ஒரு மணித்தியால காலத்தினுள் 05 மெற்றிக் டொன் நெல்லை அரிசியாக்கி உற்பத்தி செய்யக் கூடிய ஒரு நடமாடும் அரிசி உற்பத்தி இயந்திரத்தை புதிய கண்டுபிடிப்பாளரான திரு விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன அவர்கள் இன்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
இவர் இந்த இயந்திரத்தை கமத்தொழில் அமைச்சில் அறிமுகப்படுத்தினார். இராஜாங்க அமைச்சர் விஷேட மருத்துவர் திருமதி சீதா அரம்பேபொல அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். புதிய கண்டுபிடிப்பாளரான திரு திம்புல்கஸ்தென்ன அவர்கள் அறிமுகப்படுத்தும் இந்த புதிய இயந்திரம் ஈர நெல்லை உலர்த்திக் கொள்ளவும், நெல்லை அவிக்கக் கூடியவும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதே போல் 40 அடி அளவான ஒரு கொள்கலனினுள் இந்த புதிய இயந்திரத்தை பொருத்தி வயல் களங்களுக்கு சென்று நெல்லை அரிசியாக்கி உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த புதிய இயந்திரம் தானியக்க ரீதியில் நெல்லை உள்ளெடுத்துக் கொள்ளும். நெல்லை அவித்துக் கொள்ளவும், உலர்த்திக் கொள்ளவும், பின்னர் கல்லையும் மணலையும் நீக்கி தூய்மையான அரிசியை உற்பத்தி செய்யவும் இந்த இயந்திரம் பயன்படும். ஒட்டுமொத்த வேலைக்கும் இரண்டு ஊழியர்கள் மாத்திரம் போதுமானதாகும். எஞ்சிய அனைத்து வேலைகளும் தானியக்க ரீதியில் மேற்கொள்ளப்படுவது இந்த புதிய இயந்திரத்தின் விஷேடத்துவமாகும். பாரியளவான ஒரு சில அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த நாட்டில் நெல் அரிசி மாஃபியாவை செய்து வருகின்றனர். விவசாயிகளையும், நுகர்வோரையும் அந்த மாஃபியாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்த புதிய இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளரான திரு விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன அவர்கள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களிடம் தெரிவித்தார்கள். இந்த இயந்திரத்தின் ஆக்கவுரிமையை கமத்தொழில் அமைச்சுக்கு தான்ஒப்படக்க தயாராகவுள்ளதாகவும் இந்த இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் அமைச்சரிடம் கூறினார்.
இந்த புதிய இயந்திரத்தை தேவையான அளவு விசாலமானதாக தயாரித்து முதலாவது இயந்திரத்தை நிர்மாணிக்க நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள். கமநல சேவை நிலைய மட்டத்தில் ஒரு இயந்திரம் வீதம் பெற்றுக் கொடுத்து இடைத்தரகு மாஃபியாவுக்கும் முடிவுகட்ட முடியும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நியாயயமான ஒரு விலையில் இந்த இயந்திரத்தை பிரதேச மட்டத்தில் முழு நாடும் உள்ளடங்கும் வகையில் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் இந்த இயந்திரத்தின் புதிய கண்டுபிடிப்பாளர் தெரிவித்தார். சதொச மற்றும் கூட்டுறவு சங்கக் கடைகள் என்பவற்றின் ஊடாக அரிசியை சந்தைப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கும் இந்த புதிய இயந்திரத்தை கொண்டு மிகவும் முக்கியமான கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
வயல் களங்களுக்கு சென்று தூய்மையான அரிசியை உற்பத்தி செய்வது இந்த இயந்திரத்திலுள்ள விஷேடத்துவமாகும். இது மாதிரியான ஒரு இயந்திரம் அறிமுக்கப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த இயந்திரத்தை நிர்மாணிப்பதற்கு அதிக பணம் செலவாகாது எனவும் இதன் கண்டுபிடிப்பாளர் அமைச்சர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பான மேல் நடவடிக்கையை துரிதப்படுத்த தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜட்டால் மான்னபெரும அவர்களுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
v விவசாயிகளின் உற்பத்திகளுக்கு உச்ச விலை
v நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி
v நெல் அரிசி மாஃபியாவை நிறுத்துவதற்கான ஒரு தீர்வு
v நாடு முழுதிலும் புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்கல்
v புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கல் முதலிய பல குறிக்கோள்கள் இந்த புதிய இயந்திரத்தின் மூலமாக நிறைவேறும். இந்த இயந்திரம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது.