராம் சம்பா ஆகிய நெல்லுகளுக்கு முறையேரூ .3.00 மற்றும் ரூ .10.00 கமிஷனை கோரியதாகவும் இந்த தொழிலதிபர் கமத்தொழில் அமைச்சர் அவர்களிடம் முறையீடு செய்துள்ளார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 01 ஜனவரி 2021 08:53

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்