➤உர மானியத்தைக் குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் கிடையாது.
➤நெல் கொள்வனவு தேசிய திட்டத்தின் பிரகாரம்,1000 கிலோ நெல்லை விற்பனை செய்யாத விவசாயிகள் உரத்தை 4,000 ரூபாசந்தை விலையில் வாங்க வேண்டி ஏற்படும்.
➤அரசாங்கத்தின் தேசிய திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விவசாயிகளுக்கும் விவசாய காப்பீடு வழங்கப்படும்.
➤விவசாயிகளையும் மற்றும்நுகர்வோரையும் நெல் மற்றும் அரிசி மாஃபியாவிலிருந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.
➤விவசாயிக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படாது.நாம் ஒரு கிலோகிராம் உலர்ந்த நாடு நெல்லை 50ரூபா விலையிலும் மற்றும் ஒரு கிலோ கிராம் உலர்ந்த சம்பா நெல்லை 52ரூபா விலையிலும் கொள்வனவு செய்வோம்.
➤உரத்தையும், நீரையும், விவசாய காப்புறுதியையும் மற்றும் தொழில் நுட்பத்தையும் அரசாங்கம் இலவசமாக வழங்கினால், நிலவும் சந்தை விலையில் 1000 கிலோ நெல்லை அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைக்கு விநியோகிப்பது விவசாயிகளின் கடமையாகும்.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ஆகியோரின் பங்களிப்புடன் ஒரு விஷேட ஊடக சந்திப்பு இன்று கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய நெல் கொள்வனவு திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செய்த பிரச்சாரம் முற்றிலும் தவறானது மற்றும் அவர் செய்த செயல் சீர்குலைக்கும் ஒரு செயல் என அமைச்சர்கள் சுட்டிக் காட்டினார்கள். நெல் கொள்வனவு என்ற போலி வேடத்தில்அரசாங்கம்உர மானியத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்குதெரிவித்திருந்தார். கடந்த அரசாங்கத்தின் போது ஒரு கிலோ நெல்லின் விலை 32 ரூபாவாக இருந்த நேரத்தில் சஜித் பிரேமதாச அவர்களின் அரசாங்கத்தில் அவர் இருக்கவில்லையா என அமைச்சர்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினர்கள். நாட்டிற்கு மிக முக்கியமான ஒரு தேசிய வேலைத் திட்டத்தை அரசியல்மயமாக்குவதன் மூலமும், நெல் மற்றும் அரிசி மாஃபியாவுக்கு மறைமுகமாக உதவி செய்வதன் மூலமும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அமைச்சர்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இந்த ஆண்டு தேசிய நெல் கொள்வனவு திட்டத்திற்கு அரசாங்கம் 23,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. வரலாற்றில் இதுவரை இதுவே ஒதுக்கப்பட்டுள்ள மிகவும் உயர்ந்த தொகையாகும். நெல் சந்தைப்படுத்தல் சபை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அந்த பணத்தைக் கொண்டு நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் மாவட்டங்களில் ஏற்கெனவே இந்தக் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. ஆதலால், அரசாங்கத்தின் இந்தத் தேசிய நெல் கொள்வனவு வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிக்காத விவசாயிகள் அடுத்த பயிர்ச் செய்கை போகத்தில்4,000 ரூபா சந்தை விலையில் 50 கிலோ உர உறையைகொள்வனவு செய்ய வேண்டி ஏற்படும், மேலும் விவசாய காப்புறுதியையும் இழக்க நேரிடும். அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இணங்கவே இந்தத் தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இங்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கூறுகையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு கிலோ கிராம் உலர்ந்த நெல்லுக்கு 50 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவதாகவும் மற்றும் 97 ரூபா உத்தரவாத விலையில் அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதாகவும் நாம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தோம். அதன்படி, அந்தத் திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.எதிர்வரும் புத்தாண்டுக்கு 97 ரூபாஉத்தரவாத விலையில் நுகர்வோருக்கு நாம் அரிசியை வழங்குவோம். அரசாங்கத்தால் உர மானியம் வழங்கப்படும் விவசாயிகளை இந்த நோக்கத்திற்காக நாம் ஈடுபடுத்துகின்றோம்.அரசாங்கத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் பிரகாரம் ஒரு ஹெக்டேருக்கு 1000 கிலோ நெல் வழங்குமாறு விவசாயிகளிடம் நாம் கோரியுள்ளோம். உர மானியம் குறைக்கப்பட்டால், விவசாயிகளுடன் சேர்ந்து வீதிகளில் இறங்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்திருந்தார்.அவரது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது ஒரு கிலோ நெல் 32 ரூபா விலையில் கொள்வனவு செய்யப்பட்டது. அப்போது சஜித் பிரேமதாச எங்கே இருந்தார்? ஒரு கிலோ கிராம் உலர்ந்த நாட்டு நெல்லை நாம் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்தோம். அதே போல் ஒரு கிலோ கிராம் உலர்ந்த சம்பா நெல்லை 52 ரூபாவுக்கு கொள்வனவு செய்தோம். தற்பொழுது விவசாயிக்கு நல்ல விலை கிடைத்துள்ளது.உரம், நீர், விவசாய காப்புறுதி, இவை அனைத்தையும் நாம் விவசாயிக்கு இலவசமாக வழங்குகிறோம். நாம் இலவசமாக வழங்கும் ஒரு உர உறையின் விலை4,000 ரூபாவாகும். அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யாத விவசாயிகள் உரத்தை 4,000 ரூபாசந்தை விலையில் வாங்க வேண்டியிருக்கும். விவசாயிக்கு நெல்லுக்காக நாம் மிகவும் நியாயமான விலையை நிர்ணயித்துள்ளோம். ஈரமான நெல்லும் கொள்வனவு செய்யப்படுகின்றது. உர மானியம் குறைக்கப்படும் என்று நாம் கூறவில்லை. ஆனால் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கா விட்டால், உரங்களை விவசாயிகள்பணம் கொடுத்து சந்தையில் கொள்வனவு வேண்டியிருக்கும் என்றேயொழிய உர மானியம் குறைக்கப்படும் என நாம் கூறவில்லை. இந்த பிரேமதாச நெல் மற்றும் அரிசி மாஃபியாவுக்கு உதவுவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறார். எனவே இந்த நாட்டு விவசாயிகளை அதையிட்டு ஏமாற வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்”.
இங்கு கருத்து தெரிவித்த கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, “நாட்டில் நெல் உற்பத்தி 30 இலட்சம் மெட்ரிக் டொன் மட்டுமே என்பதை நாம் தெளிவாகக் கூற வேண்டும். நாம்3 இலட்சம் மட்டுமே கொள்வனவு செய்கின்றோம். இது நாட்டின்மொத்த அறுவடையில் 10%வீதமாகும். பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்களும் மற்றும் பங்குதாரர்களும்30% வீத நெல்லைமட்டுமே கொள்வனவு செய்கின்றார்கள். இரண்டுமே இல்லாமல், விதை நெல்லுக்காகவும் மற்றும் நுகர்வுக்காகவும்விவசாயிகளுக்கு60%வீத நெல் மீதமாகுகின்றது. எனவே, இந்தத் தேசிய திட்டத்தை நாம் எந்தவித பிரச்சினையுமின்றி செயற்படுத்துகிறோம். ஆகையால், இந்த நெல் கொள்வனவு செயல்முறையை சீர்குலைக்க ஒரு சூழ்சியை செய்ய எதிர்க்கட்சி முயற்சித்து வருகின்றது. அரசாங்க திட்டத்திற்கு இணங்க நெல்லுக்கு உத்தரவாத விலை பெற்றுக் கொடுக்கப்படும். எந்தவொரு முறைகேடும் நிகழ நாம் அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர் செய்வதெல்லாம் மக்களை தவறாக வழிநடத்துவதுதான் என்பதை நாட்டு மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும்”.