English (UK)SinhalaSriLankaTamilIndia


ஒரு தேசிய வளமாக விளங்குகின்ற எப்பாவெல பொசுபேற்றுப் படலத்தை பிரயோசனப்படுத்தி சேதன உரங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை

Agri image 03

    • முதலாம் கட்டத்தில் 50,000 மெ.டொ. உற்பத்தி இலக்கு
    • பொசுபேற்றுக் கம்பனி, சின் டெக் நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம் கூட்டிணைந்த ஒரு நிகழ்ச்சித் திட்டம்

 

நாட்டிற்கு ஒரு வளமாக விளங்கும் எப்பாவெல பொசுபேற்றுப் படலத்தை பிரயோசனப்படுத்தி சேதன உரங்களை வருடாந்தம் உற்பத்தி செய்யும் ஒரு தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக கமத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இத்தகைய ஒரு வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டின் பொசுபேற்றுத் தேவை 1,25,000 - 1,75,000 மெ.டொ. இற்கு இடைப்பட்ட ஒரு அளவில் காணப் படுகின்றது.

 

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அல்லது ஏனைய தேசிய தேவை நிமித்தம் இது வரை எப்பாவெல பொசுபேற்றுப் படலம் உரிய முறையில் பிரயோசனப்படுத்தப்படவில்லை. உலகத்தில் பொசுபேற்று வளம் இன்னும் 40 ஆண்டுகளில் முடிந்து விடும் என பல ஆராய்ச்சிகளின் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும் இந்த எப்பாவெல பொசுபேற்றுப் படலம் மேலும் 200 ஆண்டுகளுக்கு பிரயோசனப்படுத்தக் கூடிய பரந்த ஒரு தேசிய வளமாக இருந்தாலும் கூட இன்று வரை இதன் சரியான பயனை நாட்டிற்கு பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது.

 

ஆகையால், கமத்தொழில் அமைச்சின் செயல்நோக்கின் கீழ் இயங்குகின்ற இலங்கை பொசுபேற்றுக் கம்பனி, சின் டெக் நிறுவனம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியன கூட்டிணைந்து பொசுபேற்றுப் படலத்தை பயன் –படுத்தி சேதன உரங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 50,000 மெ.டொ. உரங்களை உற்பத்தி செய்யவும் மற்றும் படிப்படியாக அந்த கொள்ளளவை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் இன்று கமத்தொழில் அமைச்சில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் நடத்தப் பட்டது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைப் பொசுபேற்றுக் கம்பனியின் தலைவர் திரு சுஜீவ இந்திரஜித் கருணாசிங்க, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி நில்வல கோட்டேகொட மற்றும் சின் டெக் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

எப்பாவெல பொசுபேற்றுப் படலம் உலகத்தில் காணப்படும் பொசுபேற்றுப் படலங்களுக்கு இடையில் தரத்தில் உயர்ந்த (High Grade) உன்னதமான ஒரு பொசுபேற்றுப் படலமாக வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த பொசுபேற்றுப் படலத்தில் 60 மில்லியன் மெற்றிக் டொன்னுக்கும் அதிகளவு பொசுபேற்று பதிந்து இருப்பதாக புவிச்சரிதவியல் நிபுணர்கள் கணிப்பீடு செய்துள்ளனர். 1975 ஆம் ஆண்டில் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று வரைக்கும் ஒரு தேசிய வேலைத் திட்டமாக உர உற்பத்திற்கு எப்பாவெல பொசுபேற்றுப் படலத்தை உரிய முறையில் பயன்படுத்தாமை நாட்டினது துரதிர்ஷ்டமாகும். சரியான ஒரு முகாமைத்துவத்தின் மூலம் தேவைகளை கண்டறிந்த ஒரு வேலைத் திட்டம் எப்பாவெல பொசுப்பேற்றுப் படலத்தை அண்மித்து செயற்படுத்தப்பட்டிருந்தால் உரத்திற்காக வெளிநாடுகளுக்கு வாரிஇறைத்த அதிக மூலதனத்தை சேமித்திருக்க முடிந்திருக்கும். ஆயினும் அது இது வரை நிகழவில்லை. எமது நாட்டின் பிரதான பயிராகிய நெல் பயிர் நிமித்தம் பாவிக்கப்படும் ரிப்ல் சுப்பர் பொசுபேற்று உரம் முற்றாக இன்று வரை இறக்குமதி செய்யப்பட்டது. எனினும், எப்பாவெல பொசுபேற்றுப் படலத்தை அண்மித்து விஞ்ஞான ரீதியிலான இந்த உர உற்பத்தி வேலைத் திட்டத்தை இது வரை செயற்படுத்த முடியவில்லை.

 

ரிப்ல் சுப்பர் பொசுபேற்று உரத்திற்கான வருடாந்த தேவை சுமார் 125,000 மெற்றிக் டொன்களாகும். அதன் நிமித்தம் செலவு செய்யப்பட்ட நிதி 18,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். இந்த சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு எப்பாவெல பொசுப்பேற்றுப் படலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சேதன உர உற்பத்தி புதிய செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

 

 

 Agri image 02

Agri image 01  Agri image 04


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2021 06:32

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்