English (UK)SinhalaSriLankaTamilIndia


எமது உற்பத்தியிலிருந்து பெரிய வெங்காயத்திற்கான தேசிய கேள்வியை பூர்த்தி செய்யும் ஒரு வேலைத் திட்டம்

image 01

 vகருத் திட்டத்திற்குரிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25இலட்சம் ரூபா நிதி உதவி

vகுடும்பத்திற்கு 01 என்ற வீதத்தில் அதிநவீன களஞ்சிய வசதி

vசுரங்கவழி வசதி, சொட்டுநீர் குழாய் முறைமை, உபகணங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் வழங்கப்படும்

எமது நாட்டில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தாலும், உள்நாட்டு தேவைக்கான பெரிய வெங்காயம் இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய சகல உற்பத்திகளினதும் இறக்குமதியை முழுமையாக நிறுத்தி உள்நாட்டு விவசாயத்தை வலுப்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கான இலக்கை ஜனாதிபதி அவர்கள் கமத்தொழில் அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளார்கள். 2021 ஆம் ஆண்டில் 5000ஹெக்டேயர் காணிகளில் பெரிய வெங்காயத்தை பயிரிடுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பெரிய வெங்காய விதைக்கான தேவைக்கு25,000கிலோ கிராம் பெரிய விதை வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியும். அதன் நிமித்தம் மாத்தளை மாவட்டத்தின் கிம்பிஸ்ஸ கமநல அதிகாரப் பிரதேசத்தின் திகம்பத்தன பிரதேசத்தில் ஒரு விஷேட பெரிய விதை வெங்காய உற்பத்தி கருத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சென்று பார்த்தார்கள். அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை சந்தித்து இந்த விடயம் பற்றி கலந்துரையாடினார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு முழுமையான நவீன தொழில் நுட்பம் அடங்கிய களஞ்சியசாலை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இந்த 50 குடும்பங்களுக்கும் ஒவ்வொரு களஞ்சிய வசதி பெற்றுக் கொடுக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபா நிதி உதவியும் மற்றும் உபகரணங்களும் அரசாங்கத்தால் வழங்கப்படும். விதை உற்பத்திற்கு தேவையான சுரங்கவழி வசதிகள், சொட்டுநீர் முறைமை முதலியனவும் இந்த 50குடும்பங்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும். 10 கிலோ பெரிய வெங்காய விதையால் 01 கிலோ விதையை உற்பத்தி செய்ய முடியும். வழங்கப்படும் களஞ்சிய வசதியில் 3000 கிலோவை களஞ்சியப்படுத்தலாம். இதில் 30%வீதம் அழிந்து போனாலும் ஒரு விவாசாயி 2500கிலோ விதை வெங்காயத்தை சேமித்துக் கொள்ளலாம். ஆகையால் ஒரு விவசாயி 250 கிலோ விதை வெங்காயத்தை இவை அனைத்தையும் தவிர்த்துவிட்டு உற்பத்தி செய்து கொள்ளலாம். எனவே, இந்த 50 குடும்பங்களுக்கும் தேவையான உரிய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், நாம் இந்த ஆண்டு எதிர்பார்க்கும் 5000ஹெக்டேயர் காணியில் உற்பத்தி செய்வதற்கு தேவையான விதை வெங்காயத்தையும் திகம்பத்தன பிரதேசத்தில் உற்பத்தி செய்ய சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

image 02  image 03

image 04  image 05

image 06


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2021 10:26

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்