English (UK)SinhalaSriLankaTamilIndia


இந்த நாட்டு விவசாய அகராதியில் தரிசு நில வயல் காணிகளை நீக்கி அந்த வயல் காணிகளில் விளைச்சல் பெறச்செய்யும் தேசிய செயல்திட்டம் ஆரம்பிக்கப்படும்

image 002

  • வயல் நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட நிரப்பியெடுக்க அனுமதி வழங்க போவதில்லை என கமத்தொழில் அமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளிக்கின்றார்கள்
  • முழு நாட்டிலும் தரிசு நில வயல் காணிகள் ஒரு இலட்சம்
  • முதல் கட்டமாக 28,000ஏக்கர் காணிகளில் விளைச்சல் செய்யச் செய்யும் செயற்பாடு ஆரம்பிக்கப்படும்
  • 320கமநல சேவை நிலைய அதிகாரப் பிரதேசங்களிலுள்ள தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் பெறச் செய்யும் செயற்பாடு ஒரே தருணத்தில் ஆரம்பிக்கப்படும்
  • தேசிய வைபவம் தொம்பே பஹுறுஎல 140ஏக்கர் வயல் பகுதியில்

 

பயிரிடப்படாத ஒரு இலட்சம் ஏக்கர் தரிசு நில வயல் காணிகள் இந்த நாட்டில் காணப்படுகின்றன. இவற்றில் 28,000ஏக்கர்களில் நாடு முழுதிலுமுள்ள 320 கமநல சேவை நிலைய அதிகாரப் பிரதேசங்களில் விளைச்சல் செய்யச் செய்யும் இந்த செயல்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு முழுதிலும் காணப்படும் தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யச் செய்யும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண வைபவம் கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசத்தின் பஹுறுஎல கல்வலகொட வயல் பகுதியில் நடத்தப்பட்டது. கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஅவர்களின் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் திரு மிலான் ஜயதிலக்க ஆகியோர் அடங்கலாக அரச அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். உணவு தேவையில் சுயதேவைப்பூர்த்தி நிறைந்த ஒரு நாட்டையும், ஒரு உற்பத்தி பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் மேலும் ஒரு நடவடிக்கையாகவே,தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யச் செய்யும் இந்த தேசிய செயல்திட்டம்,செயன்முறையாக முழுமையான அரச அனுசரணையில் மேற்கொள்ளப்படுகின்றது.

 

ஒரு ஏக்கர் தரிசு நில வயல் காணியில் விளைச்சல் செய்யச் செய்வதற்கு 25000ரூபா வட்டியற்ற ஒரு கடன் தொகையும், புதிய தொழில் நுட்பமும், காடு வளர்ந்துள்ள காணிகளை துப்புரவு செய்து பன்படுத்த தேவையான எந்திர சாதனங்கள் அனைத்தும் கமநல சேவை திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும். உரங்கள் இலவசமாக பெற்று கொடுக்கப்படும். கால்வாய், வாய்க்கால், அணைக்கட்டு மற்றும் நீர் மார்க்கங்கள் முதலியவற்றை செய்து கொடுக்கும் திட்டமும் இதன் கீழ் செயற்படுத்தப்படும். இந்த காணப்படும் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் தரிசு நில வயல் காணிகளில், பல கட்டங்களின் கீழ் முழுமையாக விளைச்சல் செய்யச்செய்வதற்குரிய தேவையான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 28000ஏக்கர் காணிகளில் பயிரிட்டு புதிதாக நாட்டின் நெல் உற்பத்திற்கு 35000மெ.டொ. நெல் விளைச்சலை சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யச்செய்யும் இந்த தேசிய வைபத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்

நாடு முழுதிலுமுள்ள சுமார் 28000ஏக்கர் தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யும் செயல்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தரிசு நில வயல் காணி எனும் சொல்லை விவசாய அகராதியிலிருந்து நீக்குவது எமது இலக்காகும். 40 வருடங்களாக பயிரிடப்படாதிருந்த 140ஏக்கர் தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யும் கரும பணி இந்த தேசிய செயல்திட்ட வைபவத்திலிருந்து இன்று ஆரம்பமாகுகிறது. பயிரிடக் கூடிய காணிகள் அனைத்திலும் பயிரிடுவதும் கமத்தொழில் அமைச்சின் குறிக்கோளாகும். ஒரு உற்பத்திப் பொருளாதாரம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படும். சகல கமநல சேவை நிலையங்களையும் உள்ளடக்கி நாம் செயன்முறை ரீதியாக இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.பேச்சில் மட்டுமன்றி செயலிலும் நாம் இதனை செய்து காட்டுவோம். இன்று பயிரிடப்படாத தரிசு நில வயல் காணிகள் துப்பு செய்யப்பட்டு அந்த வயல் காணிகளில் விளைச்சல் செய்யப்படும் காட்சியை புகைப்படமெடுத்து காடுகள் அழிக்கப்படுவதாக கோசமிட்டு சில தரப்புகள் எதிர்ப்பு காட்டி வருகின்றன. அந்த புகைப்படங்களை காண்பித்து விகார மகாதேவி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யப் போகின்றார்களோ தெரியவில்லை. இவ்வாறான ஒரு பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் இந்தக் கட்டத்தில் நாம் இந்த நாட்டின் விவசாய துறையை முன்னேற்ற பாடுபடுகின்றோம். விவசாயிகள், கமக்காரர் அமைப்பு பிரதிநிதிகள் கொழும்பு நகருக்கு வந்து காடுகள் அழிப்பதாக கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யப் போவதாக நான் கேள்விப்பட்டேன்.

கிராமத்திலுள்ளவர்களுக்கு தெரியாமல் காடுகளை அழிக்க முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள் இது முன்னெடுக்கப்படுவது வெறும் பொய் பிரச்சாரம் என்று. இந்த நாடு இறக்குமதியில் தங்கியிருக்கின்றது. உணவுப் பொருட்கள், விதைகள், உரங்கள் என்பன இறக்குமதி செய்யப் படுகின்றன. இவை அனைத்தும் எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப் படுகின்றன. இந்த நாடு இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் நிலையை நாம் மேலும் 3வருடத்திற்குள் மாற்றி, அதனை ஒரு உற்பத்தி பொருளாதாரமாக பரிவர்த்தனை செய்வோம். இந்த நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்ற பெருமளவான அந்நியசெலாவணியை இந்த விவசாயிகளுக்கு சேமித்து கொடுப்போம். 1970ஆம் ஆண்டுகளில்,34% தேசிய பொருளாதாரத்திற்கு விவசாய துறை பங்களித்திருந்தது. அது இன்று 7%வீதம்வரை குறைவடைந்துள்ளது. அன்று விவசாயத்தில் இருந்து தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொடுத்த வலிமையை நாம் இன்று மீண்டும் பெற்றுக் கொடுப்போம். இதற்கு முதல் கமநல சேவைகள் திணைக்களம் செய்தது, வயல் காணிகளை மண்ணிரப்பி எடுப்பதற்கு கடிதங்களில் கையொபப்பமிடுவது. நாம் ஒரு வாக்குறுதி அளிக்கின்றோம், எமது அரசாங்க காலத்தில் ஒரு அங்குல வயல் காணி கூட மண்ணிரப்பியெடுக்கப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்

 

தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யச்செய்யும் இந்த தேசிய வைபவத்தில் கலந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சஷீந்திரக ராஜபகஷ அவர்கள்

 

வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சாப்பிடும் பாரம்பரியம் இன்றைய ஜனாதிபதியினதும் மற்றும் பிரதமரினதும் அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இந்த நாட்டிலுள்ள விவசாயிகளை முன்னேற்றுவது எமது கொள்கையாகும். வரலாற்றில் அதிக நிதியை ஒதுக்கியது அதன் காரணமாகத்தான். அதன் உரிய பொறுப்பை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களும், நானும், அதிகாரிகள் பலரும் நாடு பூராகவும் விஜயம் செய்து அவதானித்து, விவசாயத்தை முன்னேற்ற தேவையான தீரமானங்களில் 90%வீத தீர்மானத்தை எடுத்து நிறைவு செய்துள்ளோம். இன்று உற்பத்திகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று நாட்டிற்கு தேவையான நெல்லை நாட்டினது தேவையின் அளவுக்கு எம்மால் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. வேறு நாடுகளிலிருந்து எடுத்து வந்து சாப்பிடுகின்ற, வெளிநாடுகளில் தங்கியிருக்கின்ற,புறையோடிப்போன சம்பிராயத வழக்கத்திலிருந்து விடுபடுவதாக இருந்தால் இந்த நாட்டு மக்களின் உள்ளங்களை நாம் முதலில் சரிசெய்ய வேண்டும். நாம் அரசாங்கம் என்ற வகையில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய சகலஉதவிகளையும் நாம் பெற்றுக் கொடுப்போம். பயிர்களை வளர்ப்பதற்குமுயற்சியுங்கள். பிரச்சினைகளை எம்மிடம் கூறுங்கள். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளிடம் இன்று நான் இந்த தேசிய வைபவத்தின் போது கேட்டுக் கொள்கின்றேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க அவர்களும் இதன் போது கருத்துத் தெரிவித்தார்கள்.

விவசாய துறை இன்று புதிய ஒரு பயணத்தில் ஒரு அடி முன்னிப்பதை அவதானிக்க முடிகின்றது. இரண்டு இளம் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் விவசாய விடயத்தை ஒப்படைத்துள்ளார்கள். அதனால்தான் விவசாயம் புத்துயிர் பெற்றிருக்கின்றது. விவசாயிகளிடமிருந்து வந்த மனக்குறைகள் குறைந்து, நாடு முழுதிலும் ஒரு விவசாய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று நெல் மற்றும் அரிசி மாஃபியாவுடன் கமத்தொழில் அமைச்சர் மோதிக்கொள்கின்றார். அதற்கு தேவையான சக்தியை நாம் அவருக்கு வழங்குவோம். தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்யப்படுவதும் நெல் மற்றும் அரிசி மாஃபியாவுக்கு ஒரு தீர்வாக அமையும்

 

 image 001  image 003

image 004  image 005

image 006  image 007

image 008  image 009

image 10  image 11

               


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 29 மார்ச் 2021 07:27

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்