English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாய நிலங்களுக்கு சென்று நெல்லைக் கொள்வனவு செய்யும் செயல்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் ஊக்கம் காணப்படுகின்றது

AG NEWS 02.

மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நெல்லை கொள்வனவு செய்யும் தேசிய செயல்திட்டம் 6மாவட்டங்கள் பூராகவும் தற்பொழுது செயற்படுத்தப்படுகின்றது.

கிளிநொச்சி நெல் சந்தைப்படுத்தல் சபையினது களஞ்சியசாலைக்கு கமத்தொழில் அமைச்சர் ஒரு அவதானிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

ஒரு மாத காலப் பகுதிற்குள் இரண்டு இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டம் வெற்றியளித்துள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்யும் இந்தத் தேசிய செயல்திட்டம் அனுராதபுரமாவட்டம்,மட்டக்களப்புமாவட்டம்,அம்பாறைமாவட்டம், பொலன்னறுவைமாவட்டம், குருனாகல் மாவட்டம்மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய 6 மாவட்டங்களை மையமாக கொண்டு நாடு முழுதிலும் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகின்றது. 2021.03.17ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கிளிநொச்சி பகுதியில் நெல்லை கொள்வனவு செய்யும் அலுவலகத்திற்கு ஒரு அவதானிப்பு விடயத்தை மேற்கொண்டிருந்தார்கள். இதன் போது நெல்லை கொள்வனவு செய்யும் இந்ததேசிய செயல்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் ஊக்கம் காணப்படுவது தெரிய வந்தது. அதற்கிணங்க, ஒட்டுச்சூடான், கிளிநொச்சி பிராந்தியங்களின் உதவி முகாமையார்கள் தெரிவித்தபடி இலகுவில் 10000 மெ.டொ. நெல்லை அந்த மாவட்டத்திலிருந்து கொள்வனவு செய்ய முடியும் என்பது தெளிவாகியது. நெல்லை கொள்வனவு செய்யும் இந்தத் தேசிய செயல்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்கள் தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த நெல்லைக் கொள்வனவு செய்யும் தேசிய செயல்திட்டம் மிக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது ஒரு மாத காலப் பகுதியில் இரண்டு இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தற்பொழுது மிகவும் வெற்றியளித்துள்ளது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு சொந்தமாக மூன்று இலட்சம் மெ.டொ. நெல் இருப்பை பேணுவதன் ஊடாக, நெல்லுக்கும் அரிசிக்கும் எதிராக நிலவி வருகின்ற மாஃபியாவிலிருந்து விவசாயிகளையும் மற்றும்நுகர்வோரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆதலால், நெல்லை விற்பனை செய்யும் செயலில் வட பிராந்திய மக்கள் கடுமையான ஊக்கத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள். போட்டி விலையில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யத் தீர்மானித்ததன் ஊடாக தமக்கு மிகவும் பொருளாதார நன்மை கிட்டியதாக இந்தப் பிரதேச வாழ் விவசாயிகள் தெரிவித்தனர். ஆகவே நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு தமது உற்பத்திகளை விற்பனை செய்ய தீர்மானித்ததாகவும் களஞ்சியசாலைகளுக்கு வந்திருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

வட மாகாணத்தில் மட்டுமன்றி நாட்டிலுள்ள ஏனைய மாவட்ட விவசாயிகளும் நெல்லைக் கொள்வனவு செய்யும் இந்த அரச வேலைத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அந்தப் பிரதேச நெல் சந்தைப்படுத்தல் சபைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி ஒட்டுச்சூடான் ஆகிய நெல் களஞ்சிய சாலைகளில் ஏற்கெனவே நெல் முழுமையாக நிரம்பியுள்ளதை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அவதானித்தார்கள். கிளிநொச்சியிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்றிருந்த அமைச்சர் அவர்கள் நெல்லை கொள்வனவு செய்யும் செயல்முறையை பற்றி தேடிப் பார்த்தார்கள். 6மாவட்டங்களில் நெல்லை கொள்வனவு செய்யும் தேசிய செயல்திட்டத்திற்காகமட்டும் 366ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரிய விவசாய நிலங்களுக்கு சென்று ரொக்க பணத்தை செலுத்தி நெல்லை கொள்வனவு செய்யுமாறு அந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வட மாகாணம் அடங்கலாக ஏனைய மாவட்டங்களிலும் இந்த விதத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இந்த செயல்திட்டத்திற்கு கடும் ஊக்கம் காணப்படுகின்றது.

 

AGC NEWS 04.  AGC-NEWS-01.

AGC-NEWS-05


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 மார்ச் 2021 06:39

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்