English (UK)SinhalaSriLankaTamilIndia


சேனா கம்பளிப்பூச்சி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே அனைத்து சக்திகளையும் ஈடுபடுத்தியுள்ளது

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

vவிவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகள் ஆகியோர் பண்ணை நிலங்களை பார்வையிட்டு அவற்றை ஆய்வு செய்தனர்

vNGV வைரஸ் கள உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது

vஅம்பாறை, குருநாகல், மொனராகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சேனா கம்பளிப்பூச்சிகளின் பரவல் 5%

vசேதமடைந்த பண்ணை நிலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு கட்டாய இழப்பீடு வழங்கப்படும்

 

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரும்போக சோள பயிர்களுக்கு சேனா கம்பளிப்பூச்சியால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார். கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, அமைச்சர், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் மற்றும் ஏனைய பிற அதிகாரிகள் இந்த விஷயத்தை ஆராய கடந்த வாரம் முதல் பண்ணைகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அம்பாறை, மொனராகல், அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்'NGV'ஐ கள உத்தியோகத்தர்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேனா கம்பளிப்பூச்சியால் சேதமடைந்த விவசாய நிலங்களை விரைவாகவும், நடைமுறை சாத்தியமாகவும்மற்றும் நியாயமாகவும் மதிப்பீடு செய்ய உரிய அந்தந்த பகுதிகளில் கள உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார். சேனா கம்பளிப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாகாண சபைக்கும் 6 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும்மேலும் இந்த அச்சுறுத்தலில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சேதமடைந்த பயிர்களுக்கான அனைத்து இழப்பீட்டு கொடுப்பனவுகளும் சரியான மதிப்பீட்டிற்குப் பிறகு நிச்சயமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் கமத்தொழில் அமைச்சர் உறுதியளித்தார்.

 

மதிப்பீட்டிற்கு ஒரு மாதத்திற்குள், பயிர்ச் செய்கை பருவகால முடிவில் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க விவசாய காப்புறுதிசபை மூலம் ஏற்கனவே ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இடைநிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளின் ஓய்வூதிய திட்டத்தை புதுப்பிக்கவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் அரசாங்கம் ஏற்கனவே சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகிறார்.இழப்பீடு செலுத்துதல் மற்றும் மதிப்பீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கமத்தொழில் அமைச்சுக்கும், விவசாய காப்புறுதி சபைக்கும் மற்றும் தனக்கும் அறிவிக்குமாறு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றார். விவசாயிகளின் இழப்பீட்டை செலுத்துவதில் மூன்று, நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கைகளுக்கு அனைத்து இழப்பீடுகளையும் கொண்டு வரும் புதிய ஒரு முறை விவசாய காப்புறுதி சபையினாலும் மற்றும் தொடர்புடைய கள உத்தியோகத்தர்களினாலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 21 டிசம்பர் 2020 05:56

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்