English (UK)SinhalaSriLankaTamilIndia


"உற்பத்தித் பொருளாதாரத்தின் மூலம் வளமான மற்றும் தன்னிறைவு உடைய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கை நோக்கி செயல்படுங்கள்."

image 01 (agri)

கமத்தொழில் அமைச்சர் அவர்கள் விவசாய உத்தியோகத்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

 

vவாத, விவாதங்களைக் கைவிடுங்கள்.

vநிறுவனங்களுக்கு இடையில் ஒற்றுமையுடன் சரியான ஒரு வேலைத் திட்டத்தின் பிரகாரம் வேலை செய்யுங்கள்.

vசரியான புள்ளி விபரங்கள், தரவுகள், தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் வேலை செய்யுங்கள்.

vகுறித்த இலக்கை அடைகின்றீர்களா என தினமும் தேடிப் பாருங்கள்.

vநெல்லைக் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத் திட்டத்திற்கு ஒன்றாக உதவுங்கள்.

vவன விலங்குகளினால் ஏற்படும் அழிவுகளுக்கும் மற்றும் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் போது நிகழும் பாதிப்புகளுக்கும் வெற்றிகரமான செயன்முறை ரீதியான ஒரு தீர்வு பற்றி சிந்தியுங்கள். அத்தகைய தீர்வை செயன்முறையாக பரிட்சித்துப் பாருங்கள்.

vவிவசாயிகளைப் பற்றி சிந்தியுங்கள். விவசாய நிலக்ளுக்குச் சென்று பாருங்கள். பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள். உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிகளைக் குறைத்து நெருக்கமாக பணி புரியுங்கள்.

 

கமத் தொழில் அமைச்சினதும் மற்றும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களினதும் மாதாந்த முன்னேற்றம் பற்றிய மீளாய்வுக் கூட்டம் கமத்தொழில் அமை்சசர் மஹிந்தானந்த அளுத்கம அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாயத்துடன் இணைந்த 10 பிரதான நிறுவனங்களின் 2021ஆம் ஆண்டு நிமித்தம் செயற்படுத்திய வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் மொஹான் த சில்வா, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் முதலாவது புதன்கிழமை மாதாந்த மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது. விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், நெல் சந்தைப்படுத்தல் சபை, தேசிய அறுவடைக்குப் பின்- தொழில் நுட்ப முகாமைத்துவ நிறுவகம்,தேசிய உர செயலக அலுவலகம், ஹெக்டெர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம், சிறு தோட்ட உரிமையாளர்களின் விவசாயப் பங்காளித்துவ நிகழ்ச்சித் திட்டம் (SAPP),விவசாயப் பிரிவு நவீனப்படுத்தல் கருத் திட்டம், காலநிலை நேய நீர்ப்பாசனக் கருத் திட்டம், பொருளாதார மத்திய நிலையங்கள் என்பன போன்ற நிறுவனங்களின் முன்னேற்றம் பற்றி இதன் போது ஆராயப்பட்டது.

16வகைப்பயிர்களில் இருந்து சுய தேவைப் பூர்த்தி எனும் தேசிய கரும பணிக்கு முன்னுரிமை அளித்து அதன் நிமித்தம் வினைத் திறன் வாய்ந்ததாக செயல்படுமாறு இந்தக் கூட்டத்தின் போது விவசாயத் திணைக்களத்திற்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம்போன்ற உணவுப் பொருட்களுக்காக செலவாகும் அதிகளவான அந்நியச்செலாவணியை நாட்டிற்கு சேமித்து விவசாயிகளையும் மற்றும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு சகல நிறுவனங்களுடனும் ஒன்றாக ஒருங்கிணைந்து தொழிற்படுதல் வேண்டும் என அமைச்சர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள். நாட்டிற்கு தேவையான உருளைக்கிழங்கு விதை, மிளகாய் விதை, உற்பத்திகள் என்பவற்றின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை செயன்முறையாகவும் மற்றும் எதிர்பார்த்த இலக்குகளை அடையக் கூடியதாகவும் செயற்படுத்த வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இந்த நாட்டிற்கு தேவையான வெங்காயத்தின் அளவில்22%வீதம் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. எஞ்சிய அளவு இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த இறக்குமதியின் நிமித்தம் வருடாந்தம் 12-15பில்லியன் ரூபா வரையான நிதி செலாவாகுகின்றது. ஆகையால், 2021ஆம் ஆண்டில் 35%வீதத்தாலும், 2022ஆம் ஆண்டில் 45%வீதத்தாலும், 2023ஆம் ஆண்டில் 60%வீதத்தாலும் படிப்படியாக வெங்காயத்தின் உற்பத்தியை அதிகரிக்க இலக்குக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக சரியான புள்ளி விபரங்கள், சரியான தரவுகள், சரியான தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் சகல நிறுவனங்களையும் செயற்படுத்தும் தேவை பற்றி அமைச்சர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள். கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும்வெளிநாட்டு நிதி உதவிக் கருத் திட்டங்களில் இருந்து சரியான முறையில் பயனடைந்து ஒரு உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இந்தப் பயணத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய சகல உதவிகளையும் வினைத் திறன் வாய்ந்த ரீதியில் பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்கள்.

உற்பத்திகளை எடுத்துச் செல்வதாலும் மற்றும் வன விலங்குகளாலும் ஏற்படுகின்ற அழிவுகளையும் மற்றும் பாதிப்புகளையும் தவிர்த்துக் கொள்வதற்கு சரியான ஒரு திட்டத்தை விரைவில் செயற்படுத்துமாறு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு வரலற்றில் அதிகளவான நிதி இந்த முறைதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு நெல்லைக் கொள்வனவு செய்யும் தேசிய கரும பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு சகல உதவிகளையும் சகல நிறுவனங்களும் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் இதன் போது வலியுறுத்தினார்கள். உரங்களைப் பகிர்ந்தளிக்கும் ஒரு திட்டம், ஒரு இயற்கை உரங்கள் உற்பத்தி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம் முதலிய திட்டங்களையும் மற்றும் மண்ணைப் பரிசோதித்து உரங்களை பகிர்ந்தளிக்க தேவையான நடவடிக்கைகளையும் விவசாயிகளுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மற்றும் உரிய நேர காலத்திற்கு விவசாய நிலங்களுக்கு உரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள்.

சகல நிறுவனங்களும் தற்பொழு செயற்படுத்தப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களின் போது விடயங்களை சமர்ப்பிக்கவும் மற்றும் இந்த வேலைத் திட்டத்தை செயன்முறையாக இந்த நாட்டில் வெற்றிகரமானதாக முன்னெடுக்கவும் வேண்டும் என அமைச்சர் அவர்கள் இதன் போது வலியுறுத்தினார்கள். 

 

 image 02 (agri)  image 03 (agri)

image 04 (agri)


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 09 பிப்ரவரி 2021 04:46

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்