English (UK)SinhalaSriLankaTamilIndia


சுமார் 1.2பில்லியன் ரூபா தொகையான நிதி நட்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய உர மோசடிகளுடன் தொடர்புடைய05ஊழியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

2018/2019 ஆம் ஆண்டுகளுக்கு தேவையான உரங்களை பகிர்ந்தளித்த வேளையில் மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்த 05ஊழியர்களை உடனடியாக செயல்வலுப்பெறும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து, இரசாயன கூட பரிசோதனை அறிக்கைகளை திரிவுபடுத்தியமை அடங்கலாக பல குற்றங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கிணங்க, தேசிய உர செயலக அலுவலகத்தில் முன்னர் பணியாற்றிய 03 உதவி பணிப்பாளர்களும் மற்றும் 02 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளின் தாமதம் பற்றி தொடர்ந்தும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். கடந்த நாட்களில் பாராளுமன்றத்திலும் இந்த மோசடிகள் தொடர்பாக அமைச்சர் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். தரமற்ற உரங்களுக்கு பொய்யான இரசாயன ஆய்வு கூட அறிக்கைகளை தயாரித்தமையும் இந்த மோசடிகளில் உள்ளடங்குகின்றது. கணக்காய்வாளர் அதிபயினது அறிக்கைக்கு இணங்க குறித்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா அவர்கள் இந்த விடயம் பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொருட்டு ஒரு விஷேட குழுவை நியமித்தார்கள். உர கூட்டுத் தாபனங்களின் 201மில்லியன் ரூபா அரச நிதி வீணாக்கப்பட்டமை தொடர்பான விசாரணையையும் மற்றும் கணக்காய்வாளர் அதிபதியினது அறிக்கைக்கு இணங்க வெளிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 1.2பில்லியன் நிதி மோசடி தொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார்கள்.

 

கடந்த தினங்களில் லக் உர கூட்டுத் தாபனத்திற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த விஜயத்தின் போதும் அமைச்சர் அவர்கள் குறித்த மோசடிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் மற்றும் அவற்றை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்கள். அதனால் தான், அமைச்சர் அவர்களினது அறிவுரையின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழு இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது. மோசடிகளுடன் தொடர்புடைய 05ஊழியர்களை பணியிலிருந்து இடைநிறுத்த குறித்த குழு சிபாரிசு செய்துள்ளது. அது தொடர்பான அந்த குழுவின் அறிக்கை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உர உற்பத்தி மற்றும் விநியோகம், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு என்.எம். ரணசிங்க அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூலமாகவும் இந்த மோசடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறும், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்கள். கணக்காய்வாளர் அதிபதியினது அறிக்கையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அந்தஸ்து, அரசியல் நட்பு, தனிப்பட்ட நட்பு என்று பாராது உடனடியாக மோசடிகாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை 69இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அதிகாரத்திற்கு கொண்டு வந்தது ஊழல்களையும் மோசடிகளையும் ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், ஒழுக்கமான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் அதே போல் ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவை நிலைபெற செய்வதற்கும் என்ற நம்பிக்கையுடனாகும். ஆகையால், சகல ஊழல்களுக்கும் மற்றும் மோசடிகளுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது போலவே அவற்றை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்கள். பணி இடைநிறுத்தம் என்ற சொல்லுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் விசாரணைகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அரச நிதிகளை வீணாக்கிய சகல குற்றவாளிகளையும் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 02 டிசம்பர் 2020 09:08

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்