කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



அம்பாறை மாவட்டத்தில் சுற்றாடல்நேய விவசாயத்தில் ஆர்வம்

agri image 01

நாட்டில் பெரும்போகப் பயிர்ச் செய்கை முதலில் ஆரம்பிக்கப்படும்அம்பாறை மாவட்டத்தில் சுற்றாடல்நேய இயற்கை விவசாயத்திற்கு தேவையான ஏற்பாடுகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் மூலம் தெளிவாக புலனாகியது.

அம்பாறை மாவட்டத்தில் சௌபாக்கிய நிலைபெறுதகு விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற பற்றிய மீளாய்வு கூட்டம்29.07.2021 ஆம் திகதி அம்பாறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த இந்த மாவட்டத்திற்கு தேவையான 38,903மெற்றிக் டொன் இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதற்கு முறையான ஒரு வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுவது பற்றி இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் போது தெரிய வந்தது. அந்தந்த நிறுவனங்களும் அதே போல் விவசாயிகளும் மிகவும் ஆர்வத்துடன் நச்சும் விஷமும் நீங்கிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் வழிவகுத்துள்ளமை புலனாகியது.

 

சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டு பயிர் செய்கை பருவகாலப் போகங்களிலும் அம்பாரா மாவட்டத்தில் 130,000 ஏக்கர் காணிகளில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் எமது நாட்டின் தேசிய நெல் உற்பத்தியின் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தினது விவசாயிகள் 22% பங்களிப்பை செய்கிறார்கள். தேசிய உற்பத்திக்கு 40% பங்களிப்பை அளிக்கும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் அதிக அளவான கவ்பியையையும் பயிரிடுகின்றனர். மேலும்,சோளம்மற்றும்மிளகாய் அடங்கலாக பல விவசாய உற்பத்திகளுக்கு அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பங்களிப்பு மகத்தானது. இந்த மீளாய்வு கூட்டத்தின் போது கரிம உர உற்பத்தி திட்டம் மற்றும் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக விவசாயிகளுக்கு நாம் விளக்கினோம். இந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் விவசாய அபிவிருத்திற்கு3,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விவசாய திட்டங்களுக்கு எவ்வாறு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதுமற்றும் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில் காணப்படுகின்ற தடைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாய சமூகத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் என்பன குறித்து நாம் விவாதித்தோம். பெரும்போகத்தின் போது இயற்கை விவசாயத்திற்கு தேவையான வசதிகள் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அவர்கள் கூறினார்கள்.

 

பெரும்போகப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்படும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல விவசாயிகளுக்கும் உரிய தினத்தில் நெல் வயல்களுக்கு சென்று உரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்பதால், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவதற்கு தேவையில்லை எனவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அது பற்றி கள மட்டத்தில் விவசாய மக்களுக்கு அறியப்படுத்துமாறு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகளிடமும் மற்றும் அரச ஊழியர்களிடமும் அமைச்சர் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டார்கள். கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற வெளிநாட்டு நிதி உதவிக் கருத் திட்டத்தை சிறந்த முறையில் முகாமை செய்து மக்களுக்கு பயனுள்ள விதத்தில் செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு கமத்தொழில் அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள். இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் அரசியல் அதிகாரிகளுக்கும் அரச ஊழியர்களுக்கும் அறியப்படுத்தி விவசாய சங்கங்களின் பிரேரணைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு செயற்படுத்தப்படும் என வெளிநாட்டு நிதி உதவிக் கருத் திட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை விவசாய சங்கங்களினது பிரதிநிதிகள் முன்வைத்தனர். அந்தப் பிரச்சினைகளுக்கும் சாத்தியமான பெற்றுக் கொடுக்கக் கூடிய தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

 

கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள், வன விலங்கு பாதுகாப்புகள் பற்றிய இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்கள், முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ. வீரசிங்க அவர்கள்மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ அவர்கள் ஆகியோர் அடங்கலாக அதிக பல மக்கள் பிரதிநிதிகளும் இந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அம்பாறை மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண சபை செயலாளர் ஆகியோர் அடங்கலாக அனைத்து அரசாங்க நிறுவனங்களினதும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் விவசாய சங்கங்களை பிரதிநிதிப்படுத்தி கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகளுக்கு அந்த சங்கங்களின் சார்பாக விவசாய உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. கடந்த காலப் பயிர்ச் செய்கைக்கான விவசாய காப்புறுதிகள் சார்ந்த நஷ்டஈடுகளுக்குரிய காசோலைகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

agri image 02  agri image 03

agri image 04  agri image 05

agri image 06  agri image 07

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்