English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு சென்று நெல்லைக் கொள்வனவு செய்யும் ஒரு மாத தேசிய வேலைத் திட்டம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை

AGC-MEDIA-NEWS-01.

  1. விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு சென்று, ஈர நெல்லைக் கொள்வனவு செய்தல்
  2. 6 மாவட்டங்களுக்கு முதலிடம்
  3. ஒரு மாதத்திற்குள் 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு இலக்கு
  4. இந்த வேலைத் திட்டத்திற்கு 366 உத்தியோகத்தர்களும் மற்றும் 60 லொறிகளும்

 

அரசாங்கத்திற்கு ஒரு நெல் களஞ்சியத்தை பேணும் முகமாக போட்டி விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வலுப்படுத்த கமத்தொழில் அமை்சசர் மஹிந்தானந்த அவர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். அந்த அறிவுரைகளுக்கு இணங்க, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையான ஒரு மாத காலப் பகுதியில் இரண்டு இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு சென்று கொள்வனவு செய்யுமாறு அமைச்சர் அவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் குருனாகல் ஆகிய ஆறு (06) மாவட்டங்களுக்கு இந்த வேலைத் திட்டத்தில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் 06 பிராந்திய முகாமையாளர்களும், 60 பிராந்திய உதவி முகாமையாளர்களும், 300 விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களும் (வி.ஆ.உ.உ.) இந்த வேலைத் திட்டத்திற்கு இணைக்கப் படுவார்கள்.

 

இதன் நிமித்தம் 60 லொறிகளை ஈடுபடுத்தி நாளாந்தம் 6000 மெற்றிக் டொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து போட்டி விலையில் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஈர நெல்லை கொள்வனவு செய்யுமாறும் அவ்வாறு கொள்வனவு செய்யும் நேரத்திலேயே விவசாயிகளுக்கு கொடுப்பனவுகளை செலுத்துமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். நெல்லைக் கொள்வனவு செய்யும் இந்த தேசிய வேலைத் திட்டத்துடன் சம்பந்தப்படும் அந்தந்த நிறுவனங்களின் நிறுவன தலைவர்களை கமத்தொழில் அமைச்சுக்கு அழைத்து, அமைச்சர் அவர்கள் இவ்வாறு தனது அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். முதலாளிமார்களின் பணத்தால் தோன்றும் அரிசி மாபியாவும் நெல் மாபியாவும் ஏற்படுத்தும் சவால்களாக கருத்திற் கொண்டு, 2 கோடிக்கும் அதிக மக்களுக்கு நியாய விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவேற்றுமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுரைகளை வழங்கினார்கள்.

 

AGC-MEDIA-NEWS-02.  AGC-MEDIA-NEWS-03.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 04 மார்ச் 2021 11:12

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்