English (UK)SinhalaSriLankaTamilIndia


ரஜரட்டை பிரதேசத்தில் சோளத்தை பயிரிடும் 5000விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

image 07

  • இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டு விவசாயிகளுக்கு சிறந்த விலை சூத்திரம் தயாரிக்கப்படும்.
  • சோளத்தால் நாடு சுயதேவை பூர்த்தி அடைய செய்யப் படும்.
  • இவை அனைத்தும் அரசாங்த்தின் உதவியில்.
  • நவீன உபகரணங்கள், நவீன இயந்திராதிகள், 50%வீத விதை நிவாரணம் எல்லாம் அரசாங்கம் வழங்கும்.
  • விவசாயிகளின் உரிமைக் குரலுக்கும், அனுபவத்திற்கும், அவர்களின் பிரேரணைகளுக்கும் முன்னுரிமை அளித்து விவசாயத்தால் நாடு சுயபூர்த்தி அடைய செய்யப்படும்.

என்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் ரஜரட்டை கமக்காரர்கள் அமைப்பு கூட்டத்தில் கூறினார்கள்.

 

அனுராதபுர கமநல சேவை நிலையத்தில் அனுராதபுர மாவட்ட கமக்காரர் அமைப்புகள் பேரவைக் குழு உத்தியோகத்தர்களும் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் (2021.03.18)ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களை சந்தித்தனர். அமைச்சர் சந்திரசேன அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள். அனுராதபுர மாவட்டத்தின் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசனம், காணிதொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலவற்றுக்கு இங்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தார்கள்.

 

விவசாயிகளுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கின்றது. பயிர்களை பயிரிட்டு நாட்டின் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய விவசாயிகள் பொறுப்பு என அமைச்சர் அவர்கள் இதன் போது குறிப்பிட்டார்கள். வட மத்திய மாகாணத்தில் கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய நவீனமாக்கல் கருத் திட்டம்(SAPP)செயற்படுத்தப்படும் சோளக் கருத் திட்டத்திற்கான சகல உதவிகளையும் மற்றும் உபகரணங்களையும் 02மாத காலத்திற்குள் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் அவர்கள் கருத் திட்டத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதன் நிமித்தம் அரசு 1000மில்லியன் ரூபா நிதியை செலவு செய்கின்றது. 5000விவசாயிகள் ரூ.48,000வீதம் இந்த கருத் திட்டத்தில் உதவி பெறுகின்றார்கள். நவீன உபகரணங்களும், நவீன தொழில் நுட்பமும்,50%வீத விதை நிவாரணமும் இதன் கீழ் வழங்கப்படவுள்ளன. இயந்திராதிகளை கொள்வனவு செய்யும் போது விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். சோளத்தால் நாட்டை சுயபூர்த்தி அடைய செய்யும் இலக்கை அடைவதற்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

 

இதன் கீழ் நாடு முழுதிலும் ஏனைய பிரதேசங்கள் அடங்கலாக 7000விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.

 

ஆகையால் தேவையான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமக்காரர் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்வைத்தவிதைகள் பற்றிய பிரச்சினைகள், சிறிய நீர்ப்பாசன பிரச்சினைகள், வாய்க்கால் பிரச்சினைகள், வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளும் போது எதிர்நோக்கும் கஷ்டங்கள் முதலிய சகல பிரச்சினைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அமைச்சர் அவர்கள் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தார். கமநல சேவை நிலையம் ஒவ்வொன்றுக்கும் குளங்களிலுள்ள பாசிகளை அகற்றும் இயந்திர உபகரண பொதி வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் கமக்காரர் அமைப்புகளிடம் வாக்குறுதி அளித்தார்கள். 09மில்லியன் ரூபா செலவில் 02 உலர்த்தி இயந்திர உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் கூட இதன் போது தீர்மானிக்கப்பட்டது.பயிரிடுவதற்காக மட்டுமன்றி பெறுகின்ற உற்பத்திகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு தேவையான வசதிகளும் உகந்த சூழலும் ஏற்படுத்தி கொடுக்கப் படும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள். இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் கூறினார்கள்.

 

கமலநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் மற்றும் (SAPP)கருத் திட்டத்தின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.

 

 image 01  image 02

image 03  image 04  image 06

image 05  

image 08


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 மார்ச் 2021 08:48

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்