English (UK)SinhalaSriLankaTamilIndia


05 கம்பனிளுக்கு 4200 பால் மாடுகளை இறக்குமதி செய்வதற்கும் மற்றும் சுமார் 2771 ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது

AGC image 02

இந்த நாட்டின் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக 05 தனியார் கம்பனிகளுக்கு 4200 பால் மாடுகளை இறக்குமதி செய்வதற்கும் அந்தக் கம்பனிகளுக்கு பால் மாடுகள் பண்ணையை நிருவகித்து செல்வதற்காக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும், கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபைக்கும் சொந்தமான சுமார் 2771 ஏக்கர் அளவான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதி கிடைத்தாக கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தக் கருத் திட்டத்திற்கு அரசாங்கம் எந்தவொரு முதலீட்டையும் செய்ய மாட்டாது எனவும் குறித்த 05 கம்பனிகளும் இந்தக் கருத் திட்டத்திற்கு 8275 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்யும் எனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிக்கும் முகமாக இன்று (07) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

எமது நாட்டில் பாலுக்கு வருடாந்த தேவை 722 மில்லியன் லீற்றர்களாகும். எனினும் தற்பொழுது எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் அளவு 422 மில்லியன் லீற்றர்கள் மாத்திரமே. ஆகையால் நாளொன்றுக்கு 01 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் 365 மில்லியன் ரூபா பால் மாவுவை இறக்கு செய்வதற்கு செலவிடப்படுகின்றது. உலகத்தில் சகல நாடுகளும் தற்பொழுது அதிகளவில் திரவ பாலை நுகர்வதற்கு பழக்கப்பட்டுள்ளன. இலங்கையில் திரவ பாலை பிரபல்லியப்படுத்தி கேள்விற்கு ஏற்ப நிரம்பல் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். தங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு பதிலாக உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கை பிரகாரம் இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும்’.

இதன் நிமித்தம் ஒரு ஆரம்பமாக நான்கு உள்நாட்டு கம்பனிகளுக்கும் ஒரு வெளிநாட்டு கம்பனிக்கும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரிய மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சின் கீழ் பயனின்றி கிடக்கும் சுமார் 2771 ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அனுமதியை வழங்கியிருப்பது மாடுகளுக்கு தேவையான புற்களை வளர்ப்பதற்காகும். சுமார் பத்தாயிரம் பால் மாடுகளுக்கு நாளொன்றுக்கு 45 மெ.டொ. புற்கள் தேவைப்படுகின்றன. எமது நாட்டிலுள்ள பால் மாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய உச்ச அளவான பாலை பெற முடியாதிருப்பது தீனிகளின் குறைபாட்டாலும். இந்தக் கருத் திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் பால் மாடுகளை 2500 வரை அதிரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும்அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

 AGC image 01


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2021 17:56

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்