English (UK)SinhalaSriLankaTamilIndia


1200குடும்பங்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஒரு மிளகாய் பயிர்ச் செய்கைக் கருத் திட்டம்

  • Agri image 07
  • அரசாங்கம் செலவு செய்யும் தொகை - 548மில்லியன் ரூபா
  • நிதியேற்பாடும் செயற்படுத்துகையும் - விவசாய நவீனமாக்கல் கருத் திட்டம் (SAPP)
  • ¼ஏக்கர் வீதம் பயிர் செய்யும் 1200விவசாய குடும்பங்களுக்கு உதவியும் மற்றும் நவீன தொழில் நுட்ப அறிவும்
  • 11மில்லியன் ரூபா செலவில் சாலியபுறவுக்கு மிளகாய் ஏற்றுமதி பொதியிடும் ஒரு நிலையம்

 

 

 

அனுராதபுர மாவட்டத்தில் 1200விவசாயிகள் இந்த பயிர்ச் செய்கையை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளனர். இவர்கள், கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமாக்கல் கருத் திட்டத்தின் (SAPP)கீழ் இந்த பயிர்ச் செய்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு உதவியும் வழங்கப்படுகின்றது. ¼ஏக்கர் அளவான பயிர்ச் செய்கைக்கு 206,000ரூபா நிதி உதவி குறைந்த வட்டி வீதத்தில்(6.5%) 135,000ரூபா கடன் இந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்களின் பாவனை,பொலி உறையை பயன்படுத்தி தாவர நடுகைக்கன்றுகளை முளைக்க செய்யக் கூடிய விதம் ஆகியன பற்றிய புதிய தொழில் நுட்பத்தையும், அழிவுகளில் இருந்து பாதுகாக்க கூடிய பாதுகாப்பான வலைகளை இட்டுபாதுகாத்து கொள்ள தேவையான தொழில் நுட்ப வசதியையும் பெற்றுக் கொடுத்து விவசாயத்தையும் தேசியத்தையும் பாதுகாத்து நவீனமாக்கலுக்கு இட்டுச்செல்வது இந்த மிளகாய் பயிர்ச் செய்கைக் கருத் திட்டத்தின் விஷேட சிறப்பம்சமாகும்.

 

 

 

மெதவாச்சி கல்லேல்லகம பிரதேசத்தில் இந்த கருத் திட்டத்தின் கீழ் காணப்படுகின்ற மிளகாய் பயிர் நிலங்களை (2021.03.18)கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமற்றும்எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர். இந்த விஜயத்தின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டன. இந்த பிரதேசத்திலுள்ள விவசாய பிரச்சினைகள் பலவற்றுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். உரிய பிரதேசத்தின் பெயரில் மிளகாய்களை சந்தைக்கு விநியோகிக்கும் வரை குறித்த இந்த கருத் திட்டத்தை மேம்படுத்துமாறு இங்கு அமைச்சர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள். கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த விவசாய நவீனமாக்கல் கருத் திட்டம் (SAPP)இதற்காக 548மில்லியன் ரூபா நிதியை உதவியாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் செத்தல் மிளகாய்க்கான உள்நாட்டு தேவை 50,000மெ.டொ. அளவாகும். தற்பொழுது100% வீதம்மிளகாய் இறக்குமதி செய்யப்படுகின்றது. அனுராதபுர மாவட்டம் அடங்கலாக எல்லாம்07மாவட்டங்களில் 8,000ஹெக்டேயர் அளவான காணிகளை இனங்கண்டு உள்நாட்டு மிளகாய் தேவையை 100% வீதம் 03வருட காலத்திற்குள் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும். ஆகையால், இதற்கான வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும் விதத்தையும்,அந்த வேலைத் திட்டத்தின் முன்னேற்றத்தையும் கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிளகாய் பயிரிடப்படும் நிலங்களுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள்சென்றுஅந்த பகுதியிலுள்ள விசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்கள். அந்த விவசாயிகளுக்கு தேவையான எல்லா வகை உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும், காணிகள் அடங்கலாக பிரச்சினைகளை தீர்க்கவும் இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இளைஞர் யுவதிகளையும் விவசாயத்திற்கு பங்களிக்கச் செய்வதற்கு தேவையான ஒரு வேலைத் திட்டமும் தற்பொழுது செயற்படுத்தப்படுகின்றது.

 

 

Agri image 01  Agri image 02

Agri image 03  Agri image 04

Agri image 05  Agri image 06

Agri image 08  Agri image 09


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 மார்ச் 2021 08:44

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்