English (UK)SinhalaSriLankaTamilIndia


நாடு முழுதிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பொய் பிரசாங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

Group image

விவசாயிகளை பிரதிநிதிப்படுத்தும் நாடு முழுதிலுமுள்ள பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கின்றனர்

  • அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த பொய் பிரச்சாரத்தின் பின்னணியிலுள்ளன.
  • வெளிநாட்டு கறுப்புப் பணத்தை இவை செலவிடுகின்றன.
  • கொழும்பு நரகத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்ய வருகின்றவர்கள் வருவது காடுகள் அழிக்கப்படும் இடங்களை ஊருக்கு காட்டுவதற்கு.
  • காடுகள் அழிப்பு நிகழுமாயின் முதலில் எதிர்ப்பது நாம்.

 

கொழும்பு நகரத்தில் கூடிய இலங்கை தேசிய கமக்காரர் அமைப்பு பேரவையினது பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.

01.திரு எஸ்.எம்.ஜி. சமரகோன் (தலைவர் -இலங்கை தேசிய கமக்காரர் அமைப்பு பே

01

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனுராதபுர மாவட்டத்தில் எந்த விதமான காடு அழிப்புகளும் நிகழவில்லை. 20, 30 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த வன நிலங்களை விடுவித்து தரும்படி கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாம் மேன்மை தங்கிய ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டோம். விவசாயிகளின் நிலங்களை விவசாயிகளுக்கு கொடுக்கும்படி ஜனாதிபதி அவர்கள் கூறினார்கள். 33,000 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளதாக கூறி முன்னெடுக்கப்படும் ஊடக பிரச்சாரம் பொய்யானது. அனுராதபுரத்தில் ஒரு மரமேனும் வெட்டியழிக்கப்படவில்லை என பொறுப்புடன் கூற முடியும். இது, பொது மக்களுக்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை குழப்ப செய்கின்ற பொய் பிரச்சாரமும் சேறுபூசலும் தான். 

 

02. திரு கருனாதாச பள்ளியகே (செயலாளர்-இலங்கை தேசிய கமக்காரர் அமைப்பு பேரவை)

02

பெரும் காடு அழிப்புகள் நிகழ்வதாக ஊடக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காடுகளை வெட்டுவதாக கூறுகின்றனர். இவை எல்லாம் பொய் பிரச்சாரம். பல ஆண்டுகளாக பயிர்கள் பயிரிடப்படாத தரிசு நில வயல் காணிகள் இருந்தன. 30 ஆண்டு காலமாக பயிரிடப்படாமல் இருந்ததால் பயிரிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் எமது வேண்டுகோளுக்கு இணங்க. இவ்வாறு பொய்யாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தையும் சேறுபூசுதலையும் விவசாயிகள் என்ற வகையில் நாம் முழுமையாக கண்டிக்கின்றோம். விவசாயிகளிடம் நாம் கேட்டுக் கொள்வது இந்த பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என. 

 

03. திரு உபாலி ராஜபக்ஷ - (செயலாளர்-பதுளை மாவட்டத்தின் தேசியகமக்காரர் அமைப்பு குழு)

03

நாம் பார்த்தோம் கடந்த காலத்தில் காடுகளை அழித்த விதத்தை. மரங்களை வெட்டி விற்பனை செய்த விதத்தை. அவ்வாறான அழிவுகள் இன்று நிகழ்வதில்லை.  அரசாங்கத்தை மேலால் புகழ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. ஆயினும் விவசாயிகளை பற்றி சிந்திக்கும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் சூழ்ச்சியாகும். அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியில் இந்த எதிர்ப்பார்ப்பாட்டங்களும் பொய் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டிருந்த காட்சிகளை புகைப்படமெடுத்து எமது நாட்டில் நடந்ததாக காட்டுகின்றனர். இது வெறும் நாடகம்.

 

04.திரு டீ.எம். பிரேமரத்ன - ( தலைவர்மொனராகல் மாவட்டத்தின் தேசிய கமக்காரர் அமைப்பு குழு) 

04

மொனரகல் மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் எந்த விதமான காடுகள் அழிப்பையும் நாம் காணவில்லை. இது ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தை குழப்பும் ஒரு செயலாகும். மொனராகல் பகுதியில் நில்கல, யால தேசிய சரணாலயம் ஆகியன அமைந்துள்ளன. காடுகளை அழிப்பதற்கு இங்குள்ள மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. கொழும்பில் இருந்துகொண்டு இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 

 

05. திரு ஏ.பி. அமரதாச - (தலைவர்-களுத்துறை மாவட்டத்தின் தேசியகமக்காரர் அமைப்பு குழு)

05

 

களுத்துறை மாவட்டத்தில் காடுகள் இருக்கின்றன. எந்த விதத்திலும் அந்த காடுகளுக்கு பாதிப்பில்லை. இது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த காடுகள் அழிக்கப்படுவதாக கூறி முன்னெடுக்கப்படும் ஒரு சூழ்ச்சியாகும். 

 

06. திரு பி.எம். பியரத்ன -  (தலைவர்களுத்துறை மாவட்டத்தின் இலங்கை தேசிய கமக்காரர் அமைப்பு குழு)

06

அ.சா.நி. பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து கறுப்பு பணத்தைக்கொண்டு காடுகள் அழிக்கப்படுவதாகவும், காடுகள் நாசமாகுவதாகவும் கூறி ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது வெறும் பொய். ஊடகத்திலிருந்து காண்பிப்பது பொய் குற்றச்சாட்டு. ஜனாதிபதியையும் விவசாயிகளையும் பிரித்து இந்த நாட்டை பெரும் அழிவுக்கு இட்டுச்செல்ல இந்த சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது. எமது மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுமாயின், முதலில் அதை எதிர்ப்பது எமது விவசாயிகள். காடுகள் அழிக்கப்படுவதை நாம் காணவில்லை. இந்த சூழ்சிகாரர்கள் கூறுதெல்லாம் வெறும் பொய் என நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம். 

 

07.திரு டப்ளியூ.எம்.எஸ். வாசல பண்டார தனாதிகாரி-அனுராதபுர மாவட்டத்தின் தேசிய கமக்காரர் குழு)

07

 

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நாம் கூறுவது, இந்த வெறும் பொய் குற்றச்சாட்டை நம்ப வேண்டாம் என்று. அரச சார்பற்ற அமைப்புகள் சரி, எதிர்க்கட்சிகள் சரி, ஆர்ப்பாட்டக்காரர்கள் சரி கூறும் இந்த காடு அழிப்பு, நிகழ்கின்றதா என தேடிப்பாருங்கள். அந்தந்த பகுதிகளுக்கு சென்று பாருங்கள். பார்த்த பின்னர் தீர்மானியுங்கள். பொய்களுக்கு ஏமாற வேண்டாம். 

 

08. திரு உபவங்ச பண்டார - (தனாதிகாரி - கண்டி மாவட்டத்தின் தேசிய கமக்காரர் அமைப்பு குழு)

08

இன்று 25 மாவட்டங்களிலிருந்தும் உத்தியோகத்தர்களும் பிரதிநிதிகளும் நாம் கொழும்பு நகரத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டனர். நாம் கேட்டுப்பார்த்தோம்,இந்த காடு அழிப்பு நிகழ்கின்றதா என. அவர்கள் கூறினார் தாம் பிரதிநிதிப்படுத்தும் பிரதேசங்களில் எந்த விதமான காடு அழிப்பும் நிகழ்வதில்லை என்று.குற்றஞ்சாட்டும் இந்த தரப்புகள் எங்கே இருக்கின்றன என்பது,விவசாயிகள் என்ற வகையில் எமக்கு இருக்கின்ற பிரச்சினை. இது சேறுபூசும் ஒரு செயல். நாட்டின் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக செய்ய முனைகின்ற பொய் பிரச்சாரமும் சேறுபூசலும். எந்த விதமான காடு அழிப்புகளும் நிகழவில்லை என்பதை விவசாயிகள், கமக்காரர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு தெரியும். அதனால்தான் நாம் பொறுப்புடன் கூறுகின்றோம் காடுகள் அழிக்கப்படுவதற்கு விவசாயிகள் எப்பொழுதும் எதிர்ப்பவர்கள். எமக்கு தெரியாமல் களவாக காடுகளை யாரும் அழிக்க முடியாது. அது மாதிரி ஒரு காடு அழிப்பு நிகழவில்லை என நாம் பொறுப்புடன் கூறுகின்றோம். 

 

09. திரு ஜே.ஆர்.டீ. சிறிபால - (தலைவர்-அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தேசிய கமக்காரர் அமைப்பு குழு)

09\

நான் 17வருடங்களாக விவசாயம் செய்கின்றேன். புன்தல, யால சாரணாலய காடுகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நிகழவில்லை என நான் பொறுப்புடன் கூறுகின்றேன். பணத்திற்கு அடிமையாகியவர்கள் காடுகள் அழிக்கப்படுவதாக இந்த பொய்யை கூறிக்கொண்டு கொழும்பு நகரத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது ஜனாதிபதிக்கு சேறுபூசுவதற்காக அன்றி வேறெதற்குமில்லை. வேறு நாடுகளில் காடு அழிப்புகள் நிகழ்ந்த காட்சிகளை புகைப்படமெடுத்து காண்பித்து வருகின்றார்கள். நாம் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். விவசாயிகள் இந்த பொய் சூழ்ச்சிகளுக்கு ஏமாறப்போவதில்லை.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2021 09:15

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்