English (UK)SinhalaSriLankaTamilIndia


சட்டவிரோதமான முறையில் கள்ளத்தனமாக களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள நெல்லை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொண்டு 97 ரூபா விலையில் அரிசி விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த கூறுகின்றார்.

Agri image 01

மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் கள்ளத்தனமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எல்லா நெல்லும் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்யப்பட்டு 97 ரூபா விலையில் மக்களுக்கு அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கூறினார்கள். அமைச்சர் அவர்கள் இன்று (01) காலையில் குருனாகல் மாவட்டத்திலுள்ள பல சேதன உர உற்பத்தி கருத் திட்டங்களை பார்வையிடுவதற்கு சென்ற வேளையில் இவ்வாறு கூறினார்கள். இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், தற்பொழுது சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சீனியையும் அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்து 130 ரூபாவுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், சேதன கிருமிநாசினிகள், பூச்சிநாசினிகள் மற்றும் களைநாசினிகள் அதே போல் இரசாயன உரங்கள் முதலியவற்றை இறக்குமதி செய்ய தனியார் துறை வியாபாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதால் அத்தகைய இரசாயன பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது எனவும் கூறினார்கள்.    

 

 Agri image 02

 

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2021 10:32

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்