கலேவெல பிரதேசத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் ஒரு பெசன் பயிர்ச் செய்கைக் கருத் திட்டத்தை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம அவர்கள் நேற்று (2021.04.04)சென்று பார்வையிட்டார்கள்.
100 ஏக்கரில் 50விவசாயிகளின் பங்களிப்பில் இந்தப் பயிர்ச் செய்கைகக் கருத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. விவசாயி ஒருவருக்கு 7இலட்சம் ரூபா நிதி உதவி, தேவையான நடுகைக்கன்றுகள், சொட்டுநீர் முறைமை, நிலத்தைப் பன்படுத்துவதற்கு தேவையான உதவி, தொழில் நுட்ப அறிவுரைகள்அனைத்தும் அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்கப்படும். விவசாய நவீன கருத் திட்டம் (ASMP)இதற்கு தேவையான நிதிகளை வழங்கி, வழிகாட்டுகின்றது. அரை ஏக்கர் காணி பயிர் செய்கையிலிருந்து 80,000 -100000ரூபா வருமானம் கிடைப்பதாக இந்தப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் குறிப்பிட்டனர். உள்நாட்டு சந்தையிலும், ஏற்றுமதி சந்தையிலும் பெசனுக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. மொனராகல மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திலும் 200ஏக்கர் காணியில் பெசன் பயிர்ச் செய்கை இதே விதத்தில் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில் இதனையும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சென்று பார்வையிட்டார்கள். பயிரிடக் கூடிய அனைத்தையும் இந்த நாட்டில் பயிரிட்டு, தேசிய விவசாயத்தை அபிவிருத்தி செய்து, உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டம் இவ்வாறு ஒவ்வொன்றாக கமத்தொழில் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.