English (UK)SinhalaSriLankaTamilIndia


எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான மிளகாய், கிழங்கு வெங்காயம் முதலியவற்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - கமத்தொழில் அமைச்சர் அவர்கள் கூறுகின்றார்கள்

Agri Image 01111

எதிர்வரும் மூன்று ஆண்டு காலப் பகுதியில் இந்த நாட்டிற்கு நுகர்வதற்கு தேவையான மிளகாய், கிழங்கு, வெங்காயம் முதலியவற்றை உற்பத்தி செய்வதற்கென திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டத்தை மிக விரைவில் செயற்படுத்துமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரு அஜந்த த சில்வா அவர்கட்கு (06) ஆம் திகதி கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்கள். இந்தக் கூட்டத்திற்கு பணிப்பாளர் நாயகத்துடன் பயிர்களின் தலைவர்களாக விளங்குகின்ற பிராதான விவசாய விஞ்ஞானியாகிய திரு ஏ.எல். சிறிவர்த்தன, பிரதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் திரு எம்.சி. ஜயசிங்க, பிரதி விவசாய பணிப்பாளர் திரு சி.கே.எஸ்.ரீ. குமார, உலக வங்கியின் விவசாய நவீனப் படுத்தல் கருத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திரு நீல் த அல்விஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

பல வகையான நடுகைக்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விவசாய திணைக்களம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. காரணம் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் விவசாயம் பின்னடைந்த ஒரு நிலையில் காணப்படுகின்றது. குறித்த இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ அவர்களின் சௌபாக்கிய தூரநோக்குக் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு இந்த நாட்டிற்கு உற்பத்தி செய்யக் கூடிய சகல பயிர்களையும் இந்த நாட்லேயே உற்பத்தி செய்ய வேண்டும். கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் முதலியவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போது அதிகளவான அந்நிய செலாவணி செலவாகுகின்றது. அத்தகைய அந்நிய செலாவணியை இந்த நாட்டில் எமக்கு சேமித்துக் கொள்ள முடியும். ஆகையால் தனியார் துறை முதலீட்டாளர்களையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டு இந்த நாட்டிற்கு தேவையான கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பயிர்களை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நாம் வெற்றி கொள்ள வேண்டும்என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

இந்த நாட்டிற்கு வருடாந்தம் 50,000 மெ.டொ. செத்தல் மிளகாயும், 2,30,000 மெ.டொ. கிழங்கும், 2,90,000 மெ.டொ. வெங்காயமும் தேவைப்பவதாக இதன் போது தெரிய வந்தது. எவ்வாறாயினும் இந்த அளவில் 500 மெ.டொ. மிளகாய், 60,000 மெ.டொ. வெங்காயம் மற்றும் 80,000 மெ.டொ. கிழங்கு முதலியன இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், புதிய திட்டத்தின்படி, எதிர்வரும் மூன்று ஆண்டு காலப் பகுதியினுள் இந்த முழு மொத்தத் தேவை அளவில் 100% மிளகாயையும், 60% வெங்காயத்தையும் மற்றும் 65% கிழங்கையும் இந்த நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்பதாகவும், ஆகையால் இதன் நிமித்தம் தேவையான விதைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

 

அவ்வளவு இவ்வளவு என உற்பத்தி செய்வதாக நாம் எப்பொழுதும் கூறி வருகின்றோம். அத்தகைய தரவுகளின் அடிப்படையில் நம்பிக்கை கொள்ள முடியாது. ஆகையால் தான் இந்த மாதம் இறுதியளவில் உத்தேச இலக்கை வெற்றி கொள்வதற்கான ஒரு செயல்முறை ரீதியான வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. அந்தந்த மாவட்டத்திலிருந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குகொள்ளும் விவசாயிகளின் பெயர்கள், கிராமங்கள், அவர்கள் பயிரிடும் காணிகளின் அளவுகள் போன்ற அனைத்து வகையான தகவல்களையும் பெற்றுக் கொண்டு அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதிப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டத்தை கண்காணிக்கும் வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும்அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2021 18:08

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்