English (UK)SinhalaSriLankaTamilIndia


வார இறுதியில் கமத்தொழில் அமைச்சர் மக்களின் துயரங்களை தேடிப் பார்க்கின்றார்

01. image (i)

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வசிக்கிக்னற மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரங்களுக்கு தீர்வுகாணக் கூடிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் பொருட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னனியின் கண்டி மாவட்டத் தலைவர் கமத்தொழில் அமைச்சர் மஹிறந்தானந்த அளுத்கமகே அவர்கள் நேற்று 28 ஆம் திகதி பல பிரதேசங்களுக்கு அவதானிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்கள்.

 

இதன் போது உடுநுவர அப்பலாகொட தேயிலை நாற்றுமேடை உரிமையாளர்களின் தேயிலை நடுகைக்கன்றுகள் அதிக மழையினால் அழிந்து போயுள்ள விதத்தை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள். சுமார் 150 தேயிலை நாற்றுமேடை உரிமையாளர்கள் வசிக்கின்ற அப்பலாகொட பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அதிக மழையினால் அழிந்து இடிந்து நீர் வழிந்தோடும் காரணத்தால் தேயிலை நாற்றுமேடைகள் அழிந்து போவதாக அங்குள்ள விவசாயிகள் இந்த விஜயத்தின் போது அமைச்சரிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆகையால், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் 30 இலட்சம் ரூபா செலவில் இந்த கால்வாயை திருத்திக் கொடுக்கும் முகமாக நிதியை ஒதுக்க அவ்விடத்திலேயே நடவடிக்கை எடுத்தார்கள்.

 

இதற்கிடையில், நாவலப்பிட்டிய நகரத்தில் மழை நீரை உரிய முறையில் வழிந்தோடச் செய்யும் முகமாக நகரத்தின் மத்தியிலுள்ள வடிகாலமைப்பு முறைமையை விரைவில் திருத்திக் கொடுப்பதற்கும் அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். நாவலப்பிட்டிய நகரத்தின் மழை நீரை வழிந்தோடச் செய்யும் இந்த அவதானிப்பு விஜயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும், தாழ்நில அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.

 

கோவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மொரகொல்ல மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன் போது உரிய அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்கள்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு எனும் வேலைத் திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டிய கம்பொலவெல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசகிக்கும் திருமதி நில்மினி ப்ரியதர்ஷனி என்பவருக்கு நிர்மாணித்த புதி வீடும் அவரின் குடும்பத்திற்கு இதன் போது அமைச்சர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.

 

புகைப்படம்:-

 

  1. 1.உடுநுவர அப்பல்லாகொட பிரதேச தேயிலை நாற்றுமேடை உரிமையாளர்களின் தேயிலை நடுகைக்கன்றுகள் அதிக மழையினால் அழிந்துள்ள காட்சி (படம் 01)
  2. 2.மொரகொல்ல மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பிதற்குள்ள சாத்தியம் பற்றி கலந்துரையாடும் காட்சி (படம் 02)
  3. 3.திருமதி நில்மினி ப்ரியதர்ஷனி என்பவருக்கு நிர்மாணித்த வீடு ஒப்படைப்பட்டதன் பின்னர் பிடிக்கப்பட்ட காட்சி (படம் 03)
  4. 4.நாவலப்பிட்டிய நகரத்தின் மழை நீரை வழிந்தோடச் செய்யும் வடிகாலமைப்பை விரைவில் திருத்திக் கொடுப்பதற்கு அறிவுரைகளை வழங்கும் காட்சி (படம் 04)

 

ජායාරූප:-

 

01. image (ii)  01. image (iii)

02. image (i)  02. image (ii)

02. image (iii)  03. image (i)

03. image (ii)  03. image (iii)

04. image (i)  04. image (ii)

04. image (iii)


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2021 10:11

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்