எவென்கார்ட் மெரிடைம் சேர்விஸெஸ் நிறுவனத்திற்கு சோளப் பயிர்ச் செய்கைக்காக கமத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான 5000 ஏக்கர் அளவான காணி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் ஊடக அறிக்கைகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா தெரிவிக்கின்றார். கமத்தொழில் அமைச்சுக்கு சொந்தமாக இருப்பது விவசாய காணிகள், விதைப் பண்ணைகள், ஆராய்ச்சி நிலையங்கள் என்பன மட்டுமே என திரு சுமேத பெரேரா கூறுகின்றார். அதே போல் விவசாய ஆலோசனை சேவையையும் மற்றும் தொழில் நுட்ப உதவியையும் பெற்றுக் கொடுப்பது இந்தக் கமத்தொழில் அமைச்சின் பொறுப்பாகும் என கூறிய செயலாளர் திரு சுமேத பெரேரா, குறித்த உரிய எவென்கார்ட் மெரிடைம் சேர்விஸெஸ் நிறுவனத்தினால் நிருவகிக்கப்படும் ஒரு சோளப் பண்ணைக்கு ஆலோசனையையும் மற்றும் தொழில் நுட்ப உதவியையும் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடுகின்றார். அத்தகைய உதவியை எந்த ஒரு விவசாய பண்ணைக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டியது அமைச்சின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக் காட்டுகின்றார். 5000 ஏக்கர் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் சகல தகவல்களும் பொய்யானவை என அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா சுட்டிக் காட்டுகின்றார்.