English (UK)SinhalaSriLankaTamilIndia


"பில்லியன் ரூபா தொகையான பொது மக்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இடைத்தரகு மாஃபியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதை அனுமதிக்க முடியாது"

0-(2)

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

v"விவசாயிகளுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது எமது குறிக்கோளாகும்"

vசகல பொருளாதார மத்திய நிலையங்களும் ஒரே அறக்கட்டளையின் கீழ் கொண்டுவரப்படும்

vபொருளாதார மத்திய நிலையங்களில் கமக்காரர் அமைப்புகளுக்கு கடைகள் பெற்றுக் கொடுக்கப்படும் .... விவசாயிகளின் உற்பத்திகள் பொருளாதார மத்தியநிலையங்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

vபொருளாதார மத்திய நிலையங்களின் அனைத்துப் பொறுப்புகளும் முகாமையாளர்களுக்குரியதாகும் .... உதவிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்...

 

விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாய விலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நுகர்வோருக்கு நியாய விலைகளில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை முறையாக மேற்கொள்வது பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் 2021.02.11ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தலைமையில் கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

 

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஒரு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு இருக்கின்ற கடமையும் பொறுப்பும் தான் மக்களுக்கு நியாய விலைகளில் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது. இது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். ஒரு நாளாவது பொருட்களின் விலைகள் அதிகரித்தால் குறைகூறப்படுவது அரசாங்கத்திற்குத்தான். ஆகையால், ஒரு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு பொறுப்பு இருக்கின்றது நியாய விலைகளில் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கு. கமத்தொழில் அமைச்சு என்ற வகையில் எமக்கு இருப்பது பயிர்களை வளர்ப்பதுதான். நாம் பொது மக்களுக்கு தேவையான உரிய சகல உணவுப் பயிர்களையும் உற்பத்தி செய்யவும், இறக்குமதியை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதால், நாம் அரசாங்கம் என்ற வகையில் தீர்மானத்தை எடுத்துள்ளோம் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு. அதற்கு அமைய உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்ற 27 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை 03மாத காலத்திற்கு கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்தது. வர்த்தக அமைச்சு, சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கக் கடைகள் முதலியநிறுவனங்களுடன் இணைந்துதான் இந்த விடயத்தை நாம் செய்கின்றோம். அவையெல்லாம் அரசாங்க நிறுவனங்கள். அதே போல் பொருளாதார மத்திய நிலையங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. பொருளாதார மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கு பொது மக்களின் பில்லியன் ரூபா கணக்கான நிதி செலவிடப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையம் என்பது கடைகளைப் பெற்றுக் கொடுத்து, வாடகைகளை சேகரிப்பதற்கு மட்டுமானதல்ல. இது அரச பொறிமுறைத் திட்டத்தின் ஒரு பாகமாகும். பொருளாதார மத்திய நிலையங்களை நிர்மாணித்த நோக்கில் நாம் செயற்படுவது அவசியமில்லை. நுகர்வோருக்கு நியாய விலைகளில் மரக்கறி வகைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு முறையியலை உருவாக்குமாறு எங்களுக்கு எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளார்கள். பொருளாதார மத்திய நிலையங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது விவசாயிகளுக்கு. அப்போதுதான் விவசாயிகள் நியாய விலைகளில் தமது மரக்கறி வகைகளை விநியோகிப்பார்கள். அவ்வாறிருந்தாலும் இன்று இந்தப் பொருளாதார நிலையங்கள் ஒருசில முதலாளிமார்கள் இயக்கும் நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளன. மரக்கறி வகைகள் 4 இடங்களுக்கு சென்றுதான் நுகர்வோருக்கு கிடைக்கின்றன. இடைத்தரகர்கள் அதிகளவில் இருக்கின்றனர். சரியான ஒரு பொறிமுறை இல்லாத பிரச்சினைதான் எமக்கு இருப்பது.

 

“பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையாளர்களின் பொறுப்பு கடைகளின் வாடகைகளை சேகரிப்பது மட்டுமல்ல. எதிர்பார்க்கின்றோம் இலங்கையிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் ஒரே அறக்கட்டளையின் கீழ் கொண்டுவருவதற்கு. சதொச போன்ற நிறுவனங்களை உருவாக்குவதற்கு. இடைத்தரகர்கள் தலையீடு செய்யாத ஒரு முறையை உருவாக்கி விவசாயிகளுக்கும் மற்றும் நுகர்வோருக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாகும். விவசாயிகள் கிராமங்களில் இருந்து கொண்டு தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது என அழுது புலம்புகின்றனர். நுகர்வோர் கூறுகின்றார்கள் பொருட்களின் விலை அதிகம் என்று. இடைத்தரகர்கள் இலாபத்தைப் பெறுகின்றார்கள். இந்த இடைத் தரகர்களுக்கு செல்லும் இலாபத்தை இல்லாது செய்து விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதுதான் எமக்கு தேவை. கமக்காரர் அமைப்புகளுக்கு பொருளாதார நிலையங்களில் கடைகள் பெற்றுக் கொடுக்கப்படும். அப்போது மெனிங் சந்தையில் இருந்து மரக்கறிகளை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. பொருளாதார மையங்களுக்கு மரக்கறிகளை ஏற்றி வருகின்ற லொரிகள் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படும். வெளியிலிருந்து பொருட்களை எடுத்துவர முடியாது. வெளியிலிருந்து பொருட்கள் எடுத்துவரப்பட்டால் இந்த முறையியலை எம்மால் சரியாக செயற்படுத்த முடியாது. கமக்காரர் அமைப்புகளுக்கு முன்கூட்டியே தேவையான பொருள் கட்டளைகளை விடுத்தால் அந்த அமைப்புகள் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்து வந்து விநியோகிக்கும். அந்த அமைப்புகள் கொண்டுவரும் பொருட்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்துவது பொருளாதார மத்திய நிலையங்களினது முகாமையாளர்களின் பொறுப்பாகும். அந்தப் பொருட்களை விற்பனை செய்யும் பொறுப்பும் இந்த முகாமையாளர்களை சாரும். ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவத்திற்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்படுவார். கமக்காரர் அமைப்புகளுக்கு பொருட்கள் சேகரிக்கும் நிலையங்களைப் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். அப்போது விவசாயிகளினால் தமது மரக்கறி வகைகளை தூய்மையாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். இன்னும் 03மாத காலப் பகுதியில், பொருளாதார நிலையங்களில் புதிய ஒரு வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும்எனக் கூறினார்கள்.

 

 

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்களும் இணைந்து கொண்டார்கள். இதன் போது, இராஜாங்க அமைச்சர்அவர்கள் கூறியதாவதுநுகர்வோரை தொகை விற்பனைத் தரப்புகளுடன் நேரடியாக தொடர்புபடுத்துதல், போட்டி விலை நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் அதனைக் கட்டுப்படுத்தல் போன்ற முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன, விவசாயிகள் நுகர்வோருக்கு தமது விவசாய உற்பத்திகளை நியாய விலையில் பெற்றுக் கொடுப்பதன் நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்றாகும். நாரஹேன்பிட்ட, பிலியந்தல, ரத்மலான, வெலிசர என கூறப்படும் கொழும்பு நகரப் பகுதியை அண்மித்த நான்கு பொருளாதார மத்திய நிலையங்களினதும் கடைகள் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது அவர்களால் பயிரிட்டு வளர்க்க முடியாத உற்பத்திகளை நுகர்வோருக்கு நியாய விலைகளில் விற்பனை செய்வார்கள் என்ற நம்பிக்கையில். அப்போதுதான் இந்த முறையியலை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவேற்ற முடியும் என இராஜாங்க அமைச்சர் அவர்கள் இதன் போது மேலும் குறிப்பிட்டார்கள். இந்த நிகழ்வில் பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையாளர்கள், பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

0-(7)   0-(8)

0-(13)  0-(14)

0-(15)

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 12 பிப்ரவரி 2021 09:59

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்