English (UK)SinhalaSriLankaTamilIndia


குருனாகல் மாவட்டத்தில் பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்வார்கள்

Agri image 01

இயற்கை விவசாய பதார்த்தங்களை இறக்குமதி செய்யும் முகமாக தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஒற்றோபர் மாதம் முதல் சேதன உரங்களையும், சேதன களைநாசினிகளையும் மற்றும் சேதன கிருமிநாசினிகளையும், பூச்சிநாநினிகளையும் சந்தையில் எந்விதமான பற்றாக்குறையும் இன்றி கொள்வனவு செய்ய முடியும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் நேற்று (01) குருனாகல் சென்றிருந்த வேளையில் கூறினார்கள்.

 

எதிர்வரும் பெரும்போகத்திற்கு குருனாகல் மாவட்டத்தின் விவசாயிகளுக்கு தேவையான சேதன உரங்களை உற்பத்தி செய்யும் விதத்தை பார்வையிடுவதற்கான விஜயத்தில் இணைந்த அமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறினார்கள். குருனாகல் மாவட்டத்தின் மாவத்தகம, கரதகொல்ல, இப்பாகமுவ. மெல்சிறிபுர, மடஹாபொல, குபுக்கெட்டே, ரம்பே, எஹட்டுவெவ, கல்கமுவ, அம்பன்பொல, மாகோ, திவுலகொட, நிக்கவரெட்டிய, அவுலேகம மற்றும் வாரியாபொல ஆகிய 15 கமநல சேவை நிலையங்களும் மற்றும் அவற்றுடன் சம்பந்தமான விவசாயிகளும் ஏற்கெனவே சேதன உற்பத்திற்கு அர்பணித்து செயல்படும் விதத்தை அமைச்சர் அவர்கள் இந்த அவதானிப்பு போது கவனித்தார்கள்.

 

இந்த ஒவ்வொரு கமநல சேவை நிலையமும் நூறு மெ.டொ. வீதம் சேதன உரத்தை உற்பத்தி செய்ய தயாராகவுள்ளது. மாவட்டத்தின் நெல் விவசாயத்திற்கு தேவையான சுமார் 4200 மெ.டொ. அளவான உரத்தை மாவட்டத்தினுள்ளேயே உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளும் மற்றும் பாரியளவில் சேன உரத்தை உற்பத்தி செய்யும் தரப்புகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மற்றும் ஏற்கெனவே தமது உரத் தேவையில் சுமார் 45% வீதத்தை உற்பத்தி செய்துள்ளதாகவும் இந்த அவதானிப்பு விஜயத்தின் போது தெரிய வந்தது.

 

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அளுத்கமகே அவர்கள், விவசாயிகளுக்கு தேவையான சேதன உரத்தை விவசாயிகளே உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்களுக்கு தேவையான சேதன நைதரசன் உரம் ஹெக்டேயர் ஒன்றுக்கு 300 கிலோ கிராம் வீதமும் பொட்டாசியம் உரம் 45 கிலோ கிராம் வீதமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.

 

ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கிய தூரநோக்கு நிகழ்சசித் திட்டத்தின் பிரகாரம், குருனாகல் மாவட்டத்தின் விவசாயிகள் தமக்கு தேவையான சேதன உரத்தை உற்பத்தி செய்ய தம்மை அர்ப்பணித்திருப்பதை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன், ஏக்கர் ஒன்றுக்கு 250 கிலோ கிராம் சேதன உரம் தேவைப்படும், அதனை உற்பத்தி செய்ய அரசாங்கம் 12500 ரூபா வீதம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கும், அதற்கிடையில் இளைஞர் குழுக்கள் பாரியளவில் சேதன உரத்தை உற்பத்தி செய்வதாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ள உதவுவோம், அதே போல் சேதன உர உற்பத்திற்கு தேவையான இயந்திர உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் கமத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்கும், அது மட்டுமன்றி பெரும் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெல்லை பயிரிடும்

விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்’ எனவும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

 

இந்த அவதானிப்பு விஜயத்தின் போது கமநல உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு கமநல சேவை நிலையத்திற்கும் 5 தொழிலாளர்கள் வீதம் பெற்றுக் கொடுப்பதற்கு அதே இடத்தில் உரிய உயர் அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தார்கள். அதே போல் விவசாயிகளுக்கு நெற் பயிர்ச் செய்கையின் நிமித்தம் முக்கியமாக தேவைப்படும் பெரசூட்டுத் தட்டுக்கு தற்பொழுது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கும் அதே இடத்தில் நிதி அமைச்சின் செயலாளர் திரு ஆர்ட்டிகல அவர்களிடம் தொலைபேசியில் கதைத்து நடவடிக்கை எடுத்தார்கள். ஆகையால், தற்பொழுது சுமார் 45 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் பரசூட்டுத் தட்டை வரி குறைக்கப்பட்டதன் பின்னர் அண்ணளவாக 20 ரூபா விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்த விஜயத்தின் போது சேதன உர உற்பத்திற்கு தம்மை அர்ப்பணித்திருக்கின்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் (வி.ஆ.உ.உ.) அமைச்சர் அவர்களிடம் விடுத்த ஒரு வேண்டுகோளுக்கு இணங்க, அவர்ளுக்கு தேவையான முகக்கவசங்களையும் மற்றும் கிருமிநீக்கி பதார்த்தங்களையும் கமநல சேவை நிலையங்களின் ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 

குரனாகல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சேதன உரம் மேலதிகமாக காணப்படுமாயின் அந்த மேலதிக உரத்தை கொள்வனவு செய்வதாகவும் அமைச்சர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள்.

 

இந்த அவதானிப்பு விஜயத்தில் கமத்தொழில் அமைச்சருடன் கால்நடை வளங்கள் பண்ணைகள் ஊக்குவிப்பு பால் மற்றும் முட்டை மைய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமித் உடுகும்புர, மன்ஜுல திஸாநாயக்க முதலியோரும், பிரதேச சபையின் தலைவர்களும் மற்றும் குருனாகல் மாவட்டத்தின் கமநல சேவை பிரதி ஆணையாளர் நாயகம் திரு ரீ.எம்.ஜி. தென்னகோன் அவர்களும் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Agri image 02  Agri image 03

Agri image 04


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021 07:09

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்