English (UK)SinhalaSriLankaTamilIndia


ஜன வசம காணிகளை குத்தகைக்கு விடுவது பற்றி விசாரணை செய்வதற்கான ஒரு குழு நியமிக்கப்படும்

Agri image 01111

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 200 துண்டுகளுக்கும் அதிகமான காணித் துண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளமை மற்றும் சட்டமுறையற்ற ரீதியில் பலவந்தமாக குடியிருத்தல் சந்தமாக விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை தயாரிக்கும் முகமாக ஒரு குழுவை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தலைமையில் இன்று (09) அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிய வந்திருப்பது சட்டவிரோதமாக இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஒரு இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமாகும் என்றாகும். கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் நட்பின் பேரில் ஒரு சில காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அரசியல்வாதிகள் பலர் இவ்வாறு காணிகளை ஆண்டனுபவித்து வருவதாகவும் இங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிய வந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகள் அதாவது சுமார் 500 ஏக்கர் காணி மற்றும் ஒரு தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளடங்குவதாகவும் மற்றும் அத்தகைய காணிகளிலிருந்து வருடத்திற்கு கிடைக்கும் குத்தகை பணம் 40,000 ரூபாவுக்கு குறைவாக கிடைப்பதாகவும் இந்த கலந்துரையாடலின் போது தெரிய வந்தது. இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகளவான பணம் கிடையாது போயுள்ளது. ஆகையால் இது பற்றி விசாரணை செய்து ஒரு மாத காலத்திற்குள் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் முழுமையான அதிகாரமுடைய ஒரு குழுவை நியமிக்கும்படி கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் திரு ஜே.எம். உதித் கே. ஜயசிங்க அவர்கட்கு இன்று (09) அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அந்த அறிக்கை தொடர்பான விடயங்கள் பற்றி விசாரணை செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதற்கும் மற்றும் அந்தக் குழு முன்வைக்கின்ற சிபாரிசுகளுக்கு இணங்க சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கமத்தொழில் அமைச்சு எதிர்பார்க்கின்றது. இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களுடன் ஜனதா தோட்டங்கள் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு புவனக்க டீ. அபேசூரிய அடங்கலாக உயர் அதிகாரிகள் பலரும் மற்றும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021 06:55

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்