English (UK)SinhalaSriLankaTamilIndia


பெரும்போகத்திற்கு தேவையான சேதன உரங்களின் உற்பத்திற்கு பல நிறுவனங்கள் முழுமையான ஆதரவு

image 03

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான சேதன உங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியன பற்றிய ஒரு கலந்துரையாடல் கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், இராஜாங்க அமைச்சர் மொஹான் த சில்வா அவர்கள், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க கூட்டுத் தாபனங்களின், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள், இராணுவத்தினதும் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினதும் தலைமை அதிகாரிகளை பிரதிநிதிப்படுத்துகின்ற அவற்றின் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். ஏற்கெனவே சேதன உரங்கள் உற்பத்தி சார்ந்த செயற்பாடுகளை அதிகமான நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளதாக இதன் போது அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹெக்டேயர் ஒன்றுக்கு 500 கி.கி. சேதன உரங்களும், 5 கி.கி. தாவர போஷனை அமோனியம் அசிட்டும், 35 கி.கி. பொட்டாசியமும் மற்றும் 10 லீற்றர் உயிரியல் பசளையும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்படும் 16 இலட்சம் ஹெக்டேயர் அளவான காணிகளுக்கு இந்த சிபாரிசுகளின் பிரகாரம், சேதன உரங்களின் உற்பத்தி சார் செயற்பாடுகளுக்கு சகல நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்பில் தேசத்திற்கு தேவையான அளவை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளாகும். இது தவிர ஹெக்டேயர் ஒன்றுக்கு சேதன உரங்களை உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவருக்கு 10000 ரூபா நிதியை பெற்றுக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டள்ளது.

 

தேசன உங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான இடங்களையும், தொழில் நுட்பத்தையும், இயந்திராதிகளையும், உபகரணங்களையும் தேவையானவாறு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைகள், தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபை, மில்கோ நிறுவனம், விவசாய திணைக்களம் மற்றும் அதனை மையமாகக் கொண்டமைந்த மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பன அடங்கலாக தோட்டக் கம்பனிகள், லங்கா பொசுபேற்று கம்பனி, காணிகள் சீர்திருத்த சபை, மாகாண சபைகள், மகாவலி அதிகார சபை, நீர்ப்பாசன திணைக்களம், கடற்றொழில்கள் அமைச்சு ஆகிய பல அமைச்சுக்கள், நீர் வழங்கல் சபை, கூட்டுறவு திணைக்களம், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் முதலிய பல நிறுவனங்கள் தேசத்திற்குரிய தேவையான சேதன உரங்களின் தேவை அளவை பூர்த்தி செய்ய அவசியமான உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ரண விரு சேவா அதிகார சபை ஊடாக, ஊனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தேசன உரங்கள் உற்பத்திற்கு இராணுவ கிராம மைய பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபையினது தலைவர் இதன் போது குறிப்பிட்டார். எதிர்வரும் வாரத்தில் அந்தந்த நிறுவனங்கள் தேசிய உர தேவையின் நிமித்தம் உற்பத்தி செய்யக் கூடிய சேதன உரத்தின் அளவு பற்றி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

எதிர்வரும் பெரும்போகத்திற்கு செப்டம்பர் மாதம் முதல் பகுதியளவில் உற்பத்தி செய்யக் கூடிய சேதன உரங்களின் அளவுகள் பற்றி இதன் போது நீண்டநேரம் கலந்துரையடாப்பட்டது. சகல நபர்களும் மற்றும் நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் தரமான சேதன உரங்களை அரச உரக் கூட்டுத் தாபனங்களின் ஊடாக பிரச்சினைகள் ஏதுமின்றி கொள்வனவு செய்வதற்கு வேலைத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. நச்சும் விஷமும் நீங்கிய சுற்றாடல்நேய சேதன உரங்கள் பாவனை மைய விவசாயத்தின் ஊடாக உலகத்திலே இயற்கை தோட்டமாக இலங்கையை மாற்றக் கூடிய வகையில் முடியுமான எல்லாவற்றையும் வினைத் திறன் வாய்ந்த முறையில் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேக அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள். விவசாயிகளுக்கும், நாட்டின் உற்பத்திற்கும், நுகர்வோருக்கும், இயற்கை விவசாயத்தின் ஊடாக ஆரோக்கியமான ஒரு பரம்பரையினரை உருவாக்கக் கூடிய உன்னத வேலைத் திட்டத்திற்கும், எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத செயன்முறை ரீதியான ஒரு வேலைத் திட்டத்தை அனைவரினதும் பங்குபற்றலில் ஒரே நாடு ஒரே வேலைத் தளம் என்றவாறு செயற்படுத்தி சுற்றாடல்நேய இயற்கை விவசாயத்தின் மூலம் நாட்டை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை கமத்தொழில் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

image 02  image 03

image 04

 image 05


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 21 ஜூன் 2021 08:41

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்