English (UK)SinhalaSriLankaTamilIndia


“CSIAP, ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10 மண் பரிசோதனைப் பொதிகளை மட்டக்களப்பு விவசாய ஆலோசகர்களுக்கு (AI) வழங்கி வைத்தன.

Untitled-1

உலக வங்கியினால் நிதியிடப்படும் காலநிலை நேர்த்தியான நீர்ப்பாசனக் கருத் திட்டம் (CSIAP) நேற்று (26 ஆம் திகதி) மட்டக்களப்பு CSIAP அதிகாரப் பிரிவு விவசாயிகளுக்கு உதவும் முகமாக அங்குள்ள விவசாய ஆலோசகர்களுக்கு (AI) ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 10 மண் பரிசோதனைப் பொதிகளை விநியோகித்தது. CSIAP சார்பாக, கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் (க.அ.தி.) பிரதி ஆணையாளர் அலுவலகத்தில் வைபவ ரீதியாக விவசாய ஆலோசகர்களுக்கு (AI) மண் பரிசேதனைப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.

 

அனுராதபுரம், பொலன்னறுவை, குருனாகல், புத்தளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மொனராகல் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் எஞ்சிய CSIAP அதிகாரப் பிரிவுகளிலுள்ள விவசாய ஆலோசகர்களுக்கு (AI) CSIAP விரைவில் மண் பரிசோனைப் பொதிகளை வழங்கி வைக்கும்.

உர சிபாரிசுகளை மேற்கொள்ளும் வகையில் சரியான மண் வள மதிப்பீட்டை செய்து வழங்குவது மண் பரிசோனை நடவடிக்கையின் குறிக்கோளாகும். சுற்றாடல் சார்ந்த தரத்தின் மீது உரங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றமையால், உரங்களை அல்லது பசளைகளை பிரயோகிக்கக் கூடாதா என்பது பற்றி நிர்ணயிக்கும் பொருட்டு மண் பரிசோதனைகளை பயன்படுத்த முடியும். அடிப்படை மண் பரிசோதனைகள் இயற்கை உரங்களின் அளவையும், pH பெறுமானத்தின் அளவையும் மற்றும் பெரும் நுண்ணூட்டச் சத்துக்களின் (நைதரசன் (N) பொசுபரசு (P) மற்றும் பொட்டாசியம் (K) அளவையும் துல்லியமாக சுட்டிக் காட்டும்.

காலநிலை நேர்த்தியான நீர்ப்பாசனக் கருத் திட்டம் (CSIAP) 2019 ஆம் ஆண்டு முதல் கமத்தொழில் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. CSIAP, இலங்கையின் உலர் வலயத்தில் காலநிலை ரீதியாக பாதிக்கக் கூடிய 11 மாவட்டங்களில் நீர்ப்பாசன விவசாய உற்பத்தித் திறனையும் மற்றும் விவசாயக் குடும்பங்கள் காலநிலைக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலையும் மேம்படுத்துவதில் இலக்குக்கொள்கின்றது. இது உலக வங்கி நிதியிடும் ஒரு கருத் திட்டமாகும். இந்தக் கருத் திட்டம்125 மில்லியன் US$ நிதியைக் கொண்டுள்ளது. உலக வங்கி 110 மில்லியன் US$ நிதியை இந்தக் கருத் திட்டத்திற்கு பங்களிப்பாக பெற்றுக் கொடுக்கின்றது. 60,000 எண்ணிக்கைக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் நன்மை அடையக் கூடிய வகையில் 1,700 சிறு/ நடுத்தர அளவான நீர்ப்பசானத் திட்டங்கள் புனர்நிர்மாணிக்கப்படும். CSIAP, தற்பொழுது நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக அரசாங்கத்திற்கு மேலதிகமான உதிவியையும் வழங்கி வருகின்றது.  

பின்தங்கிய கிராமப் புறங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு விலங்குகள் வளர்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்கள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன்,  பா.உ. கௌரவ சிவனேசத்துறை சந்திரகாந்தன், கமநல அபிவிருத்தித் திட்டத்தின் (க.அ.தி.) மட்டக்களப்பு அலுவலக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர், CSIAP இன் அதிகாரிகள் ஆகியோரும் மற்றும் விவசாயிகளும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்”

 

2 1624764420619 edit

Agriculture Instructors in Batticaloa who received soil testing kits

Untitled-1

Minister Hon. Mahindananda Aluthgamage hands a soil testing kit over to an Agriculture Instructor

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 28 ஜூன் 2021 08:24

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்